நோக்கியா தயாரித்து இருக்கும் ஐஒஎஸ் இயங்கு தளத்தில் வரும் புதிய மேப்

நோக்கியா நிறுவனம் ஐஒஎஸ் இயங்கு தளத்தில் இயங்கும் நாவிகேசன் மேப் அப்ளிகேசனை அறிமுகம் செய்து வைத்திருக்கிறது. இந்த புதிய அப்ளிகேசனுக்கு ஹியர் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. வரும் வாரங்களில் இந்த ஹியர் அப்ளிகேசன் அப்ளிகேசன் ஸ்டோரில் கிடைக்கும்.
இந்த அப்ளிகேசன் மேப்பை மொபைல்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதுபோல் இதில் வாய்ஸ் வசதியும் உள்ளது. இதன் மூலம் அரசு போக்குவரத்து வழிகளை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும்.
இந்த நோக்கியா அப்ளிகேசனை வெளியிடப் போவது ஆப்பிளா அல்லது கூகுளா என்பது விரைவில் தெரிந்துவிடும். தற்போது இந்த ஹியர் அப்ளிகேசன் எம்.ஹியர்.நெட் என்ற இணையதளத்தில் கிடைக்கிறது. அதோடு இந்த மேப்பைப் பயன்படுத்துபவர்கள் தங்களுக்குத் தெரிந்த இடங்களையும் இந்த மேப்பில் இணைத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு முன்பாக நோக்கியாவில் அவர்கள் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் 3டி மேப்புகளில் கில்லாடியான எர்த்மைன் என்ற நிறுவனத்தை வெகு விரைவில் வாங்க இருப்பதாக நோக்கியா அறிவித்திருக்கிறது. குறிப்பாக இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்த நிறுவனத்தை நோக்கியா வாங்கிவிடும் என்று தெரிகிறது. அதன் மூலம் கூகுள் ஸ்டீரிட்வியூவ் சேவைக்கு போட்டியாக நோக்கியாவின் இந்த புதிய அப்ளிகேசன் இருக்கும் என்று தெரிகிறது.
அதோடு நோக்கியா லைவ்சைட் என்ற ஒரு புதிய தொழில் நுட்பத்தை 3டி மேப்பில் பயன்படுத்துகிறது. நோக்கியாவின் சிட்டி லென்ஸ் அப்ளிகேசனில் இந்த லைவ்சைட் தொழில் நுட்பம் வருகிறது. அதோடு இந்த லைவ்சைட் லூமிய ஸ்மார்ட்போன்களில் இருக்கிறது.


Click it and Unblock the Notifications