சென்னையில் நோக்கியா லுமியா போன்களின் விலை மற்றும் சலுகைகள்...

Written By:

நோக்கியா நிறுவனம் சென்னையில் உள்ளவர்களுக்காக புதிய சலுகைகளையும் நோக்கியா லுமியா வரிசை போன்களுக்கான விலையையும் அறிவித்துள்ளது.

சென்னையில் நோக்கியா லுமியா போன்களின் விலை மற்றும் சலுகைகள்...

நோக்கியா இன்று வெளியிட்ட அறிக்கையில், லுமியா போன்களுக்கான விலை நிர்ணயம் செய்தாயிற்று. மேலும் போன் வாங்குபவர்களுக்கு EMI வசதியும், வயர்லஸ் சார்ஜிங் கருவியும் இலவச இணைப்பாகவே தரப்படுகிறதாம்.

நோக்கியா லுமியா வரிசை போன்களாவன, லுமியா 920, லுமியா 820, லுமியா 20, லுமியா 620 மற்றும் லுமியா 520. இந்த ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் விண்டோஸ் போன் 8 இயங்குதளத்தில் செயல்படக்கூடியது. ஆரம்ப விலை ரூ.10,499. மேலும் எளிதாக EMI வசதியை பெறலாம், 0% வட்டியாம்! மேலும் ப்ராசெசிங் கட்டணம் கூட இல்லையாம்.

இந்த EMI வசதியை HSBC, ICICI, HDFC, Citibank மற்றும் இதர வங்கி வாடிக்கையாளர்களும் பெறலாம். போன்களுக்கான இன்சூரன்ஸ் கூட செய்து தரப்படுகிறதாம்.

மேலும் நோக்கியா லுமியா 920 போனை வாங்குபவர்களுக்கு ரூ.3,999 மதிப்பிலான வயர்லஸ் சார்ஜிங் கருவி இலவசமாகவே வழங்கப்படும் எனவும் நோக்கியா அறிவித்துள்ளது.

நடிகர் சூர்யா...சில ஃபேஸ்புக் பக்கங்கள்...

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot