இது டிவி இல்ல டேப்லெட்.. சம்பவம் செய்த Nokia- ரூ.11,000க்கு அறிமுகமான தரமான டேப்லெட்!

|

Nokia T10 டேப்லெட் இந்த ஆண்டு ஜூலை மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்த டேப்லெட் ஆனது ஸ்ட்ரீமிங், வீடியோ அழைப்பு ஆதரவு, பணி தேவை, ஃபேம்லி ஃப்ரண்ட்லி அம்சங்கள் என பல ஆதரவுகளைக் கொண்டிருக்கிறது.

இந்த டேப்லெட் தற்போது இந்தியாவில் அறிமுகமாகி இருக்கிறது. மலிவு விலைப் பிரிவில் இந்த டேப்லெட் வெளியாகி இருக்கிறது. முன்னதாகவே டீஸ் செய்தபடி, நோக்கியா டேப்லெட் அமேசான் இந்தியா மற்றும் அதிகாரப்பூர்வ நோக்கியா இணையதளத்தில் கிடைக்கிறது.

நோக்கியா டி10 டேப்லெட் வேரியண்ட் விவரங்கள்..

நோக்கியா டி10 டேப்லெட் வேரியண்ட் விவரங்கள்..

நோக்கியா டி10 டேப்லெட் ஆனது ஓஷன் ப்ளூ வண்ண விருப்பத்தில் வெளியாகி இருக்கிறது. இரண்டு வேரியண்ட்களில் இந்த டேப்லெட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அடிப்படை மாறுபாடாக 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், உயர்நிலை மாறுபாடாக 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வெளியாகி இருக்கிறது.

நோக்கியா டி10 டேப்லெட் விலை..

நோக்கியா டி10 டேப்லெட் விலை..

நோக்கியா டி10 டேப்லெட் இன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.11,799 எனவும், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் ரூ.12,799 எனவும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த நோக்கியா டி10 டேப்லெட் ஆனது வைஃபை மாறுபாடாகும் என்பது கவனிக்கத்தக்க ஒன்று. நிறுவனம் விரைவில் எல்டிஇ+, வைஃபை மாறுபாட்டை அறிமுகம் செய்யும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

நோக்கியா T10 சிறப்பம்சங்கள்

நோக்கியா T10 சிறப்பம்சங்கள்

நோக்கியா T10 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது மிகவும் கச்சிதமான டேப்லெட் ஆகும். இது பாலிகார்பனேட் உடல் வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த டேப்லெட் கீறல்களை மறைக்கும் தன்மை கொண்ட நானோ டெக்ஸ்ச்சர்டு ஃபினிஸ் ஆதரவைக்கொண்டிருக்கிறது.

8 இன்ச் HD LCD டிஸ்ப்ளே

8 இன்ச் HD LCD டிஸ்ப்ளே

நோக்கியா T10 டேப்லெட் ஆனது 1280 x 800 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட 8 இன்ச் HD LCD டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. எச்டி காட்சி தர ஆதரவை இந்த டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் Netflix HD சான்றைக் கொண்டுள்ளது. ஸ்ட்ரீமிங் ஆதரவுக்கு உகந்ததாக இந்த டேப்லெட் இருக்கிறது.

5250 எம்ஏஎச் பேட்டரி..

5250 எம்ஏஎச் பேட்டரி..

நோக்கியா T10 டேப்லெட் ஆனது Unisoc T606 சிப்செட் ஆதரவைக் கொண்டுள்ளது. 3 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி ரேம் என்ற இரண்டு வேரியண்ட்களில் வெளியாகி உள்ளது.

இந்த டேப்லெட் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் மூலம் இயங்குகிறது. இரண்டு வருட ஓஎஸ் மேம்படுத்தல்கள் மற்றும் மூன்று வருட மாதாந்திர பாதுகாப்பு புதுப்பிப்புகளை கொண்டுள்ளது.

இந்த டேப்லெட்டில் 5250 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவும் இருக்கிறது.

8 எம்பி ரியர் கேமரா

8 எம்பி ரியர் கேமரா

டேப்லெட்டில் ஹைப்ரிட் சிம் ஸ்லாட், யூஎஸ்பி டைப்-சி போர்ட், உள்ளமைக்கப்பட்ட எஃப்எம் ரேடியோ ரிசீவர் மற்றும் OZO ஆடியோ தர ஆதரவுடன் கூடிய டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் இடம்பெற்றுள்ளது.

முன்புறத்தில் 2எம்பி வெப்கேம் ஆதரவு உள்ளது. பின்புறத்தில் எல்இடி ஃப்ளாஷ் மற்றும் ஆட்டோபோகஸ் உடன் கூடிய 8 எம்பி ரியர் கேமரா இருக்கிறது.

ஃபேஸ் அன்லாக் ஆதரவு..

ஃபேஸ் அன்லாக் ஆதரவு..

ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், டூயல் பேண்ட் வைஃபை, ஜிபிஎக்ஸ் 2 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இருக்கிறது.

Nokia T10 டேப்லெட்டில் பாதுகாப்பு அம்சத்துக்கு பிங்கர் பிரிண்ட் கைரேகை ஸ்கேனர் ஆதரவு இல்லை என்றாலும் ஃபேஸ் அன்லாக் திறன் இருக்கிறது.

பெரிய பேட்டரி மற்றும் நீடித்த ஆயுள்..

பெரிய பேட்டரி மற்றும் நீடித்த ஆயுள்..

பெரிய பேட்டரி மற்றும் நீடித்த ஆயுளுக்கான தேவை இந்த காலக்கட்டத்தில் பிரதானமாகி வருகிறது. இதை இந்த டேப்லெட் பூர்த்தி செய்யும் என கூறப்படுகிறது. பட்ஜெட் விலையில் கிடைக்கும் இந்த டேப்லெட் கைக்கு அடக்க சாதனமாக இருக்கிறது.

இந்த டேப்லெட் ஆனது சமீபத்திய ஆண்ட்ராய்ட் 12 ஆதரவுடன் மூன்று வருடத்திற்கான பாதுகாப்பு ஆதரவு கிடைக்கும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia T10 Tablet Launched in India with Android 12 OS, 5250mAh Battery: Price Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X