Home
News

Nokia லிஸ்டில் 1 இல்ல மொத்தம் 4 புது Mobile போன்-ஆ? ரூ.10,000 விலைக்குள் இப்படி ஒரு டிவிஸ்ட்-ஆ!

நோக்கியா (Nokia) நிறுவனம் அதன் ஸ்மார்ட்போன் வரிசையில், புதிதாக சில ஸ்மார்ட்போன் சாதனங்களை சேர்க்கவுள்ளது. இந்த முறை நிறுவனம், ஒன்றல்ல இரண்டல்ல ஏறக்குறைய 4 புது ஸ்மார்ட்போன் சாதனங்களை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யார் கண்களுக்கும் தென்படாத ஒரு தகவல் இணையதளத்தில் இப்போது சிக்கியுள்ளது. சமீபத்தில் டிப்ஸ்டர் ஒருவரால், நான்கு புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் சாதனங்கள் புளூடூத் SIG சான்றிதழைப் பெற்றுள்ளன என்று கூறப்படுகிறது. இந்த சாதனங்கள் TA-1533, TA-1536, TA-1541 மற்றும் TA-1539 ஆகிய மாடல் எண்களுடன் BlueTooth SIG Certificate தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.

Nokia லிஸ்டில் 1 இல்ல மொத்தம் 4 புது Mobile போன்-ஆ? டிவிஸ்ட்!

இந்த நான்கு புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் சாதனங்களும் புளூடூத் 4.2 மற்றும் Wi-Fi ஆதரவுடன் 2G, 3G மற்றும் 4G நெட்வொர்க் இணைப்புகளை ஆதரிக்கின்றன என்பதை SIG பட்டியல் விபரம் தெளிவாக காண்பிக்கிறது. இந்த சாதனங்களைப் பற்றி அதிக தகவல்கள் கிடைக்கவில்லை என்றாலும் கூட, இந்த நான்கு மாடல்களும் வெவ்வேறு மாதிரி எண்களைக் கொண்ட ஒரே சாதனமாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.

ஆம், அப்படி தான் யூகிக்கப்பட்டுள்ளது. சமீபத்திய அறிக்கைகளின் படி, பார்சிலோனாவில் MWC நிகழ்வுக்கு முன்னதாக நோக்கியா நிறுவனம் அதன் வரிசையில், நோக்கியா C22 மாடலை அறிவித்தது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் சமீபத்தில் TA-1533 மாடல் எண் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விரைவில் உலக சந்தைகளில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று சான்றிதழ் சுட்டிக்காட்டுகிறது.

நோக்கியா C22 ஸ்மார்ட்போன் பட்ஜெட்டுக்கு ஏற்ற சாதனமாக அறிமுகம் செய்யப்படும் என்று நமபபடுகிறது. இது கடந்த 25, பிப்ரவரி, 2023 அன்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட் போன் சாதனம் 6.5' இன்ச் கொண்ட IPS LCD டிஸ்ப்ளே உடன் 720 x 1600 பிக்சல்கள் உடைய தெளிவுத்திறனுடன் வருகிறது. இந்த புதிய நோக்கியா சாதனம் ஆண்ட்ராய்டு 13 (Go Edition) இயங்குதளத்தில் இயங்குகிறது.

Nokia லிஸ்டில் 1 இல்ல மொத்தம் 4 புது Mobile போன்-ஆ? டிவிஸ்ட்!

இது 1.6 GHz இல் இயங்கும் Unisoc SC9863A (28nm) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த புதிய நோக்கியா சி 22 சாதகமானது, 2GB அல்லது 3GB ரேம் உடன் 64GB ஸ்டோரேஜ் உடன் வருகிறது. ஸ்மார்ட்போனின் கேமரா பற்றி பேசுகையில், இந்த சாதனம் 13MP + 2MP டூயல் கேமரா அமைப்புடன் பின்புறத்தில் வருகிறது. இந்த சாதனம் 8MP கேமரா முன்பக்க கேமராவுடன் வருகிறது.

இந்த Nokia C22 சாதனம் பின்புறத்தில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் மற்றும் பல முக்கியமான ஸ்மார்ட்போன் சென்சார்களுடன் வருகிறது. இந்த சாதனம் 5000mAh பேட்டரி மூலம் 10W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் காணப்பட்டுள்ளது. இந்த புதிய Nokia C22 ஸ்மார்ட்போன் சாண்ட் மற்றும் மிட்நைட் பிளாக் வண்ண வகைகளில் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

Nokia C22 சாதனம் அதன் பயனர்களுக்கு மூன்று நாள் நீண்ட பேட்டரி ஆயுளை வழங்கும் என்றும், இது AI- இயங்கும் பேட்டரி மேலாண்மை அமைப்பைக் கொண்டுள்ளது என்றும் நோக்கியா கூறியுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை EUR 109 ஆக இருக்கலாம். இந்திய மதிப்பின் படி, இது தோராயமாக ரூ. 9,500 என்ற விலையில் நெருங்கும் என்று யூகிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் விரைவில் நடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Nokia Plans To Launch 4 New Smartphones Found in Bluetooth SIG Certification
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X