Home
News

விற்பனை விளிம்பில் சென்னை நோக்கியா ஆலை

உலகின் மிகப்பெரிய மொபைல் தயாரிப்பு ஆலையாக விளங்கிய நோக்கியா ஸ்ரீபெரும்புதுர் ஆலை விற்பனைக்கு வர இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பின்லாந்து நிறுவனம் ஆலையின் விற்பனையை ஹில்கோ என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. நோக்கியா ஆலையின் உற்பத்தி நவம்பர் மாதம் 1ஆம் தேதி முதல் நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 விற்பனை விளிம்பில் சென்னை நோக்கியா ஆலை

ஆலை மற்றும் அதில் இருக்கும் கருவிகளின் மதிப்பு சுமார் 54 மில்லியன் யூரோ வரை இருக்கும் என்று கூறப்படுகின்றது. இனி நோக்கியா போன்கள் தயாராவதில்லை அதனால் யாரும் அதை வாங்க முன் வராத நிலையில் தான் நிறுவனத்தின் விற்பனை முடிவிற்கு காரணமாக இருக்ககூடும்.

[மொபைல் போன் கான்டாக்ட்களை ப்ளூடூத் மூலம் பேக்கப் செய்வது எப்படி]

வருமான வரித்துறை அதிகாரிகள் கூறும் போது, நோக்கியா நிறுவனம் பல விதங்களில் முறைகேடுகளை செய்ததாகவும், மொத்தமாக ரூ.21,000 கோடி வரை முறைகேடு செய்யப்பட்டுள்ளது. இது வரை தில்லி உயர்நீதிமன்றத்திற்கு சுமார் 500 கோடு வரை நோக்கியா தரப்பில் செலுத்தப்பட்டுள்ளது, என்று அவர்கள் தெரிவித்தனர்.

 விற்பனை விளிம்பில் சென்னை நோக்கியா ஆலை

நோக்கியாவை தொடர்ந்து பாக்ஸ்கான் நிறுவனமும் டிசம்பர் 24 ஆம் தேதி முதல் உற்பத்தியை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி ஸ்ரீ பெரும்புதுரில் சால்காம்ப் மற்றும் லைட்-ஆன்-மொபைல் நிறுவனங்கள் மட்டும் தான் இயங்கி வருகின்றன. இவற்றில் மொத்தம் 3,290 பேர் வேலை பார்த்து வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Nokia's Chennai plant to be sold off in parts. The Sriperumbudur plant of Nokia, once the world's single largest mobile phone-making unit, may be sold in parts.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X