இலக்கு 1500 கிமீ தூரத்துக்கு அந்த பக்கம்: சரியா குறிவைத்து தட்டி தூக்கிய வடகொரிய ஏவுகணை- சோதனை வெற்றி!

|

அணுசக்தி திறன் கொண்ட முதல் "மூலோபாய" க்ரூஸ் ஏவுகணையை வடகொரியா சோதித்துள்ளது. வடகொரியாவின் அண்டை மற்றும் பகை நாடுகளுக்கு அச்சுறுத்தலை முன்னிலைப்படுத்தும் வகையில் இது உள்ளதாக கூறப்படுகிறது.

கேசிஎன்ஏ செய்தி தகவல்

கேசிஎன்ஏ செய்தி தகவல்

இந்த தகவல் குறித்து அந்த நாட்டின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான கேசிஎன்ஏ செய்தி வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பிட்டுள்ள தகவல்களை பார்க்கலாம், வடகொரியா வார இறுதியில் புதிய நீண்ட தூர இலக்கு ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. அணுசக்தி திறன் கொண்ட நாட்டின் முதல் ஆயுதமாக ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது.

மூலோபாய ஆயுதமாக பார்க்கப்பட காரணம்

மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மூலோபாய ஆயுதமாக பார்க்கப்பட காரணம் இது 930 மைல்கள் அதாகவு 1500 கிலோ மீட்டர் உள்ள இலக்குகளை சரியாக குறிவைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. அவற்றின் இலக்குகளை தாக்கி நாட்டின் பிராந்திய பகுதியில் உள்ள நீரில் விழுந்ததாக கூறப்படுகிறது. நாட்டின் ஆயுத திட்டத்தில் நிலையான முன்னேற்றத்தை இது எடுத்துக்காட்டுவதாக கூறப்படுகிறது. இந்த ஏவுகணை சோதனை நாட்டின் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

நம்பகத்தன்மையுடன் உத்தரவாதம்

நம்பகத்தன்மையுடன் உத்தரவாதம்

வடகொரியாவில் மூலோபாய பாத்திரத்தை வெளிப்படையாகக் தெரிவிக்கும் முதல் ஏவுகணை இதுவாகும் என அமெரிக்காவை சேர்ந்த சர்வதேச அமைத்திக்கான காரன்கி எண்டோவ்மெண்ட் மூத்த உறுப்பினர் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும் கேசிஎன்ஏ-வில் குறிப்பிட்டுள்ள தகவலை பார்க்கையில், நமது நாட்டின் பாதுகாப்பை மிகவும் நம்பகத்தன்மையுடன் உத்தரவாதம் செய்வதாகும், எதிரி படைகளின் ராணுவ சூழ்ச்சிகளை வலுவாக எதிர்க்கும் தன்மை கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஆயுத சோதனை என்பது புதிதல்ல

வடகொரியாவுக்கு ஆயுத சோதனை என்பது புதிதல்ல. உலகமே கொரோனா வைரஸை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் ஸ்தம்பித்துப் போதே யாரும் எதிர்பார்க்காத செயலை வட கொரியா செய்தது. அப்போடு இரண்டு ஏவுகணைகளை கடலுக்குள் ஏவி சோதனை செய்தது. ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகளும் கொரியாவின் சோஞ்சோன் மாவட்டத்தைச் சேர்ந்த கிழக்கு கடற்கரையிலிருந்து வட பியோங்கன் மாகாணத்தில் இருக்கும் கடலுக்குள் காலை 6:45 முதல் 06:50 மணியளவில் இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டது.

புதிய நீண்ட தூர ஏவுகணை

புதிய நீண்ட தூர ஏவுகணை

வடகொரியா புதிய நீண்ட தூர ஏவுகணையை சோதனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த செயலான பகை நாடுகளை எச்சரிக்கும் வகையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய நீண்ட தூர ஏவுகணையை வடகொரியா சோதித்து பெரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது. ஏவுகணையில் இருந்த ஐந்து குழாய்களில் இருந்து ஒன்றில் வெளியேறுவதை ரோடாங் சின்முன் செய்தித்தாளில் உள்ள படங்களில் காட்டப்பட்டது.

ஆயுத தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்

ஆயுத தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம்

அதேபோல் இத்தகைய ஆயுதம் ஆனது வடகொரியாவின் ஆயுத தொழில்நுட்பத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிபலிப்பதாக ஆய்வாளர்கள் கூறினர். அதேபோல் சோதனை துவக்கங்களானது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றதாக கொரிய அதிகாரப்பூர்வ மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏவுகணைகள் சுமார் 930 மைல்கள் அதாவது 1500 கிலோமீட்டர் இலக்குகளை குறிவைத்து சரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இது ஆயுத முன்னேற்றத்தில் பல மடங்கு அதிகரித்ததாகவே கூறப்படுகிறது.

அதிக சோதனைகள் இருக்க வாய்ப்பிருப்புள்ளது

அதிக சோதனைகள் இருக்க வாய்ப்பிருப்புள்ளது

இதுகுறித்து ஈவா வுமன்ஸ் பல்கலைக்கழகத்தின் வடகொரிய ஆய்வின் பேராசிரியர் பார்க் வான்-கோன், ஏஎஃப்பி-விடம் கூறுகையில், இது கணிசமான அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக தெரிவித்தார். அதேபோல் பல்வேறு ஆயுத அமைப்புகளின் வளர்ச்சிக்கு அதிக சோதனைகள் இருக்க வாய்ப்பிருப்பதாகவும் குறிப்பிட்டார். இந்த சோதனையானது கடந்த மாதம் தென்கொரியா - அமெரிக்க ராணுவ கூட்டுப் பயிற்சிக்கு பதிலடியாக இருந்ததாக கூறப்படுகிறது. வடகொரியா நாட்டில் தொடர்ந்து இராணுவ திட்டத்தை வளர்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. அண்டை நாடுகளுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் ஏற்படும் அச்சுறுத்தல்களை இது வளர்ப்பதாக அறிக்கைகள் கூறுகின்றன.

File Images

Source: @KCNA/@Reuters

Best Mobiles in India

English summary
North Korea Tests New 1500 Km Range Cruise Missile

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X