டிரம்புக்கு சீமான் ஸ்டைலில் அதுக்கு வாய்ப்பே இல்ல ராஜா சொன்ன கிம்.!
அணு ஆயுதங்களை பயன்படுத்தப்போது இல்லை என்று வடகொரியா தெரிவித்து இருந்தது. இந்நிலையில், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகின்றது. அணு ஆயுத சோதனையை நிறுத்த வாய்ப்பே இல்ல ராஜா என்று அதிப
அணு ஆயுத சோதனைகளை அமெரிக்காவின் பொருளாதார தடை உத்தரவையும் மீறி வட கொரியா அரங்கேற்றி வருகின்றது.
தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வந்ததால், தென்கெரியாவும், ஜப்பானும் ஆடி போயின. இந்நிலையில் தொடர்ந்து, பதறிப்போன அமெரிக்காவும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்தது.

திடீரென தென் கெரியாவுக்கும் வடகொரியாவுக்கும் நட்புறவு ஏற்பட்டது. இந்த சூழ்நிலையில், அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் சந்தித்துக் கொண்டனர்.
அப்போது, அணு ஆயுதங்களை பயன்படுத்தப்போது இல்லை என்று வடகொரியா தெரிவித்து இருந்தது.
இந்நிலையில், வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருகின்றது. அணு ஆயுத சோதனையை நிறுத்த வாய்ப்பே இல்ல ராஜா என்று அதிபர் கிம் டிரம்பிடம் சீமான் ஸ்டைலில் கூறுவதாக இருகின்றது.

ஆடிப்போன அமெரிக்கா:
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியது. இதில் இரண்டு சோதனைகள் ஜப்பான் கடலுக்கு அருகில் நடத்தப்பட்டன.
வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வந்தன.

வடகொரியா மீது பொருளாதார தடை:
ஆனால், எதிர்ப்புகளைச் சற்றும் பொருட்படுத்தாமல் வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இந்த நிலையில் ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன.

வட கொரியா-தென் கொரியா உறவு:
எனினும் அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது.
இந்த நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென் கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டது.

அணு ஆயுதங்கள் குறித்து ஒப்பந்தம்:
இதனைத் தொடர்ந்து ட்ரம்ப் - கிம் இடையே சிங்கப்பூரில் சந்திப்பு ஏற்பட்டது. இந்தச் சந்திப்பில் அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியா சம்மதம் தெரிவித்தது. ஆனால், இதனை மீறி வடகொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

வடகொரியா மீது தடை விலக்கவில்லை:
ஒப்பந்தத்தின் படியும், கேட்டுக் கொண்டதின் படியும் வடகொரியா மீது உள்ள பொருளாதார தடை உத்தரவை அமெரிக்கா இன்று வரை திரும்ப பெறவில்லை.
இதனால் ஏன் நாம் அமெரிக்காவின் உத்தரவுக்க செவி சாய்க்க வேண்டும் என்று நிலைப்பாட்டை அமெரிக்கா எடுத்துள்ளது.

பியாங்ஜின் ஒப்பந்தம்:
பியாங்ஜின் எனவே அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவிட்டால் தங்கள் நாட்டின் பியாங்ஜின் (pyongjin) கொள்கைப்படி அணு ஆயுத பலத்தை அதிகரிப்பதன் மூலம் பொருளாதார வளர்ச்சிப் பாதைக்கு திரும்பப் போவதாக வடகொரிய தற்சமயம் எச்சரித்துள்ளது.

சீமான் காமெடி போல கிம் முடிவு:
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் காமெடியாக அதுக்கு வாய்ப்பே இல்ல ராஜா என்று கூறியிருப்பார். அதுபோல, எங்கள் நாட்டு மீது விதிக்கப்பட்டுள்ள தடைகளை நீக்காவிட்டால், தொடர்ந்து அணு ஆயுத சோதனை நடத்துவோம் என்று நிறுத்த முடியாது என்பதற்காக அதுக்கு வாய்பே இல்ல ராஜா என்று டிரம்பிடம் கூறுவதை போல இந்தநிலைபாடு அமைந்து இருகின்றது.


Click it and Unblock the Notifications