Home
News

10 நிமிட டெலிவரி.. Nokia இருக்கு.. iPhone இருக்கு.. Blinkit ஆப்ல அடிச்சாங்க பாரு.. எந்தெந்த சிட்டிகளில்?

ஆர்டர் செய்த 10 நிமிடங்களில் வீடு தேடி ஸ்மார்ட்போன்கள் கிடைத்தால் எப்படி இருக்கும்? அதுவும் நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையில் கிடைக்குமென்றால், உங்களால் நம்ப முடிகிறதா? அப்படியான டெலிவரி சேவையை பிளிங்கிட் (Blinkit) நிறுவனம் தொடங்கி இருக்கிறது. நோக்கியாவின் பீச்சர் போன் முதல் பிரீமியமான ஐபோன் வரையில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இதுகுறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

ஆன்லைன் ஃபுட் டெலிவரி சேவையை தொடங்கிய ஸ்விக்கி நிறுவனம், இப்போது மளிகை பொருட்கள் முதல் எலக்ட்ரானிக் பொருட்கள் வரையில் டெலிவரி செய்ய தொடங்கிவிட்டது. இதற்கு கடும்போட்டியாக பிளிங்கிட் நிறுவனம் மாறிவருகிறது. இப்போது, ஒருபடி மேலே சென்று 10 நிமிடங்களில் ஸ்மார்ட்போன் டெலிவரி சேவையை கொடுத்துள்ளது.

10 நிமிட டெலிவரி! Nokia இருக்கு.. iPhone இருக்கு.. Blinkit ஆப்ல வருது!

அதிலும் நோ-காஸ்ட் ஈஎம்ஐ சலுகையில், அந்த ஸ்மார்ட்போன்களை கொடுக்கிறது. இதனால், இனிமேல் ஸ்மார்ட்போன் வாங்கும் முறையே மாறிப்போகிறது. ஆனால், இது ஆரம்ப கட்ட சேவையாக இருப்பதால், குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்கள் மட்டுமே கிடைக்கின்றன. அதேபோல 10 நிமிட சேவைகளை வழங்கக்கூடிய வகையில் பெரும் நகரங்களில் மட்டும் தொடங்கப்பட்டு இருக்கிறது.

ஆகவே, டெல்லி என்சிஆர், மும்பை மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் மட்டுமே இப்போதைக்கு இந்த சேவை கிடைக்க இருக்கிறது. அதேபோல சியோமி (Xiaomi) மற்றும் நோக்கியா (Nokia) நிறுவனங்களின் ஸ்டோர்களுடன் இதற்காக கைகோர்த்துள்ளது. அதேபோல பிரீமியம் செக்மெண்ட்டில் ஐபோன் மாடலையும் 10 நிமிடங்களில் டெலிவரி செய்ய இருக்கிறது.

இப்போது எந்தெந்த மாடல்கள் ஆர்டருக்கு கிடைக்கும்? ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G), ரெட்மி 14சி (Redmi 14C), ஐபோன் 16 (iPhone 16) ஆகிய ஸ்மார்ட்போன்கள் மற்றும் பீச்சர் மாடலான நோக்கியா (Nokia 105) போனையும் ஆர்டர் செய்து கொள்ளலாம். இந்த போன்களுக்கு அமேசான், பிளிப்கார்ட் தளங்களில் கிடைப்பதை போல நோகாஸ்ட் ஈஎம்ஐ சலுகையும் கிடைக்கிறது.

ஆகவே, எச்டிஎப்சி (HDFC), எஸ்பிஐ (SBI), ஐசிஐசிஐ (ICICI), கோடக் மஹிந்தரா (Kotak Mahindra) மற்றும் ஆக்சிஸ் (Axis) ஆகிய பேங்குகளின் கார்டுகளுக்கு இந்த நோகாஸ்ட் ஈஎம்ஐ சலுகைகள் கிடைக்கும். டெல்லி என்சிஆர், மும்பை மற்றும் பெங்களூரு நகரங்களில் இருக்கும் பிளிங்கிட் கஸ்டமர்கள் இனிமேல் ஸ்மார்ட்போன்களையும் ஆர்டர் செய்து கொள்ள முடியும்.

மற்ற நகரங்களில் கிடைக்குமா? இந்த 10 நிமிட சேவைக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து மற்ற முக்கிய நகரங்களிலும் இந்த சேவை தொடங்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோல கூடுதலாக ஸ்மார்ட்போன் மாடல்களை பட்டியலில் சேர்க்கவும் பிளிங்கிட் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. பிளிங்கிட் சிஇஓ அல்பிந்தர் திண்ட்சா (Blinkit CEO Albinder Dhindsa) இதை உறுதிபடுத்தி இருக்கிறார்.

அதாவது, 10 நிமிடங்களில் ஸ்மார்ட்போன் டெலிவரி செய்யும் சேவையில் கூடுதல் மாடல்கள் மற்றும் பிராண்ட்கள் விரைவில் இணைக்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார். ஆகவே, வரும் நாட்களில் பிளிங்கிட் ஆப் மூலம் பல்வேறு பிராண்ட்களின் ஸ்மார்ட்போன்களை ஆர்டர் செய்து கொள்ள முடியும். பிளிங்கிட்டில் ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்ல, பல்வேறு எலக்ட்ரானிக் பொருட்களும் கிடைக்கின்றன.

பிளிங்கிட் ஆப் மூலம் அயர்ன் பாக்ஸ், ஹீட்டர், ஹேண்ட் ஹீல்டு மசாஜர், ஹேர் டையர் போன்ற வீட்டு உபயோக பொருட்கள் முதல் சவுண்ட்பார், ஹெட்போன், ஸ்மார்ட்வாட்ச் போன்ற கெஜட்கள் வரையில் ஆர்டர் செய்ய கிடைக்கின்றன. இப்படி ஆன்லைன் டெலிவரியில் கிட்டத்தட்ட அனைத்து பொருட்களையும் கொடுக்கும் நிறுவனமாக மாறி வருகிறது பிளிங்கிட்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia Xiaomi iPhone Delivered in 10 Minutes From Blinkit App in Delhi NCR Mumbai Bengaluru Cities
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X