சென்னையில் நோக்கியா ஸ்ட்ரைக்

Posted By:

சென்னையில் நோக்கியா சைமன்ஸ் நெட்வொர்க் நிறுவனத்தில் டெலிகாம் சாதனம் பிரிவை சார்ந்த தொழிலாளர்கள் பல்வேறு நிபந்தனைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சிஐடியு(CITU) யுனியனை சேர்ந்த 120 தொழிலாளர்கள் சங்கதின் அங்கிகாரம்,சஸ்பெண்ட் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு திரும்பவும் வேலை,சம்பள உயர்வு போன்ற பல்வேறு நிபந்தனைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Click Here For New Nokia Handsets Gallery

சென்னையில் நோக்கியா ஸ்ட்ரைக்

நோக்கியா சைமன்ஸ் நெட்வொர்க் நிறுவனம் வெறும் 60 தொழிலாளர்களே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிதிதுள்ளது. மேலும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் கூறியது.

நோக்கியா சைமன்ஸ் நெட்வொர்க் நிறுவனம் 700 தொழிலாளர்களை கொண்டுள்ளது. அண்மையில் இந்நிறுவனம் 72 தொழிலாளர்களை சஸ்பெண்ட் செய்துள்ளது அதில் 67 தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு செர்த்துள்ளது.

சிஐடியு(CITU) யுனியனை சார்ந்த தொழிலாளர்கள் மீதம் உள்ள 5 தொழிலாளர்களையும் வேலைக்கு சேர்க்க வேண்டும் என்று போராடுகின்றனர். இந்த போராட்டம் ஜூன் 7 முதல் நடந்து வருகிறது.

நோக்கியா சைமன்ஸ் நெட்வொர்க் நிறுவனத்தினர் எல்லா தொழிலாளர்களையும் பாரபட்சம் பார்க்காமல் சட்டத்தின்படி சமமாக நடத்துவதாகவே தெரிவித்துள்ளனர்.

தங்களது நிபந்தனைகளை நிறுவனத்தினர் ஏற்றுக்கொளிளவில்லை என்றால் மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்பதை திங்கட்கிழமை முடிவு செய்வோம் என்று சிஐடியு(CITU) யுனியனை சார்ந்த தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot