பிளிப்கார்ட்டே சொல்லியாச்சு- தீபாவளிக்கு வரும் நோக்கியா டி20 டேப்லெட்- விலை கீழ, அம்சம் மேல!

|

நோக்கியா டி20 டேப்லெட் இந்த மாத தொடக்கத்தில் உலகளவில் வெளியிடப்பட்டது. நோக்கியா டி20 டேப்லெட் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த சாதனம் இந்த மாத தொடக்கத்தில் உலகளவில் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது பிளிப்கார்ட்டில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்த சாதனம் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நோக்கியா டி20 டேப்லெட்

நோக்கியா டி20 டேப்லெட்

பிளிப்கார்ட் டீசரில் நோக்கியா டி20 டேப்லெட் வெளியிட்ட தகவலின் படி, நவம்பர் 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையில் இந்த டேப்லெட் கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. நோக்கியா டி20 டேப்லெட் 2கே டிஸ்ப்ளேவை கொண்டிருக்கிறது, விர்ச்சுவல் தொடர்புகளை எளிதாக்க ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டிருக்கிறது. முக்கிய சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இந்த சாதனம் நாள் முழுவதும் பேட்டரி ஆயுள் மற்றும் பிரத்யேக கூகுள் கிட்ஸ் ஸ்பேஸ் உடன் வருகிறது.

நோக்கியா டி20 டேப்லெட் விரைவில் அறிமுகம்

நோக்கியா டி20 டேப்லெட் விரைவில் அறிமுகம்

நோக்கியா டி20 டேப்லெட் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் பிளிப்கார்ட் தனது தளத்தில் பட்டியலிடப்பட்டிருக்கிறது. டேப்லெட்டின் முக்கிய சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், 10.4 இன்ச் 2கே டிஸ்ப்ளே உடன் வருகிறது. இந்த சாதனத்தில் 8200 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பிரத்யேக கூகுள் கிட்ஸ் ஸ்பேஸ் உள்ளிட்ட வகையில் இருக்கும் என கூறப்படுகிறது. டேப்லெட் இரண்டு வருட ஓஎஸ் மேம்படுத்தல்களையும் மூன்று வருட பாதுகாப்பு புதுப்பிப்புகளையும் பெறும் என எச்எம்டி குளோபல் உறுதிப்படுத்தியுள்ளது.

நோக்கியா டேப்லெட்டின் வெளியீட்டு தேதி

நோக்கியா டேப்லெட்டின் வெளியீட்டு தேதி

நோக்கியா டேப்லெட்டின் வெளியீட்டு தேதியை பிளிப்கார்ட் குறிப்பிடவில்லை என்றாலும் பிளிப்கார்ட் பிக் தீபாவளி விற்பனையின் போது இந்த விற்பனை நடக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விற்பனையானது நவம்பர் 3 ஆம் தேதி தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நோக்கியா டி20 விலை நிர்ணயம்

நோக்கியா டி20 விலை நிர்ணயம்

இந்தியாவில் நோக்கியா டி20 விலை நிர்ணயம் செய்யப்படவில்லை என்றாலும் உலக சந்தையில் கிடைக்கும் விலைக்கேற்ப தொடர்புப்படுத்தப்பட்டுள்ளது. நோக்கியா டி20 சாதனத்தின் விலையானது வைஃபை மாறுபாட்டின் விலை இந்திய மதிப்புப்படி ரூ.17,200 ஆகவும் வைஃபை ப்ளஸ் 4ஜி வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்பிட ரூ.20,600 ஆக இருக்கும் எனவும் தொடங்கப்படுகிறது.

நோக்கியா டி20 சிறப்பம்சங்கள்

நோக்கியா டி20 சிறப்பம்சங்கள்

நோக்கியா டி20 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 மூலம் இயங்கும் எனவும் இரண்டு வருட ஓஎஸ் மேம்படுத்தல்கள் மற்றும் மூன்று வருட சரியான பாதுகாப்பு புதுப்பிப்புகளை பெறுவதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த டேப்லெட் ஆனது 10.4 இன்ச் 2கே (2,000x1,200 பிக்சல்கள்) தீர்மானத்துடன் வருகிறது. இது இன் செல் டிஸ்ப்ளே 400 நிட்ஸ் உச்ச பிரகாசத்துடன் வருகிறது. இந்த டேப்லெட் ஆனது ஆக்டோ கோர் யூனிசோக் டி610 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இது 3 ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ரேம் உடன் வரும் என கூறப்படுகிறது. எச்எம்டி குளோபல் நோக்கியா டி20 டேப்லெட்டில் 32 ஜிபி மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இதில் 512 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது.

முன்புறத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா

முன்புறத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா

நோக்கியா டி20 சாதனத்தின் முன்புறத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா மற்றும் பின்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமராவும் இருக்கிறது. பின்புற கேமரா அமைப்பு குறித்து பார்க்கையில் இது எல்இடி ஃபிளாஷ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. நோக்கியா டி20 சாதனமானது 8200 எம்ஏஎச் பேட்டரி உடன் வருகிறது. இந்த சாதனம் 15 வாட்ஸ் சார்ஜர் மூலம் வேகமான சார்ஜிங் வசதியை கொண்டிருக்கிறது. டேப்லெட் ஒரே சார்ஜிங்கில் நாள் முழுவதும் பேட்டரி ஆயுளை வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இணைப்பு விருப்ப ஆதரவுகள்

இணைப்பு விருப்ப ஆதரவுகள்

நோக்கியா டி20 டேப்லெட்டில் இணைப்பு விருப்பங்களை பொறுத்த வரையில், 4ஜி, எல்டிஇ, வைஃபை 802.11ac, ப்ளூடூத் வி5.0, யூஎஸ்பி டைப் சி போர்ட் உடன் வருகிறது. டேப்லெட் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உடன் வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Nokia T20 Tablet Sale Start Soon in Indial: Listed by Flipkart

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X