தடை செய்யப்பட்ட படத்தை பார்த்த 2 பள்ளி மாணவருக்கு தூக்கு.! என்ன படம்? எந்த நாட்டின் கோரமான சட்டம் இது?

|

திருட்டுத்தனமாகத் தடை செய்யப்பட்ட திரைப்படங்களைப் பார்த்த குற்றத்திற்காக, வட கொரியாவில் (North Korea) உள்ள 2 பள்ளி சிறுவர்கள், ஊர் மக்களின் முன்பாக - வெட்ட வெளியில் தூக்கிலிடப்பட்ட சம்பவம் உலகளவில் இப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி சிறுவர்கள் என்றும் பாராமல், தடைசெய்யப்பட்ட திரைப்படங்களை டிவியில் பார்த்த குற்றத்திற்காக உயிர்களைப் பறிப்பது நியாயமா? என்ற விவாதங்கள் நெருப்பாய் இணையத்தைச் சுட்டெரிக்கின்றன.!

திரைப்படங்களை பார்த்ததற்காக சிறுவர்களுக்கு தூக்கா? என்ன கொடூரம் இது.!

திரைப்படங்களை பார்த்ததற்காக சிறுவர்களுக்கு தூக்கா? என்ன கொடூரம் இது.!

அப்படி என்ன திரைப்படங்களை அந்த பள்ளி மாணவர்கள் திருட்டுத்தனமாகப் பார்த்தார்கள்? ஏன் இந்த திரைப்படங்கள் வட கொரியாவில் தடை செய்யப்பட்டுள்ளன? தடை செய்யப்பட்ட படங்களைப் பார்ப்பது அவ்வளவு பெரிய குற்றமா?

இந்த சம்பவம் எப்போது நடந்தது? இந்த சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மை என்ன? என்பது போன்ற விளக்கமான தகவலை இப்போது பார்க்கலாம்.

தடை செய்யப்பட்ட திரைப்படங்களை தெரியாமல் பார்த்த பள்ளி மாணவர்கள்.!

தடை செய்யப்பட்ட திரைப்படங்களை தெரியாமல் பார்த்த பள்ளி மாணவர்கள்.!

இரண்டு வட கொரியப் பள்ளி மாணவர்கள் தடை செய்யப்பட்ட திரைப்படங்களை (Banned movies) நாட்டில் தெரியாமல் பார்த்த குற்றத்திற்காகப் பகிரங்கமாகத் தூக்கிலிடப்பட்டனர்.

அப்படி என்ன தடை செய்யப்பட்ட திரைப்படங்களை இவர்கள் பார்த்தார்கள்.! என்ற கேள்வி எழுகிறது; இவர்கள் இருவரும், தென் கொரிய (South Korean movies) மற்றும் அமெரிக்க திரைப்படங்களை (American movies) திருட்டுத்தனமாக பிளாஷ் டிரைவில் மறைத்து, வீட்டில் டிவியில் பார்த்ததாக கூறப்படுகிறது.

திறந்த விண்வெளியில் 256 முறை மரண விளிம்பில் ஸ்பேஸ்வாக் செய்த NASA வீரர்கள்.! ISS இல் கோளாறா? என்னாச்சு?திறந்த விண்வெளியில் 256 முறை மரண விளிம்பில் ஸ்பேஸ்வாக் செய்த NASA வீரர்கள்.! ISS இல் கோளாறா? என்னாச்சு?

இரண்டு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.!

இரண்டு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.!

கே-ட்ராமாஸ் (K- Dramas) நாடகங்கள் என்றும் அழைக்கப்படும் கொரிய நாடகங்களை பார்த்ததற்காகவும், இருவருடன் விநியோகித்ததற்காகவும், வட கொரியாவில் உள்ள இரண்டு உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.

கே-ட்ராமாஸ், தென் கொரிய மற்றும் அமெரிக்க திரைப்படங்கள் வட கொரியாவில் முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.

பென்-டிரைவ் மூலம் திரைப்படங்களை மாற்றிக்கொண்டது குற்றமா?

பென்-டிரைவ் மூலம் திரைப்படங்களை மாற்றிக்கொண்டது குற்றமா?

இன்டிபென்டன்ட் செய்தியின்படி, இந்த சம்பவம் அக்டோபரில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. வட கொரியாவின் ரியாங்காங் மாகாணத்தில் உள்ள ஒரு பள்ளியில் உயர்நிலை படிக்கும் இரண்டு மாணவர்கள் - வயது 16 மற்றும் 17 என்பது குறிப்பிடத்தக்கது; தென் கொரிய மற்றும் அமெரிக்க நாடகங்கள் மீதான தங்கள் தனிப்பட்ட விருப்பத்தினால், இருவரும் பென்-டிரைவ் மூலம் திரைப்படங்களை மாற்றிக்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இது உலகத்திலேயே ரொம்ப பெருசு.! ஆழ்கடல் வழியாக Jio-வுக்கு செக் வைத்த Airtel.! இனி தான் ஆட்டம் ஆரம்பம்.!இது உலகத்திலேயே ரொம்ப பெருசு.! ஆழ்கடல் வழியாக Jio-வுக்கு செக் வைத்த Airtel.! இனி தான் ஆட்டம் ஆரம்பம்.!

மாணவர்கள் வட கொரிய அதிகாரிகளிடம் சிக்கியது எப்படி?

மாணவர்கள் வட கொரிய அதிகாரிகளிடம் சிக்கியது எப்படி?

இரண்டு இளம் வயதினரும் அவ்வப்போது தடை செய்யப்பட்ட திரைப்படங்களை யாருக்கும் தெரியாமல் வீட்டிலேயே டிவியில் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

இவர்கள் எப்படி வட கொரிய அதிகாரிகளிடம் சிக்கினார்கள் என்பது மர்மமாக இருக்கிறது.

ஆனால், இவர்கள் இருவரும் கடத்த அக்டோபர் மாதம், நகரத்தில் உள்ள ஒரு விமான ஓடுபாதையில் அப்பகுதி மக்கள் நேரில் காணும் விதத்தில் தூக்கில் இடப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.

மக்கள் முன்னிலையில் சிறுவர்களுக்கு தூக்கு.!

மக்கள் முன்னிலையில் சிறுவர்களுக்கு தூக்கு.!

அக்கம் பக்கத்தில் உள்ள உள்ளூர் மக்கள் நேரில் காணும் படியாக, மக்கள் சாட்சிகளின் முன்னிலையில் இந்த கோரச் சம்பவம் நடைபெற்றுள்ளதாகத் தெரிகிறது.

இந்த நிகழ்வு அக்டோபரில் நடந்தாலும், கடந்த வாரம் வரை மாணவர்கள் தூக்கில் இடைப்பட்ட செய்திகள் பற்றி எந்த தகவலும் வெளியிடப்படாமல் மறைக்கப்பட்டிருந்தது.

ஆனால், இப்போது இந்த சம்பவம் தொடர்பான செய்திகள் இணையத்தில் கசியத்துவங்கியுள்ளன.

கோல்டு ATM-ஆ.! அப்படினா என்ன? காசிற்கு பதிலாக தங்கமா தருமா? என்னப்பா சொல்றீங்க.!கோல்டு ATM-ஆ.! அப்படினா என்ன? காசிற்கு பதிலாக தங்கமா தருமா? என்னப்பா சொல்றீங்க.!

மன்னிக்க முடியாத குற்றமா இது?

மன்னிக்க முடியாத குற்றமா இது?

இரண்டு சிறுவர்கள் மீதும் பதிவிடப்பட்ட குற்றங்கள் 'தீங்கானவை' என்றும், 'மன்னிக்க முடியாதவை' என்றும் வட கொரிய அரசாங்கம் கூறியுள்ளது.

வட கொரியாவின் தெளிவான சட்டத்தை மீறிய குற்றத்திற்காகத் தான், அவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளதாகவும் வட கொரியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தின் நடவடிக்கையைப் பார்த்து உள்ளூர் வாசிகள் திகிலுடன் பீதியில் உறைந்துள்ளனர்.

ஃபிளாஷ் டிரைவ்களில் இன்னும் வட கொரிய மக்கள் படம் பார்க்கிறார்களா?

ஃபிளாஷ் டிரைவ்களில் இன்னும் வட கொரிய மக்கள் படம் பார்க்கிறார்களா?

காரணம், வட கொரியாவில் உள்ள மக்கள் ஏராளமானோர் - ஃபிளாஷ் டிரைவ்களில் தென் கொரிய டிவி எபிசோட்கள், கே-சீரிஸ் நாடகங்கள், அமெரிக்கதிரைப்படங்கள் போன்றவற்றைப் பதுக்கி, மூடிய கதவுகளுக்குப் பின்னால் பார்ப்பதைப் பழக்கமாகக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் எப்படி திருட்டு விசிடி, ஆன்லைன் பைரஸி தடை செய்யப்பட்டுள்ளதோ; அதேபோல், வட கொரியாவில் இந்த வகை படங்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

ஏலியன் உயிர்களுக்கும் பூமியின் ப்ரோக்கோலிக்கும் தொடர்பா? பிரபஞ்சத்தையே உலுக்கிய உண்மை.!ஏலியன் உயிர்களுக்கும் பூமியின் ப்ரோக்கோலிக்கும் தொடர்பா? பிரபஞ்சத்தையே உலுக்கிய உண்மை.!

வட கொரியாவில் சிரிப்பதற்கு கூட தடையா?

வட கொரியாவில் சிரிப்பதற்கு கூட தடையா?

இதற்கான தண்டனையாக அபராதம் வசூலிப்பது, சிறைக்குச் செல்வது, அதிகபட்சமாகத் தூக்கிலிடப்படுவது போன்ற தண்டனைகளை வட கொரியா வழங்கி வருகிறது.

இப்படி வட கொரியாவில் மிகவும் மோசமான சட்டங்கள் மற்றும் விதிகள் தொடர்ந்து விதிக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக, கிம் ஜாங் உன்னின் தந்தை கிம் ஜாங்இல்லின் மறைவையொட்டி, வடகொரியாவில் ஓராண்டுக்கு முன்பு 11 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டது.

வட கொரியாவில் மறைக்கப்படும் உண்மைகள்.!

வட கொரியாவில் மறைக்கப்படும் உண்மைகள்.!

இந்த காலகட்டத்தில், வட கொரிய மக்கள் ஷாப்பிங் செய்யவோ, மது அருந்தவோ, பொது இடங்களில் சிரிக்கவோ அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மீறினால் தண்டிக்கப்படுவார்கள் என்று விதி விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், இது போன்ற மோசமான கொரிய நிகழ்வுகள் நாடு முழுவதும் பிரபலமடைவதைத் தடுக்க அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக, 2020 ஆம் ஆண்டில் வெளிப்புறத் தகவல்களும் செல்வாக்குகளும் சட்டவிரோதமாக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
North Korea Publicly Hanged 2 Teens For Watching Banned Movies in Tv Using Flash Drives

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X