நோக்கியாவின் புதிய ஹியர் மேப் அப்ளிக்கேஷன்!

Posted By: Staff
நோக்கியாவின் புதிய ஹியர் மேப் அப்ளிக்கேஷன்!

கூகுள் மேப்பை தொடங்கி, நோக்கியா நிறுவனம் புதிய மேப் வசதியினை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஐபோன், ஐபேட் மற்றும் ஐபோட் டச் ஆகிய எலக்ட்ரானிக் சாதனங்களில் பயன்படுத்த புதிய மேப் வசதியினை வழங்குகிறது.

புதிதாக அறிமுகமான கூகுள் மேப் மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. இதன் பின் ஹியர் என்ற பெயரில் நோக்கியா நிறுவனம் புதிய மேப்பினை அறிமுகம் செய்கிறது.

ஆப்பிள் ஐடியூன்ஸில் ஹியர் மேப்...

ஆனால் இந்த மேப் நோக்கியா எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு பொருந்துமா என்பது பற்றிய தகவல்கள் இன்னும் ஏதும் சரிவர வெளியாகவில்லை. இந்த மேப்பின் வசதிகள் கிட்டத்தட்ட 200 நாடுகளில் எளிதாக பயன்படுத்தும் வகையில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

  • மேப் வியூ, லைவ் ட்ரேஃபிக் வியூ, ப்பளிக் ட்ரேன்ஸ்போர்ட் லைன் வியூ, சேட்டிலைட் வியூ ஆகிய வசதிகளை இந்த மேப்பில் பெறலாம்.

  • இந்த மேப்பில் பார்க்கும் தகவல்களை எளிதாக சேவ் செய்து வைத்து கொள்ளலாம்.

  • இதன் தகவல்களை சிறப்பாக எஸ்எம்எஸ், இமெயில் மற்றும் சோஷியல் நெட்வொர்க் ஆகிய வசதிகள் மூலம் சேவ் செய்து வைத்து கொள்ளவும் முடியும்.

  • நோக்கியா அக்கவுன்ட் அல்லது ஃபேஸ்புக் அக்கவுன்ட் மூலம் நோக்கியாவின் ஹியர் மேப் வசதிக்கு எளிதாக சைன்இன் செய்ய முடியும்.

  • போக்குவரத்து மர்றும் வாகனங்கள் ஓட்டிச் செல்லும் வழிகளை எளிதாக இந்த மேப் வசதியின் தெரிந்து கொள்ளலாம்.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்