Home
News

சார் இந்த பொழப்புக்கு.. NOKIA-வின் ஸ்நேக் கேம் Nothing போன்களில் அறிமுகம்.. ஆனா ஒரு வித்தியாசம் இருக்கு!

சில தினங்களுக்கு முன்னாடி தானேப்பா உன்னைய பத்தி பெருமையா பேசினோம்.. பயபுள்ள, இப்போ தான் சரியான டிராக்-க்கு வந்து இருக்கான்.. 2025 ஆரம்பம் ஆனதுமே அதிரடி காட்ட போகுதுனு பெருமையை பேசினோம்.. அது உனக்கு பொறுக்கலயா? என்று நத்திங் (Nothing) நிறுவனத்தை பார்த்து கேட்கத்தோன்றும் படியான ஒரு வேலை நடந்துள்ளது.

நத்திங் நிறுவனம் நத்திங் கம்யூனிட்டி விட்ஜெட்ஸ் (Nothing Community Widgets) என்கிற புதிய ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. இதன் பெயர் குறிப்பிடுவது போல, இது கேம்ஸ் மற்றும் நத்திங் ஸ்மார்ட்போன்களுக்கான டூல்கள் (Games and Tools) போன்ற விட்ஜெட்களை உள்ளடக்கிய ஆப் ஆகும்.

NOKIA-வின் ஸ்நேக் கேம் Nothing போன்களில் அறிமுகம்!

இந்த ஆப்பில், நோக்கியாவின் கிளாசிக் ஆன மற்றும் மிகவும் பிரபலமான ஸ்நேக் கேம் (Nokia Snake Game) இடம்பெற்றுள்ளது. தற்போது இந்த கேம், நத்திங் போன் 2ஏ பிளஸ் (Nothing Phone 2a Plus) மற்றும் நத்திங் போன் 2 (Nothing Phone 2) ஆகிய நத்திங் ஸ்மார்ட்போன்களுக்கு பிரத்யேகமாக கிடைக்கிறது.

நத்திங் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த ஸ்நேக் விட்ஜெட்டுக்கான யோசனையை நத்திங் கம்யூனிட்டி மெம்பர் ஆன ராகுல் ஜனார்த்தனன் கடந்த ஜனவரி மாதம் முன்மொழிந்துள்ளார். அதனை தொடர்ந்து இந்த கேமை உருவாக்க சிமோன் கிளிஃப் கேமில் பணிபுரிந்த கம்யூனிட்டி டெவலப்பர் ஆன தாமஸ் லெஜெண்ட்ரேவை, நத்திங் நிறுவனம் அணுகியுள்ளது.

NOKIA-வின் ஸ்நேக் கேம் Nothing போன்களில் அறிமுகம்!

மற்ற விட்ஜெட்டை போலவே நத்திங்கின் ஸ்னேக் கேம் ஆனது ஹோம் ஸ்க்ரீனில் வைக்கலாம். இது ரெட்ரோ நோக்கியா ஸ்நேக் கேம்-ஐ போலவே, பாம்பு தன்னுடன் தானே மோதுவதைத் தவிர்க்கும் அதே வேளையில், நீளமாக வளர சிவப்பு நிற புள்ளிகளை சாப்பிட்டு கொண்டே இருக்க வேண்டும். அப்படியாக உண்ணப்படும் ஒவ்வொரு புள்ளியும் பாம்பின் நீளத்தில் ஒரு புள்ளியை சேர்க்கிறது மற்றும் அதன் வேகமும் அதிகரிக்கிறது.

பாம்பு எப்போது அதன் உடலில் மோதி கொள்கிறதோ, அப்போது ஆட்டம் முடிகிறது. அதாவது இது முழுக்க முழுக்க நோக்கியாவின் ஸ்நேக் கேமை போலவே தான் இருக்கிறது. இரண்டிற்கும் இடையே உள்ள ஒரே ஒரு வித்யாசம் என்னவென்றால் நோக்கியா போன்களில் இந்த கேமை விளையாட கீபோர்ட் பட்டன்கள்தேவை; ஆனால் நத்திங் போன்களில் ஸ்வைப் செய்வதன் மூலம் பாம்பை கட்டுப்படுத்தலாம்.

ஒருவேளை உங்களிடம் நத்திங் போன் 2ஏ பிளஸ் மற்றும் நத்திங் போன் 2 இருந்தால், கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) அணுக கிடைக்கும் நத்திங் கம்யூனிட்டி விட்ஜெட்ஸ் ஆப்பை டவுன்லோட் செய்வதன் மூலம் இந்த ஸ்நேக் கேமை நீங்கள் விளையாடலாம். இதேபோல கம்யூனிட்டி மெம்பர்கள் நத்திங் நிறுவனத்துடன் பகிர்ந்து கொள்ளும் கான்செப்ட்களை, விட்ஜெட்டாக மாற்ற முடியுமா என்பதை நத்திங் நிறுவனத்தின் மென்பொருள் குழு தீர்மானிக்கும்.

முன்னரே குறிப்பிட்டபடி, சில தினங்களுக்கு முன்னர் தான் நத்திங் நிறுவனம் தனது ஸ்மார்ட்போன் அறிமுகம் தொடர்பான ஸ்டைலை மாற்றிக்கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. கார்ல் பெய் (Carl pei) தலைமையிலான நத்திங் (Nothing) நிறுவனம் கடந்த 2022 மார்ச் மாதத்தில் இருந்து தற்போது வரையிலாக வெறும் 4 ஸ்மார்ட்போன்களை மட்டுமே அறிமுகம் செய்துள்ளது.

ஆனால் நத்திங் நிறுவனம் இந்த போக்கை மாற்றும்படியாக, வருகிற 2025 ஆம் ஆண்டில் தொடக்கத்திலேயே மொத்தம் 3 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. அதாவது நத்திங் போன் 2-க்கு அடுத்தபடியாக வரும் நத்திங் போன் 3 (Nothing Phone 3), அதோடு சேர்த்து நத்திங் போன் 3 மாடலின் ப்ரோ அல்லது பிளஸ் மாடல் மற்றும் நத்திங் போன் 2ஏ-வின் அப்கிரேடட் வெர்ஷனாக நத்திங் போன் 3ஏ (Nothing Phone 3a) ஆகிய 3 மாடல்கள் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia Snake Game Now Available in Nothing Phone Widget New Nothing Community Widgets App
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X