தென்கொரியாவை அலறவிட்ட கிம் ஜோங்: தாக்குதல் ஏவுகணை ஏவியது.!

இந்நிலையில், அடங்கமறு அத்துமீறு என்ற பாணியில் வடகொரியா தாக்குதல் ஏவுகணையை தற்போது நடத்தியுள்ளது. இதனால் தென்கொரியா கதறியுள்ளது. இதுகுறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளது.

|

அமெரிக்கா உடன் இரண்டாம் கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு வடகொரியா அணு ஆயுத சோதனைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றது.

இதில், கடந்த முறை கண்டம் விட்டு கண்டம் பாயும் நிலம், நீர், ஆகாயம் என்று வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியிருந்தது.

தென்கொரியாவை அலறவிட்ட கிம் ஜோங்: தாக்குதல் ஏவுகணை ஏவியது.!

இந்நிலையில், அடங்கமறு அத்துமீறு என்ற பாணியில் வடகொரியா தாக்குதல் ஏவுகணையை தற்போது நடத்தியுள்ளது.

இதனால் தென்கொரியா கதறியுள்ளது. இதுகுறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ளது.

டிரம்ப்- ஜிம் ஜோன் பேச்சு தோல்வி:

டிரம்ப்- ஜிம் ஜோன் பேச்சு தோல்வி:

வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை விலக்குவது குறித்து பேச்சு வார்த்தை நடந்தது. அமெரிக்கா கூறியபட வடகொரியா ஏவுகணை சோதனைகளை அடியோடு நிறுத்தியிருந்தது. மேலும், அமெரிக்கா ஒரு சில முக்கியமான பொருளாதார தடைகளை நீக்க முரண்டுபிடித்தது. இதனால் டிரம்ப்- ஜிம்ஜோம் உடன் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

 3 வகையில் ஏவுகணை சோதனை:

3 வகையில் ஏவுகணை சோதனை:

இதற்கு பிறகு அமெரிக்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வான், நீர், நிலம் உள்ளிட்டவைகளில் இருந்தும் கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணைகளையும் வெற்றிகரமாக சோதனை செய்தது வடகொரியா. மேலும் அணு ஆயுதங்களையும் மறைமுக சந்தைப்படுத்துவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதின் உடன் ஜிம் ஜோன் உன் சந்திப்பு:

புதின் உடன் ஜிம் ஜோன் உன் சந்திப்பு:

ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினை வடகொரிய அதிபர் ஜிம் ஜோன் உன் முதல் முறையாக சந்தித்தார்.
பொருளாதார ரீதியாகவும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுவதாக அமைந்துள்ளது. மேலும், அமெரிக்காவின் தடைகளை நொறுக்கும் வகையில் இது அமைந்துள்ளதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டது. அமெரிக்காவின் செயல்பாடுகளுக்கும் எதிராகவும் ஒரு முடிவுகளை இரு நாடுகளும் எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

 ஏவுகணை  வடகொரியா:

ஏவுகணை வடகொரியா:

வடகொரியா அடையாளம் தெரியாத குறைந்த தூரம் சென்று தாக்குல் நடத்தும் ஏவுகணை ஒன்றை செலுத்தியுள்ளது' என்று தென் கொரியா தரப்பில் பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. ஜப்பான் கடற்கரையில் இந்த ஏவுகணை செலுத்தப்பட்டு உள்ளதாக தென் கொரியா கூறுகின்றது.

இது குறுத்து தென் கொரிய தரப்பு, ‘காலை 9:06 மணிக்கு வடகொரியா, ஓன்சான் கடற்கரை நகரத்தில் இருந்து கிழக்கு நோக்கி ஒரு ஏவுகணையை செலுத்தி இருக்கிறது. இந்த ஏவுகணை 70 முதல் 200 கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்துள்ளது' என்று அறிக்கை மூலம் கூறியுள்ளது.

ஏவுகணை குறித்து ஆய்வு:

ஏவுகணை குறித்து ஆய்வு:

இந்தத் தகவலின் உண்மை தன்மை பற்றி தென் கொரிய மற்றும் அமெரிக்க தரப்புகள் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக வட கொரியா, அமெரிக்காவுடன் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், முதன்முறையாக இப்படிப்பட்ட நடவடிக்கையில் அந்நாடு இறங்கியுள்ளதாக தெரிகிறது. கடைசியாக வட கொரியா இப்படி ஏவுகணையை செலுத்தியது, நவம்பர் 2017-ன் போது.

 கைவிட வேண்டு கோள்:

கைவிட வேண்டு கோள்:

சில நாட்களுக்கு முன்னர்தான் தென் கொரிய வெளியுறவுத் துறை அமைச்சர் காங் கியூங்-வா, ‘வட கொரியா தனது அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பாக தெளிவான, உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்' என்றார்.

அமெரிக்காவுக்கு  எச்சரிக்கை:

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை:

இந்த வார தொடக்கத்தில் கூட வட கொரியா துணை வெளியுறவுத் துறை அமைச்சர் சோ சன் ஹுய், ‘எங்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் பொருளாதார தடைகள் தளர்த்தப்படவில்லை என்றால், அமெரிக்கா தேவையில்லாத விளைவுகளை சந்திக்க நேரிடும்' என்று எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
: north korea launched short range missiles into the sea saturday the south korean military : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X