'கை ஓங்கும்' வடகொரியா, ஒன்று கூடுமா அமெரிக்கா, ரஷ்யா, சீனா..!

|

வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்கள் அனைத்துமே சர்வதேச சமூகத்தின் கரிசனையில் தான் நடந்து கொண்டிருகிறது என்பது ஒருபக்கம் இருக்க, மறுபக்கம் வடகொரியாவின் ஆணு ஆயுத பரிசோதனைகள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள் சார்ந்த அறியிவல்-தொழில்நுட்ப விடயங்களில் விபரீதமான வளர்ச்சி நிலையை நோக்கி போய் கொண்டிருக்கிறது.

அப்போது வடகொரியாவிடம் அணு ஆயுதம் இருக்கிறதா என்று கேள்வி கேட்டால், அறிவியல்-தொழில்நுட்ப அடிப்படையில் "ஆம்" என்பது தான் பதில், அதற்காக ஏவுகணை மூலம் அது செலுத்தப்பட இருக்கிறது என்று அர்த்தம் கொள்ளக்கூடாது..!

அதிகாரப்பூர்வம் :

அதிகாரப்பூர்வம் :

வடகொரியாவானது 2006, 2009, 2013 மற்றும் 2016 -ஆம் ஆண்டில் நான்கு வெற்றிகரமான அணு ஆயுத சோதனைகளை நடத்தி உள்ளது என்பது அதிகாரப்பூர்வமான தகவலாகும்.

புளூட்டோனியம் :

புளூட்டோனியம் :

முதல் இரண்டு அணு பரிசோதனைகள் புளூட்டோனியத்தை பயன்படுத்தி நிகழ்த்தப்பட்டுள்ளன என்றும், பின்பு நடத்தப்பட்ட சோதனையானது புளூட்டோனியம் அல்லது யுரேனியம் பயன்படுத்தப்பட்டு நிகழ்த்தப்பட்டுள்ளது என்கின்றனர் அணு ஆராய்ச்சியாளர்கள்..!

ஹைட்ரஜன் வெடிகுண்டு :

ஹைட்ரஜன் வெடிகுண்டு :

அதிலும் குறிப்பாக இறுதியாக நடத்தப்பட்ட சோதனையானது ஒரு ஹைட்ரஜன் வெடிகுண்டு பரிசோதனை என்பது குறிப்பிடத்தக்கது, அதில் பயன்படுத்தப்பட்டவைகள்
என்னென்ன என்பது பற்றிய விளக்கத்தை பிற நாடுகளால் கண்டறிய முடியவில்லை.

மர்மமான செயற்கைகோள் :

மர்மமான செயற்கைகோள் :

மிகவும் பெரிய அளவிலான ஆற்றலை கட்டவிழ்த்துவிடும் எச்-பாம்ப் பரிசோதனை நிகழ்த்திய கையேடு மர்மமான செயற்கைகோள் ஒன்றையும் வடகொரியா விண்ணில் செலுத்தியது.

ஏவுகணைத் தொழில்நுட்பம் :

ஏவுகணைத் தொழில்நுட்பம் :

அந்த செயற்கைக்கோள் ஆனது ஒரு நீண்ட தூர ஏவுகணைத் தொழில்நுட்பம் (long-range missile technology) சார்ந்த ஏவுதல் என்று அமெரிக்கா மற்றும் வடகொரியாவின் அண்டை நாடுகள் முழுக்க எதிர்ப்பு கிளம்பியது.

சந்தேகம் :

சந்தேகம் :

வடகொரியா தனது முழு அணு சக்தி வசதிகளையும் அது சார்ந்த வளர்சிகளையும் வெளிப்படுத்தாமல் இருக்கிறது என்றும் அதனிடம் செறிவூட்டப்பட்ட யுரேனிய வசதி அதிகம் உள்ளது என்றும் அமேரிக்கா சந்தேகிக்கிறது.

கேள்வி :

கேள்வி :

இப்படியாக உலக நாடுகளுக்கு மத்தியில் கை ஓங்கி கொண்டே போகும் வடகொரியாவிற்கு எதிராக பிற சூப்பர் பவர் நாடுகள் கூட்டணி ஒன்றை அமைக்குமா..? என்ற கேள்வி அனுதினமும் வலுத்துக் கொண்டே போகிறது.

பின்னடைவு :

பின்னடைவு :

அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் வடகொரியாவை கட்டுபடுத்த அதனுடன் பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் வடகொரியாவின் விபரீதமான வளர்சிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டது போல் தெரியவில்லை..!

உலகளாவிய கண்டனம் :

உலகளாவிய கண்டனம் :

2013-ஆம் ஆண்டுக்கு பின்பு வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளுக்கு, ஐநா ஏகப்பட்ட தடைகளை விதித்திருக்கும் போதும் 'எதையும் மதிக்காது என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறதோ அதை செய்து' வடகொரியா தற்போது வரையிலாக உலகளாவிய கண்டனத்தை பெற்றுக்கொண்டே தான் இருக்கிறது.

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

போர்வெறியில் வடகொரியா : "அமெரிக்காவை காலி செய்ய ஒரு எச்-பாம் போதும்..!"


இந்திரா காந்தி தலைமையில் நிகழ்த்தப்பட்ட 'ஸ்மைலிங் புத்தா'..!

தமிழ் கிஸ்பாட் :

தமிழ் கிஸ்பாட் :

மேலும் இதுபோன்ற அறிவியல் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!

Best Mobiles in India

English summary
North Korea's nuclear programme: How advanced it is..? Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X