Subscribe to Gizbot

நோக்கியாவின் "பிப்ரவரி பிளான்ஸ்" : செம்ம அதிரடி காத்திருக்கு.!

Written By:

உலகம் முழுக்க மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 6 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் தொடங்கப்பட்ட பிறகு நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகள் மீதான ஆர்வம் பூதாகரமாய் கிளம்பியுள்ளது என்றே கூறலாம். வாடிக்கையாளர்களின் பரவலான எதிர்பார்ப்புகள் அனைத்தையும் பூர்த்தி செய்யும் நோக்கத்தில் நிறுவனம் பணியாற்றி கொண்டிருப்பது போல தெரிகிறது.

அதாவது அடுத்த மாதம் பார்சிலோனாவில் நடைபெற உள்ள எம்டபுள்யூசி 2017 நிகழ்வில் மொபைல் போன் முன்னோடியான நோக்கியா அதன் ஸ்மார்ட்போன்கள் ஒரு பரவலான முறையில் வெவ்வேறு வகைகளில் தொடங்கவுள்ளதாக வதந்திகள் தெரிவிக்கின்றன. எனினும், மறுபக்கம் நோக்கியா மற்றும் நோக்கியா பிராண்ட் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி நிறுவனம் சார்பில் இருந்து எந்தவித உறுதியான தகவலும் கிடையாது, அதற்காக கிடைக்கப்பெற்ற தகவல்களை வழங்காமல் இருக்க முடியுமா..? இது நோக்கியா சார்ந்த தகவல் ஆகிற்றே.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
அடுத்த என்ன நோக்கியா கருவி

அடுத்த என்ன நோக்கியா கருவி

நோக்கியா 6 சாதனம் அறிமுகமான நாளில் இருந்தே எச்எம்டி நிறுவனத்திடம் இருந்து அடுத்த என்ன நோக்கியா கருவி வெளியாகும் என்ற எதிர்பார்ப்புகளும் லீக்ஸ் தகவல்களும் இண்டர்நெட்டை ஆளுகின்றன. குறிப்பாக மொபைல் வோர்ல்ட் காங்கிரஸ் 2017 நிகழ்வை குறிவைத்து பரவலான தகவல்கள் அனுதினமும் கிடைத்த வண்ணம் உள்ளது. சரி அப்படி என்னதான் நோக்கியா திட்டம் போடுகிறது என்பதை பற்றி எங்களுக்கு இதுவரை தெரிந்த தகவல்களின் தொகுப்பே இது.

மிகவும் மலிவு விலையில் நோக்கியா 5

மிகவும் மலிவு விலையில் நோக்கியா 5

வதந்திகளின்படி பின்னிஷ் தொழில்நுட்ப நிறுவனமான நோக்கியா அதன் நோக்கியா 5 ஸ்மார்ட்போன் வெளியிடுமென்று பேச்சு அடிபட்டுள்ளது. ஆனால் இக்கருவியின் வெளியீட்டு தேதி பற்றிய எந்த அறிவிப்பையும் நோக்கியா அல்லது எச்எம்டி உறுதி செய்யவில்லை. வதந்திகள் நம்பகமானதாக இருப்பின் இந்த மாதம் ஆரம்பத்தில் தொடங்கப்பட்ட நோக்கியா 6 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை விட நோக்கியா 5 கருவி மிகவும் மலிவு விலையில் அறிமுகமாகலாம்.

நோக்கியா

நோக்கியா "ஹார்ட்"

நோக்கியா 5 கருவியுடன் இணைந்து நோக்கியா "ஹார்ட்" என்றவொரு ஸ்மார்ட்போன் திரைவிலக்கமும் அடுத்த மாதம் நிகழலாம். இக்கருவி பற்றிய தகவல்களை ஒரு சில நாட்களுக்கு முன்பு தான் கீக்பென்ஞ்-ல் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. வதந்திகள் கூறும் அம்சங்கள் படி, நோக்கியா ஹார்ட் ஒரு 5.2 அங்குல எச்டி காட்சி, 16ஜிபி உள்ளடக்க சேமிப்பு மற்றும் 2ஜிபி ரேம் சேர்த்து, க்வால்காம் ஸ்னாப் 430 சிப்செட் மூலம் இயக்கப்படலாம். ஒளியியல் அடிப்படையில், வரவிருக்கும் நோக்கியா ஹார்ட் கருவி ஒரு 13எம்பி பின்புற கேமரா மற்றும் ஒரு 8எம்பி முன்பக்க கேமரா கொண்டிருக்கலாம்.

ஆண்ட்ராய் டு 7.0 நௌவ்கட்

ஆண்ட்ராய் டு 7.0 நௌவ்கட்

பெட்டிக்கு வெளியே ஆண்ட்ராய் டு 7.0 நௌவ்கட் கொண்டு இயங்கும் என்று எதிர்பார்க்கப்படும் இக்கருவி பற்றிய விவரங்கள், விலை மற்றும் வடிவமைப்பு பற்றிய தெளிவான தகவல் இல்லை. அதை அறிய எம்டபுள்யூசி 2017 நிகழ்வு வரை நாம் பொறுமையுடன் காத்திருக்க மட்டுமே முடியும்.

நோக்கியா 8 மற்றும் நோக்கியா பி1

நோக்கியா 8 மற்றும் நோக்கியா பி1

நோக்கியா 5 மற்றும் நோக்கியா ஹார்ட் தவிர, வதந்திகள்களின் படி நோக்கியா-எச்எம்டி கூட்டணி நோக்கியா 8 மற்றும் நோக்கியா பி1 என்ற இரண்டு புதிய பிளாக்ஷிப் கருவிகளை அறிமுகம் செய்யுமென்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நோக்கியா பி1 கருவியானது 256ஜிபி உள்ளடக்க சேமிப்பு மற்றும் 6ஜிபி ரேம் பெற்று க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மூலம் இயக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

விலை

விலை

வதந்திகளின் படி, நோக்கியா பி 1 கருவியானது தண்ணீர் மற்றும் தூசி எதிர்ப்பு சான்றிதழ் உடன் கைரேகை ஸ்கேனர், 5.3 அங்குல முழு எச்டி டிஸ்ப்ளே கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உடன் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் இணைந்த 3,500எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விலை விவரங்களை பொறுத்தவரை 128ஜிபி மாறுபாடு ரூ.54,539/- என்றும் 256ஜிபி மாறுபாடு ரூ.64,765/- என்றும் நிர்ணயிக்கப்படலாம்.

க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி

க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி

வெளியான முந்தைய அறிக்கைகளின்படி நோக்கியா க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி கொண்ட ஒரு ஸ்மார்ட்போனை துவக்க திட்டமிட்டுள்ளது. எனினும், வரவிருக்கும் நோக்கியா சாதனங்கள் பற்றி எந்த விதமான அதிகாரப்பூர்வ தகவல்களும் கிடையாது. மேலும் பல அப்டேட்ஸ்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருங்கள்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

பிரீமியம் மாறுபாடாக களமிறங்கும் சியோமி மி 6 (லீக் அம்சங்கள்).!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Nokia's plan for MWC 2017: Everything you should know. Read more about this in Tamil GizBot.

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot