கிம் ஜாங்-உன் இன் சட்டவிரோத வாழ்க்கை அம்பலம்! அடிமைகளின் கோட்டையாக இருக்கும் 'ஆபீஸ் 39'.!
ஓய்வுபெற்ற அமெரிக்க ராணுவ சிறப்புப் படை கர்னல் வெளியிட்டுள்ள திடுக்கிடும் தகவலின்படி, வட கொரியா நிபுணரும் வட கொரிய அதிபருமான கிம் ஜாங்-உன் நாட்டின் தலைநகரில் உள்ள ஒரு அரசு கட்டிடத்தைச் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தி வருவதாகத் தெரிய வந்துள்ளது.

ஆபீஸ் 39 அமைப்பின் ரகசியம் அம்பலமானது
ஓய்வுபெற்ற அமெரிக்க இராணுவ சிறப்புப் படைகளின் கர்னல் டேவிட் மேக்ஸ்வெல் கூறுகையில், வட கொரியத் தலைவரின் பகட்டான செலவுகள் அனைத்தும் 'ஆபீஸ் 39' என்ற சட்டவிரோத செயல்களின் அமைப்பு நடவடிக்கைகளின் மூலம் கிடைக்கும் வருவாயிலிருந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். கிம் ஜாங் உன் இன் ஆடம்பர செலவுகள் அனைத்தும் ஆபீஸ் 39 மூலம் வருகிறது என்ற உண்மை தற்பொழுது அம்பலமாகியுள்ளது.

ஜாங்-உன் இன் ஆடம்பர வாழ்கை
குறிப்பாக கிம் ஜாங்-உன் இன் தனது ஆடம்பர வாழ்கையில் பயன்படுத்தும் பல பொருட்களின் செலவுகள் அனைத்தும் இந்த அமைப்பு மூலமே கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. இதில் கிம் ஜாங்-உன் பயன்படுத்தும் விலையுயர்ந்த காக்னாக்ஸ் என்ற மதுபானம், மெர்சிடிஸ் கார் மற்றும் ரோலக்ஸ் வாட்ச் போன்ற விலை உயர்ந்த பொருட்களுக்குப் பணம் இங்கிருந்து தான் வருகிறது என்கிறார் கர்னல் டேவிட் மேக்ஸ்வெல்.

அரசாங்க கட்டிடத்தில் அமைந்துள்ள ஆபீஸ் 39
அரசாங்க கட்டிடத்தில் அமைந்துள்ள இந்த குறிப்பிட்ட "ஆபீஸ் 39"அலுவலகத்தில், போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தல், கள்ளநோட்டு அச்சடித்தல், தங்கக் கடத்தல், ஆயுதக் கையாளுதல் மற்றும் அடிமை தொழிலாளர்கள் என்று எண்ணில் அடங்காத சட்டவிரோத செயல்களின் தலைமையகமாக செயல்படுகிறது என்று தெரியவந்துள்ளது. இந்த நடவடிக்கைகள் மூலம் கிம் ஜாங்-உன்னிற்கு நிதியுதவி செய்யப்படுகின்றது என்பதும் தெரியவந்துள்ளது.

ஆபிஸ் 39 அமைப்பை துவங்கி வைத்தவர் இவர் தான்
குறிப்பாக ஆபிஸ் 39 என்ற அமைப்பு கிம் ஜாங் உன்னின் தந்தையான கிம் ஜாங்-இல் மூலம் 1974 இல் தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தல், கள்ளநோட்டு, தங்கக் கடத்தல், ஆயுதக் கையாளுதல் மற்றும் அடிமை தொழிலாளர்கள் போன்ற செயல்கள் ஆபிஸ் 39 இல் நடைபெறும் தீவிர சட்டவிரோத நடவடிக்கைகளில் சில மட்டுமே. சில அறிக்கைகளின் படி இதற்குப் பின்னணியில் தற்பொழுது கிம் ஜாங்-உனின் சகோதரி கிம் யோ-ஜாங் உதவியாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிம் ஜாங்-உனின் சகோதரி கிம் யோ-ஜாங்
கிம் ஜாங்-உனின் சகோதரி கிம் யோ-ஜாங்கின் கணவர் சோ சாங் என்பவர் கட்டுப்பாட்டின் கீழ் தான் ஆபிஸ் 39 செயல்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது. கிம் யோ-ஜாங்கின் கணவர் சோ சாங் தான் ஆபிஸ் 39 அமைப்பின் தலைமை அதிகாரி பொறுப்பில் இருக்கிறார் என்றும், தனது மைத்துனரைக் காக்கும் முக்கிய இராணுவ பொறுப்பிலும் பணிபுரிகிறார் என்று தகவல் தெரிவிக்கிறது.

கிம் ஜாங்-உன்னுக்கான வங்கி ஆபீஸ் 39
வட கொரியாவிலிருந்து வெளியேறிய ஜேசன் லீ கூறுகையில் "இந்த ஆபீஸ் 39 என்பது கிம் ஜாங்-உன்னுக்கான வங்கி போன்றது, அவருடைய செலவுகளுக்காகப் பணம் பெரிதும் இங்கிருந்து தான் வருகிறது. ஆனால், சமீபகாலமாகச் சட்டவிரோத நடவடிக்கை குறித்து கிம் ஜாங் உன் கூடுதல் கவனத்துடன் செயல்பட்டு வருகிறார். சமீபத்திய ஆண்டுகளில் இவர் அதிக கவனத்தை ஈர்த்ததினால், இவரின் கட்சிக்கும் மோசமான நிலை நிலவுகிறது."

ஆபிஸ் 39 இல் இருந்து தப்பிச் சென்றவர் கூறிய வாக்குமூலம்
இந்த தகவலைத் தெரிவித்த ஜேசன் லீ பியோங்யாங்கிலிருந்து, சியோலுக்கும் பின்னர் அமெரிக்காவிற்கும் தப்பிச் சென்றவர் என்பதும், இவர் தப்பித்துச் செல்வதற்கு முப்பு லீ மற்றும் அவரது தந்தை இருவரும் ஆபிஸ் 39 இல், ஷிப்பிங் வேலைகளைச் செய்து வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குடும்பமா கிம்ஸ்?
"கிம்ஸ் குடும்பம் ஒரு நாட்டின் தலைவர்களாகத் தோற்றமளிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குடும்பத்தைப் போன்றது" என்று நியூயார்க்கில் உள்ள பார்க் வியூகங்களில் ஆசிய நிபுணர் சீன் கிங் கூறியுள்ளார்.இவர்கள் செய்யும் சட்டவிரோத செயல்களில் மிகவும் மோசமானது அடிமை தொழிலாளர்களை ஏற்றுமதி செய்வது தான், அடிமை தொழிலாளர்களை ஏற்றுமதி செய்வதன் மூலம் பெரிய அளவில் பணம் சம்பாதிக்கப்படுகிறது.

கொரிய மக்கள் அடிமைகளாக்கப்படுவது எப்படி?
எடுத்துக்காட்டாக, சீனா மற்றும் ரஷ்யாவின் சைபீரியா பிரதேசத்தில், வட கொரிய ஆண்கள் வேலைக்குப் பதிவு செய்வது போன்று அனுப்பிவைக்கப்படுகிறார்கள். இவர்களுக்குக் கிடைக்கும் ஊதியத்தில் அனைத்தையும் அரசாங்கத்திற்குக் கொடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications