ரூம் போட்டு யோசிப்பாங்களோ? ரயலில் இருந்து ஏவுகணை சோதனை செய்த வடகொரியா?

|

வடகொரியா உலக அமைப்புகளின் தடைகளை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. அதன்படி கடந்த புதன்கிழமை அன்று திட்டமிட்ட இலக்கை மிகவும் துல்லியமாக தாக்கும் ஒரு ஏவுகணையை சோதனை செய்துள்ளது. மேலும் இது சார்ந்த தகவலை
சற்று விரிவாகப் பார்ப்போம்.

 கடந்த புதன்கிழமை (15-09-2021) அன்று

அதாவது கடந்த புதன்கிழமை (15-09-2021) அன்று திட்டமிட்ட இலக்கை மிகவும் துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையிலான க்ரூஸ் ஏவுகணையை சோதனை செய்து வெற்றி கண்டுள்ளது வடகொரியா. மேலும் இந்த ஏவுகணை சோதனை கொரிய தீபகற்ப நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ர்வதேச அமைப்புகளின்

அதேபோல் சர்வதேச அமைப்புகளின் எச்சரிக்கைகளையும் மீறி வடகொரியா மேற்கொண்டு வரும் இந்த ஏவுகணை சோதனையால் உலக அரசியல் பரபரப்பு நீடித்து வருகிறது. அதுவும் தற்போது பரிசோதனை செய்த இந்த ஏவுகணை ஆனது ரயலிலிருந்து புறப்பட்டு திட்டமிட்ட இலக்கை தாக்கி அழிக்கும் வகையிலான ஏவுகணை என வடகொரிய தெரிவித்துள்ளது.

இறப்பதற்கு முன்பே கணித்த ஸ்டீபன் ஹாக்கிங்: 47 ஆண்டுக்குப் பிறகு நிரூபிக்கப்பட்ட கருந்துளை ரகசியம்.! உண்மையா?இறப்பதற்கு முன்பே கணித்த ஸ்டீபன் ஹாக்கிங்: 47 ஆண்டுக்குப் பிறகு நிரூபிக்கப்பட்ட கருந்துளை ரகசியம்.! உண்மையா?

, இந்த ஏவுகணை சுமார்

வெளிவந்த தகவலின்படி, இந்த ஏவுகணை சுமார் 800 கிலோ மீட்டர் தொலைவுக்கு பாயந்து வடகொரியாவின் கிழக்கு கடற் பகுதியில் இருந்த இலக்கை தாக்கியதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்த தொலைவை ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை ஆனது சில நிமிடங்களில் கடந்து விடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி சிறுவர்கள் வங்கி கணக்கில் தெரியாமல் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.960 கோடி.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?பள்ளி சிறுவர்கள் வங்கி கணக்கில் தெரியாமல் டெபாசிட் செய்யப்பட்ட ரூ.960 கோடி.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

யாங்டோக்கின் மத்திய பகுதியில் இருந்

மேலும் வடகொரிய யாங்டோக்கின் மத்திய பகுதியில் இருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டிருப்பதாக தென் கொரியா தகவல் தெரிவித்துள்ளது. இப்போது ஏவுகணை தீப்பிழம்புகளை வெளிவிட்டவாறு செல்லும் புகைபப்படம் இணையதளததில் அதிக வைரலாகியுள்ளது. அதேபோல்

பூமியில் சூரியன் மறையாத 6 இடங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? உண்மைதான் இங்கெல்லாம் சூரியன் மறையாது..பூமியில் சூரியன் மறையாத 6 இடங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா? உண்மைதான் இங்கெல்லாம் சூரியன் மறையாது..

க்ரூஸ் ரக ஏவுகணைகள்

கடந்த ஜனவரி மாதம் க்ரூஸ் ரக ஏவுகணைகள் உருவாக்கப்பட்டு வருவதாக அதிபர் கிம் ஜோங் உன் அறிவித்திருந்தார். வருங்காலத்தில்அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் பணியை இவை செய்யும் என்றும் அவர் கூறியிருந்தார்.

ஜியோ டுவிஸ்ட்- அதை எடுத்துட்டு இதை கொடுத்தாங்க பாருங்க- தினசரி டேட்டா, வரம்பற்ற அழைப்புகளுடன் புதிய திட்டம்!ஜியோ டுவிஸ்ட்- அதை எடுத்துட்டு இதை கொடுத்தாங்க பாருங்க- தினசரி டேட்டா, வரம்பற்ற அழைப்புகளுடன் புதிய திட்டம்!

வடகொரியா எதிர்கொண்டு வரும்

ஆனாலும் வடகொரியா எதிர்கொண்டு வரும் பொருளாதர, உணவுச் சாவல்களை எதிர்த்து போராடுவது கிம் ஜாங் உன் வெளிப்படையாக கூறி வந்தாலும், அணு ஆயுதத் திறன்களை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருக்கிறார் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

Xiaomi 11T மற்றும் Xiaomi 11T Pro போன்களின் அறிமுகத்தை லைவ் பார்ப்பது எப்படி? இது வீடியோ லிங்க் உள்ளே..Xiaomi 11T மற்றும் Xiaomi 11T Pro போன்களின் அறிமுகத்தை லைவ் பார்ப்பது எப்படி? இது வீடியோ லிங்க் உள்ளே..

கடந்த 2019-ம் ஆண்டு அப்போது இருந்த

குறிப்பாக கடந்த 2019-ம் ஆண்டு அப்போது இருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புடன் வியட்நாமின் ஹனோய் நகரில்
நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த பிறகு, வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் தொடர்ச்சியாக அணு சக்தி திட்டங்களில் தீவிரமாக முதலீடு செய்து பாதுகாப்பு உத்திகளில் தன்னிறைவு பெறுவதில் உறுதியாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுதான் ஃபர்ஸ்ட்- 1 டிபி சேமிப்பு, திரைப்பட தர கேமரா பதிவுடன் ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் அறிமுகம்!இதுதான் ஃபர்ஸ்ட்- 1 டிபி சேமிப்பு, திரைப்பட தர கேமரா பதிவுடன் ஐபோன் 13 ப்ரோ, ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் அறிமுகம்!

ஆயுதத் திறன்களை தரம்

சுருக்கமாக கூறவேண்டும் என்றால் வடகொரியா அதன் அணு ஆயுதத் திறன்களை தரம் மிக்கதாகவும் அதே சமயம் எண்ணிக்கையில் அதிகரிக்கும் வகையிலான ஒரு பாதையில் பயணித்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
North Korea tests new missile launcher from train: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X