Home
News

பிப்ரவரி 26-ல் என்னென்ன நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகள் அறிமுகம்.?

வரும் பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி நோக்கியாவிற்கும், நோக்கியாவாசிகளுக்கும் ஒரு பெரிய நாளாக இருக்கும்.

By Muthuraj

மாபெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே துளியும் சத்தமின்றி நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனம் நோக்கியா 6 ஆண்டராய்டு கருவியை அறிமுகம் செய்து நோக்கியாவின் மறுவருகையை சமீபத்தில் பதிவு செய்தது.

ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட், 2.5டி கொரில்லா கிளாஸ், 5.5-அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே உட்பட வகையான சிறப்பம்சங்களை கொண்டுள்ள நோக்கியா 6 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனின் இன்ப அதிர்ச்சையையே தாங்கி முடிக்காத நமக்கு அடுத்த இன்ப அதிர்ச்சி விரைவில் நிகழும் அதுவும் அடுத்த மாதம் 26-ஆம் தேதியன்று நிகழும் என்று கூறினால் அது நிச்சயமாக பேரின்ப அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.

நோக்கியா நிறுவனமே அறிவித்துள்ளது

நோக்கியா நிறுவனமே அறிவித்துள்ளது

ஆம். வரும் 2017, பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதியன்று பல நோக்கியா ஆண்ட்ராய்டு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் லீக்ஸ் தகவலோ அல்லது ஊகங்கள் அடிப்படையிலான தகவலோ அல்ல. இந்த தகவலை பின்னிஷ் ஸ்மார்ட்போன் விற்பனையாளரான நோக்கியா நிறுவனமே அறிவித்துள்ளது.

உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில்

உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில்

நோக்கியா நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் சுமார் ரூ.16,739/- என்ற விலைக்கு அறிமுகமான சில நாட்களில்லேயே மீண்டும் நோக்கியா அதன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை தொடங்கவுள்ளது என்பதை நோக்கியா தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் அறிவித்துள்ளது.

தொடங்கும் நோக்கத்தில்

தொடங்கும் நோக்கத்தில்

"தயாராக இருங்கள்..! நோக்கியா 6 கருவி சீனாவிற்கு வருகிறது, மேலும் பல அறிவிப்புகள் பிப்ரவரி 26-ஆம் தேதி வெளியிடப்படும்" என்று போஸ்ட் செய்துள்ளது. இதன் மூலம் தெளிவாக நோக்கியா பல புதிய சாதனங்களை தொடங்கும் நோக்கத்தில் இருப்பது தெரிய வருகிறது.

எந்த ஆண்ட்ராய்டு கருவி

எந்த ஆண்ட்ராய்டு கருவி

இருப்பினும் அடுத்த நோக்கியாவின் எந்த ஆண்ட்ராய்டு கருவி அறிமுகமாகும் என்ற எந்த தகவலும் வெளியாவிலை என்பது ஒருபக்கமிருக்க மறுபக்கம் வதந்திகள் படி நோக்கியா டி1சி, நோக்கியா பி மற்றும் ஒரு நோக்கியா சி1 ஆகிய கருவிகள் தான் அறிமுகம் செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றன.

எம்டபுள்யூசி 2017

எம்டபுள்யூசி 2017

மேலும் சில வதந்திகளின்படி, பிப்ரவரி 27-ல் நடக்கவுள்ள எம்டபுள்யூசி 2017-ல் நோக்கியா பல சாதனங்களை அறிமுகம் செய்யும் அதனால் தான் அந்நிகழ்விற்கு ஒரு நாள் முன்னர், அதாவது பிப்ரவரி 26 அன்று மேலும் பல விவரங்களை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் நம்பப்படுகிறது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

அறிமுகம் : ஆண்ட்ராய்டு நோக்கியா 6, என்ன விலை, என்னென்ன சிறப்பம்சங்கள்?

Best Mobiles in India

English summary
Nokia set to launch several Android smartphones on February 26. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X