கொரோனா பீதிக்கு மத்தியில் ஏவுகணை பீதியை கிளப்பிவிட்ட வடகொரியா! இதில் பீரங்கி போட்டி வேற!

|

உலகமே கொரோனா வைரஸை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று தெரியாமல் ஸ்தம்பித்துப் பொய் இருக்கும் இந்த நிலையில், வட கொரியா யாரும் எதிர்பார்த்திடாத ஒரு செயலை செய்துள்ளது. வடகொரியா இன்று அதிகாலை இரண்டு ஏவுகணைகளைக் கடலுக்குள் ஏவி சோதனை செய்துள்ளது. இதனால் தென்கொரிய செம கடுப்பில், வடகொரியா செய்யும் செயல்கள் மிகவும் பொருத்தமற்றது என்று கூறியுள்ளது.

காலை 6:45-க்கு ஏவப்பட்ட ஏவுகணைகள்

காலை 6:45-க்கு ஏவப்பட்ட ஏவுகணைகள்

ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகளும் கொரியாவின் சோஞ்சோன் மாவட்டத்தைச் சேர்ந்த கிழக்கு கடற்கரையிலிருந்து வட பியோங்கன் மாகாணத்தில் இருக்கும் கடலுக்குள் காலை 6:45 முதல் 06:50 மணியளவில் இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளது என்று தென் கொரியாவின் கூட்டுத் தலைவர்கள் (JCS) தெரிவித்துள்ளது.

கொரோனாவிற்கு மத்தியில் இது தேவையா?

கொரோனாவிற்கு மத்தியில் இது தேவையா?

COVID-19 உலகளவில் சிரமங்களை ஏற்படுத்தும் நேரத்தில் கூட, வட கொரியாவின் இத்தகைய இராணுவ நடவடிக்கை மிகவும் பொருத்தமற்றது மற்றும் அர்த்தமற்றது என்று JCS கூறியுள்ளது. அதேபோல், இந்த தேவையில்லாத ஏவுகணை சோதனைகளை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

அடடா., பிளிப்கார்ட் அதிரடி: ரூ.55,000 போன் வெறும் ரூ.17,000 மட்டுமே., இன்னும் பல!அடடா., பிளிப்கார்ட் அதிரடி: ரூ.55,000 போன் வெறும் ரூ.17,000 மட்டுமே., இன்னும் பல!

இராணுவ திறன்களை விரிவுபடுத்தும் வடகொரியா

இராணுவ திறன்களை விரிவுபடுத்தும் வடகொரியா

தென் கொரியா இராணுவம், டிரம்ப் நிர்வாகத்துடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகள் மற்றும் முடங்கிப்போன உலக சுகாதார நெருக்கடிக்கு மத்தியிலும், வடகொரியா தன் இராணுவ திறன்களை விரிவுபடுத்தி வருகிறது. தென் கொரியாவும் அமெரிக்காவும் இந்த நடவடிக்கையை ஆய்வு செய்து வருவதாகக் கூறியுள்ளது.

பீரங்கித் துப்பாக்கி சுடும் போட்டி

பீரங்கித் துப்பாக்கி சுடும் போட்டி

நேற்று நாட்டின் இராணுவப் பிரிவுகளுக்கு இடையில் பீரங்கித் துப்பாக்கி சுடும் போட்டியை கிம் மேற்பார்வையிட்டதாக வட கொரியாவின் அரசு ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. போர் தயார்நிலையை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்ட பயிற்சியில் கிம் திருப்தி தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

Vodafone-Idea நிறுவனம் மூடப்படுகிறதா? காரணம் என்ன தெரியுமா?Vodafone-Idea நிறுவனம் மூடப்படுகிறதா? காரணம் என்ன தெரியுமா?

வலிமையின் ஒரு காட்சி

வலிமையின் ஒரு காட்சி

இந்த செய்தி வெளியிட்ட சிறிது நேரத்திலேயே தென் கொரியாவின் சமீபத்திய இராணுவ தளங்கள் எச்சரிக்கப்பட்டுள்ளது. வட கொரியா நாட்டின் மிக முக்கியமான உயர்மட்ட அதிகாரிகளில் 700 பேரை ஒரே இடத்தில் சேகரிக்கும் ஒரு நிகழ்வாக கிம் மேற்பார்வையிட நிகழ்வு இருந்தது என்றும், இது கொரோனா வைரஸ் வெடிப்புக்கு மத்தியில் இது வலிமையின் ஒரு காட்சி என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Best Mobiles in India

English summary
North Korea's Missile Fire During Coronavirus Causing Is Inapproriate Said South Korea : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X