10,000 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் நோக்கியா!

Posted By: Karthikeyan
10,000 பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பும் நோக்கியா!

இந்திய மொபைல் சந்தையில் நோக்கியா நிறுவனம் பல ஆண்டுகளாக முன்னனயில் இருந்து வருகிறது. நோக்கியாவின் மொபைல்களும் இந்திய மக்களின் பாராட்டுகளைப் பெற்று வருகின்றன. எனவே நோக்கியா தனது மொபைல் வர்த்தகத்தில் வெற்றி கொடி நாட்டி வருகிறது என்று பெரும்பாலோர் எண்ணுகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் மொபைல் வர்த்தகத்தில் ஏற்பட்ட இழப்பு காரணமாக நோக்கியா உலக அளவில் தனது 10,000 தொழிலாளிகளை வீட்டிற்கு அனுப்பி இருக்கிறது. மேலும் இரண்டாவது காலாண்டில் ஏற்படும் வர்த்தக இழப்பு எதிர்பார்த்ததை விட அதிகமாக இருக்கும் என்று கருதுகிறது.

அதனால் நோக்கியாவில் வரும் காலங்களில் வேலை இழப்போரின் எண்ணிக்கை 40,000க்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நோக்கியா தனது நிறுவனத்தை புதுப்பிப்பதற்காக வரும் 2013க்குள் 1 பில்லியன் ஈரோவை செலவழிக்க இருக்கிறது. அதோடு நோக்கியாவின் பங்கு வர்த்தகமும் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. நோக்கியா மீண்டும் வெற்றிப் பாதையை நோக்கிச் செல்லும் என நம்புவோம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot