நோக்கியாவின் 10 அங்குல டேப்லெட்!

Posted By: Staff

நோக்கியாவின் 10 அங்குல டேப்லெட்!

 

பின்லாந்தைச் சேர்ந்த மொபைல் போன்கள் தயாரிப்பு நிறுவனமான "நோக்கியா", டேப்லெட் தயாரிப்பில் முழுவீச்சில் இறங்கப்போகிறது. அதிலும் இந்த டேப்லெட் 10.1 அங்குல திரையுடன் இருக்கும். மேலும் இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சர்பேஸ் கணினி போன்ற அமைப்புடையது.

 

இந்த புதிய டேப்லெட், விண்டோஸ் 8 இயங்குதளத்தின் அடிப்படையில் செயல்படக்கூடியது. இதில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது சர்பேஸ் கணினிக்கு பயன்படுத்திய "கவர்" என்ற அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. மேலும் HDMI என்ற தொழில்நுட்பம் மற்றும் USB பயன்படுத்துவதற்கான பிரத்தியோக அமைப்பும் உள்ளது.

 

இந்த நோக்கியா தயாரிக்கும் டேப்லெட் 10 மணிநேரம் செயல்படக்கூடிய வகையிலான பேட்டரியை தன்னகத்தே கொண்டுள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot