புல்லட் ப்ரூஃப் போன்று செயல்பட்ட நோக்கியா போன்!

By Meganathan
|

நோக்கியா போன்கள் ஒரு காலத்தில் அனைவரும் பயன்படுத்தும் பிரான்டாக இருந்தது. இன்றும் நோக்கியா என்றால் அனைவரும் விரும்பத் தான் செய்கின்றனர். எனினும் பல்வேறு காரணங்களால் அந்நிறுவனம் ஸ்மார்ட்போன் சந்தையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளத் தவறி விட்டது. என்றாலும் அந்நிறுவனம் மீண்டும் ஸ்மார்ட்போன் சந்தையில் களமிறங்க இருக்கின்றது.

துப்பாக்கிச் சூடு

துப்பாக்கிச் சூடு

சமீபத்தில் துப்பாக்கிச் சூடு ஒன்றில் நோக்கியா கருவி மூலம் அதன் பயனர் உயிர் பிழைத்திருக்கும் சம்பவம் அரங்கேறியுள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ஆப்கானிஸ்தான்

ஆப்கானிஸ்தான்

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மேலாளர் ஒருவரின் ட்வீட் படி, ஆப்கானிஸ்தானில் பயனர் ஒருவரின் பாக்கெட்டில் இருந்த நோக்கியா போனின் மீது தோட்டா தாக்கியதாகவும், இதில் பயனருக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

நோக்கியா புல்லட் ப்ரூஃப்

நோக்கியா புல்லட் ப்ரூஃப்

நோக்கியா கருவி தோட்டாவையே தடுத்திருப்பது இது ஒன்றும் முதல் முறை கிடையாது. ஏற்கனவே 2014 ஆம் ஆண்டில் லூமியா 520 கருவியும் தோட்டாவினை தடுத்து நிறுத்தியது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மற்ற ஸ்மார்ட்போன்கள்

மற்ற ஸ்மார்ட்போன்கள்

நோக்கியா இல்லாமல் ஐபோன் 5சி, எச்டிசி Evo 3D போன்ற ஸ்மார்ட்போன்களும் புல்லட் ப்ரூஃப் போன்று செயல்பட்டிருக்கின்றன. இருந்தும் சில கருவிகள் பேட்டரி காரணமாக வெடித்துச் சிதறும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

கேலக்ஸி நோட்7

கேலக்ஸி நோட்7

சில கருவிகள் தோட்டாக்களையே தடுத்து நிறுத்தும் வலிமை கொண்டிருந்தாலும், சில கருவிகள் பேட்டரி மூலம் பயனருக்கு ஆபத்து விளைவிக்கின்றன. சமீபத்தில் கேலக்ஸி நோட் 7 கருவி இதற்கு நல்ல உதாரணமாகியுள்ளது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Nokia Phone Saves Man's Life by Stopping Bullet Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X