வடகொரியா-அமெரிக்கா போர் மூளும் அபாயம்.! ரஷ்யா, சீனா ஆதரவு யாருக்கு.!
இந்நிலையில் அமெரிக்காவுக்கு வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் முடிவுக்கு சீனா, ரஷ்யா, கியூபா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தற்போது போர் மூளும் அபாயம
அமெரிக்காவின் எந்த முடிவுக்கும் எதற்கும் இன்று வரை அஞ்சாதவன் என்றால் அது வடகெரியா அதிபர் ஜிங் ஜோங் உன் ஆகத்தான் இருக்க முடியும். அமெரிக்கா விதித்த பல்வேறு தடைகளையும் தாண்டி அஞ்சா நெஞ்சன் அலட்டிக் கொள்ளாமல் அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகின்றார்.

அணு ஆயுத சோதனைக்களுக்காக அமெரிக்கா இன்று வரை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. மேலும், தற்போது ஐநா. சபையில், ஒரு மித்த கருத்துடன் வடகொரியாவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது அமெரிக்கா.
இந்நிலையில் அமெரிக்காவுக்கு வடகொரியா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் முடிவுக்கு சீனா, ரஷ்யா, கியூபா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தற்போது போர் அமெரிக்கா-வடகொரியா மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஏவுகணை சோதனை:
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

வடகொரியா மீது பொருளாதார தடை:
ஆனால், எதிர்ப்புகளைச் சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

வட கொரியா-தென் கொரியா உறவு:
எனினும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது. இந்த நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென் கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டது.

அணு ஆயுதங்கள் குறித்து ஒப்பந்தம்:
இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் - கிம் இடையே சிங்கப்பூரில் சந்திப்பு ஏற்பட்டது. இந்தச் சந்திப்பில் அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியா சம்மதம் தெரிவித்தது. ஆனால், இதனை மீறி வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

வடகொரியா மீது தடை விலக்கவில்லை:
ஒப்பந்தத்தின் படியும், கேட்டுக் கொண்டதின் படியும் வடகொரியா மீது உள்ள பொருளாதார தடை உத்தரவை அமெரிக்கா இன்று வரை திரும்ப பெறவில்லை. இதனால் ஏன் நாம் அமெரிக்காவின் உத்தரவுக்க செவி சாய்க்க வேண்டும் என்று நிலைப்பாட்டை வடகொரியா எடுத்துள்ளது.

பியாங்ஜின் ஒப்பந்தம்:
பியாங்ஜின் எனவே அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவிட்டால் தங்கள் நாட்டின் பியாங்ஜின் (pyongjin) கொள்கைப்படி அணு ஆயுத பலத்தை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சிப் பாதைக்கு திரும்பப் போவதாக வடகொரிய தற்சமயம் எச்சரித்துள்ளது.

நிறுத்த வாய்பே இல்லை:
அமெரிக்கா தடையை நீக்காவிட்டால் தொடர்ந்து நாங்கள் அணு ஆயுத சோதனை மற்றும் அணு ஆயுதங்களை தயார் செய்து விற்பனை செய்து வருவோம் என்று வடகொரியா தெரிவித்து, இன்று வரை நடைமுறையிலும் ஈடுபட்டுள்ளது.

ஐநா கண்டனம்:
இந்நிலையில், வடகொரியா நாட்டின் வளங்களை அணு ஆயுதத் தயாரிப்புக்கு திருப்பியதன் மூலம் மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மீறியிருப்பதாக ஐ.நா. சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

ஐநா குற்றச்சாட்டு :
ஐ.நா சைபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தில் வடகொரியாவில் ஒரு கோடிக்கும் மேற்பட்டோர் தீவிர மற்றும் நாட்பட்ட ஊட்டச் சத்துக் குறைபாடுகளுக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் நலன்களுக்கு பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டிய நாட்டின் வளங்கள் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தீர்மானத்திற்கு எதிர்ப்பு:
இந்தத் தீர்மானம் ஐ.நா. சபையில் ஒருமித்த கருத்துடன் நிறைவேற்றப்பட்டாலும் குறிப்பிட்ட நாட்டுக்கு எதிராக இதுபோன்ற தீர்மானங்கள் ஏற்புடையதல்ல என ரஷ்யா, சீனா, கியூபா, வெனிசுலா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

வடகொரியா எச்சரிக்கை:
தங்கள் நாட்டிற்கு எதிராக அமெரிக்கா மேற்கொள்ளும் நடவடிக்கைகள், அணு ஆயுத ஒழிப்புக்கு தடையாக அமைந்து விடலாம் என்று வடகொரியா எச்சரித்துள்ளது.

மூன்று அதிகாரிகள் மீது நடவடிக்கை:
மனித உரிமைகள் மீறல் தொடர்பாக வடகொரியாவின் மூன்று முக்கிய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது. இதில், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் வலக்கரம் என்று கருதப்படும் அதிகாரி ஒருவரும் உள்ளார்.

பாராட்டு :
இதுகுறித்து வடகொரியாவின் அரசு ஊடகமான கே.சி.என்.ஏ.வில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தங்கள் நாட்டுடனான உறவை மேம்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகளை பாராட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போர் மூளும் அபாயம்:
ஆனால் வெளியுறவுத்துறை மேற்கொண்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கையால், கடந்த ஆண்டில் இருநாடுகளும் சண்டையிட்டதைப் போன்ற நிலை தற்போது ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடகொரியா-அமெரிக்கா:
இந்த போர் நடந்தால், வடகொரியாவுக்கு ஆதரவாக ரஷ்யா, சீனா, கியூபா உள்ளிட்ட நாடுகளும், அமெரிக்காவின் நட்புற படையான நோட்டோ படைகளும் ஆதரவாக களம் காணலாம்.


Click it and Unblock the Notifications