Home
News

நோக்கியா-வின் ஸ்மார்ட் டிவி இந்தியாவில் அறிமுகம்: விலை என்ன தெரியுமா?

டிசம்பர் 5 ஆம் தேதி புதுதில்லியில் நடைபெறவுள்ள வெளியீட்டு நிகழ்வில் நோக்கியா தனது முதல் ஸ்மார்ட் டிவி அறிமுகம் செய்துள்ளது. நோக்கியா என்றாலே இந்தியர்களிடம் தனி ஈர்ப்பு உண்டு. இந்த நிலையில் செல்போன் தளத்தில் இருந்து வீட்டு உபயோக பொருளான டிவி-யை அறிமுகம் செய்துள்ளது.

பிளிப்கார்ட் மற்றும் நோக்கியா கூட்டணி

பிளிப்கார்ட் மற்றும் நோக்கியா கூட்டணி

குறிப்பாக இந்தியாவில் பிளிப்கார்ட் மற்றும் நோக்கியா கூட்டணி சேர்ந்து ஸமார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்தது. மேலும் இந்த சாதனங்களின் சில அம்சங்களைப் பார்ப்போம்.

55-இன்ச் டிஸ்பிளே

55-இன்ச் டிஸ்பிளே

இந்த ஸ்மார்ட் டிவியானது 55-இன்ச் டிஸ்பிளே மற்றும் 4கே யுஎச்டி ரெசல்யூசன் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளதாக அந்நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சான்றிதழ்

சான்றிதழ்

இந்த நோக்கியா ஸ்மார்ட் டிவி ஆனது சிறந்த மென்பொருள் மற்றும் சேமிப்பு திறனுடன் வந்துள்ளது என்று கூறப்படுகிறது. குறிப்பாக இது பிஐஎஸ் (இந்திய தர நிர்ணய பணியகம்) சான்றிதழ் அளித்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட் டிவியை தரத்தை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக உள்ளது.

ஆண்ட்ராய்டு 9.0பை

ஆண்ட்ராய்டு 9.0பை

நோக்கியா ஸ்மார்ட் டிவி, ஆண்ட்ராய்டு 9.0பை-இயங்குவதாக தெரிவித்துள்ளது. சந்தையில் உள்ள மற்ற ஸ்மார்ட் டிவிகளைப் போலவே, இதுவும் கூகிள் பிளே ஸ்டோருடன் முன்பே நிறுவப்பட்டிருப்பதாகவும், சிறந்த மாறுபட்ட விகிதத்தை வழங்கும் நுண்ணறிவு டிம்மிங் போன்ற அம்சங்களுடன் வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஜேபிஎல் சவுண்ட் ஸ்பீக்கர்

ஜேபிஎல் சவுண்ட் ஸ்பீக்கர்

நோக்கியா டிவி ஜேபிஎல் சவுண்ட் ஸ்பீக்கர் ஆதரகளுடன் வெளிவருகிறது. மேலும் எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட், ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்சம் மற்றும் விலை:

அம்சம் மற்றும் விலை:

சிறந்த ஒலி தரத்திற்காக ஜேபிஎல் ஆடியோ தொழில்நுட்பத்தையும், அதன் விளைவாக 24 வாட் ஸ்பீக்கர்களையும் ஆதரிக்கும் இந்த சமீபத்திய நோக்கியா ஸ்மார்ட் டிவியானது இந்தியாவில் ரூ.41,999 முதல் வாங்க கிடைக்கும். இதுவொரு 55 இன்ச் அளவிலான 4 கே ஸ்மார்ட் டிவி ஆகும். அதேபோல், நோக்கியா நிறுவனத்தின் இந்த முதல் ஸ்மார்ட் டிவி ஆனது தெகிளியர் வியூ தொழில்நுட்பம் மற்றும் கிளியர் சவுண்ட் தொழில்நுட்பத்தையும் ஆதரிக்கிறது.

Best Mobiles in India

English summary
Nokia smart tv india sales starts today via flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X