தீ பறக்கும் ஆர்டர்கள்.. 50எம்பி கேமரா.. நோக்கியா 5ஜி போனுக்கு ரூ.12000 விலைகுறைப்பு.. எந்த மாடல்?
நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு உலகம் முழுவதும் அதிக வரவேற்பு உள்ளது. அதாவது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவருகின்றன நோக்கியா போன்கள். எனவே தான் இந்நிறுவனத்தின் போன்கள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் நோக்கியா எக்ஸ்30 5ஜி போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்த நோக்கியா எக்ஸ்30 5ஜி (Nokia X30 5G) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.48,999-க்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இந்த போனுக்கு ரூ.12,000 விலை குறைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நோக்கியா எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.36,999 விலையில் வாங்க முடியும். மேலும் இந்த போனின் சிறப்பு அம்சங்களை இப்போது பார்ப்போம்.

நோக்கியா எக்ஸ்30 5ஜி போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 1,080×2,400 பிக்சல்ஸ், 700 நிட்ஸ் ப்ரைட்னஸ், 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா க்ளாஸ் விக்டஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா போன். பெரிய டிஸ்பிளே என்பதால் இந்த ஸ்மார்ட்போனை பயன்படுத்த அருமையாக இருக்கும்.
8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா எக்ஸ்30 5ஜி போன். குறிப்பாக மெமரி கார்டை பயன்படுத்த இதில் ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது எச்எம்டி குளோபல் நிறுவனம்.
நோக்கியா எக்ஸ்30 5ஜி போன் 50எம்பி பிரைமரி கேமரா + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா போன். இதுதவிர எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா எக்ஸ்30 5ஜி மாடல்.
நோக்கியா எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போனில் 4200 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 33 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் போன்ற பல சிறப்பான வசதியைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை விரைவில் சார்ஜ் செய்துவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5ஜி சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த நோக்கியா எக்ஸ்30 5ஜி ஸ்மார்ட்போன். எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் இருமையாக இருக்கும். அதேபோல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது இந்த நோக்கியா போன். குறிப்பாக கேமிங் ஆப்ஸ்களை இந்த போனில் தடையின்றி பயன்படுத்த முடியும். விரைவில் இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

cloud ப்ளூ மற்றும் ஐஸ் ஒயிட் நிறங்களில் இந்த நோக்கியா எக்ஸ்30 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் 5ஜி, ப்ளூடூத் 5.1, வைஃபை 802.11, என்எப்சி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் குறைந்த எடையுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.
அதேபோல் சமீபத்தில் இந்திய மார்கெட்டே அதிரும்படி நோக்கியா நிறுவனத்தின் நோக்கியா ஜி42 (Nokia G42) போன் மலிவான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த நோக்கியா மாடல் கிரே (Grey) மற்றும் பர்பிள் (Purple) ஆகிய 2 கலர்களில் விற்பனைக்கு வர இருக்கிறது. வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் அமேசான் (Amazon) தளத்தில் விற்பனைக்கு வருகிறது. இந்த போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.12,599ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications