சென்னை நோக்கியா ஆலை பிரச்சனைக்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம்

By Meganathan
|

தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாததே சென்னை நோக்கியா ஆலை மூடப்பட்டதற்கு முக்கிய காரணம் என ஐரோப்பிய யூனியன் கருத்து தெரிவித்துள்ளது.

  சென்னை நோக்கியா ஆலை பிரச்சனைக்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம்

பின்லாந்து நாட்டை சேர்ந்த நோக்கியா நிறுவனம் தனது உலகளாவிய மொபைல் வியாபாரத்தை 7.2 பில்லியன் டாலர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு விற்றது. ஆனால் நோக்கியா சென்னை ஆலை மட்டும் வருமான வரி சிக்கல்களின் காரணத்தால் விற்க முடியாமல் போனது. நோக்கியாவின் மிகப்பெரிய ஆலையாக இருந்த சென்னை ஆலையில் கடந்த மாதம் முதல் தயாரிப்பு பணிகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டன.

[ஐபோன் 6 குறித்து உங்களுக்கு தெரிந்திராத அம்சங்கள்]

நேற்று சென்னையில் நடைபெற்ற விழாவில் பேசிய ஐரோப்பிய யூனியன் தூதர் ஜாவோ க்ரவின்ஹோ ஐரோப்பிய நிறுவனங்களை பொருத்த வரை தமிழ் நாடு மற்றும் நோக்கியா ஆலை மிகவும் முக்கியம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது. முதலீடு செய்யவும் ஏற்ற இடமாக தமிழகம் திகழ்கிவதாக குறிப்பிட்டார்.

  சென்னை நோக்கியா ஆலை பிரச்சனைக்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம்

தமிழ் நாட்டில் இத்தனை பெரிய வேலைவாய்ப்பு இழப்புகளை சந்தித்தும் மாநில அரசு மவுனம் காத்தது ஏன் என்றும் க்ரவின்ஹோ கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்து பேசுகையில் அரசு தரப்பு துணை ஆனையர் வேல்முருகன் தமிழக அரசு இந்த விவகாரசத்தில் மவுனம் காக்கவில்லை, மேலும் அரசு தரப்பில் இருந்து அனைத்து உதவிகளும் நோக்கியாவிற்கு அளிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.

[எஸ்எம்எஸ் பற்றி உங்களுக்கு தெரியாத சுவாரஸ்யங்கள்]

மூன்று ஷிப்டகளில் சுமார் 40,000 பேர் வரை வேலை பார்த்த சென்னை ஆலையில் ஒவ்வொரு நொடிக்கும் சுமார் ஏழு மொபைல்கள் வரை தயாரிக்கப்பட்டதோடு நோக்கியாவின் மிகப்பெரிய ஆலையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Nokia Plant Closure EU Blames TN Government for 'Lack of Support'. European Union on Monday put the blame on "lack of support from the state" for loss of jobs arising from suspension of Nokia's plant near Chennai.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X