ஸ்னாப்டிராகன் 835, 6ஜிபி ரேம் உடன், அடுத்தது நோக்கியா பி1 தான்.?

ஸ்னாப்டிராகன் 835, 6பிஜி ரேம் மற்றும் அற்புதமான 256ஜிபி உள்ளடக்க சேமிப்பு என பல சூப்பர் அம்சங்களை கொண்ட நோக்கியா பி1 தலைமை ஸ்மார்ட்போன் எம்டபுள்யூசி 2017-ல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

|

இந்த ஆண்டின் அதிரடியான ஸ்மார்ட்போன் ஆன நோக்கியா 6 கருவியானது அதன் பிளாஷ் விற்பனை பதிவில் 1 மில்லியன் பதிவுகளை நிகழ்த்தி இதுவரையிலாக இருந்த அனைத்து மொபைல் பதிவு சாதனைகளையெல்லாம் சத்தம் போடாமல் காலி செய்துவிட்டது. நோக்கியா 6 கருவியின் சாதனையும் மக்களை சென்றடையும் தன்மையும் இத்தோடு முடிந்து போவதில்லை என்பது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் அதன் அடுத்த பிளாக்ஷிப்ஸ்மார்ட்போன் ஆன நோக்கியா பி1 கருவி வரவிருக்கும் எம்டபுள்யூசி 2017-ல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டின் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நிகழ்வு மிக அருகாமையில் வந்துவிட்ட நிலையில் வதந்திகளின்படி இந்த் உலக தொழில்நுட்ப நிகழ்வில் நோக்கியா பி1 கருவி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உடன் நோக்கியா பி1 கருவியில் இடம்பெறும் அட்டகாசமான அம்சங்கள் சார்ந்த தகவல்களும் வெளியாகியுள்ளன.

இரண்டு மறுபாடு

இரண்டு மறுபாடு

ஒரு ரஷியன் இணையதள அறிக்கையின்படி, நிறுவனத்தின் உயர்-இறுதி கருவியான நோக்கியா பி1 ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆனது ஒரு நிலையான கண்ணாடி பீங்கான் வடிவமைப்பு கொண்ட 256ஜிபி உள்ளடக்கிய சேமிப்பு மற்றும் ஒரு உலோக சட்ட பூசிய வடிவமைப்பு கொண்ட 128ஜிபி ரோம் என இரண்டு மறுபாடுகளில் அறிமுகமாகும் என்று கூறுகிறது.

ஷார்ப் அக்வாஸ் எக்ஸ்எக்ஸ்3

ஷார்ப் அக்வாஸ் எக்ஸ்எக்ஸ்3

இந்த தகவலின் கீழ் கூறப்படும் ஸ்மார்ட்போன் ஆனது 2016-ல் ஜப்பானில் தொடங்கப்பட்ட ஷார்ப் அக்வாஸ் எக்ஸ்எக்ஸ்3 வடிவமைப்பை அடிப்படையாக கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

மேலும் நோக்கியா பி1 அம்சங்களை பொருத்தமட்டில் சமீபத்திய க்வால்காம் ஸ்னாப்டிராகன் 835 செயலி, கார்னிங் கொரில்லா கண்ணாடி 5 பூச்சு, ஒரு 5.3 அங்குல ஐஜிஇசெட்ஒ (IGZO) டிஸ்ப்ளே, பல்பணி செய்ய உதவும் க்வால்காம் சிப்செட் உடனான 6ஜிபி ரேம் ஆகியவைகளும் உள்ளடக்கம்.

ஆண்ட் ராய்டு 7.0 நௌவ்கட்

ஆண்ட் ராய்டு 7.0 நௌவ்கட்

தவிர, ரஷியன் வலைத்தள அறிக்கையானது கார்ல் ஜெய்ஸ் ஒளியியல் மூலம் இயக்கப்படும் ஒரு 22.6எம்பி பின்புற கேமிரா பற்றியும் குறிப்பிடுகிறது. பாஸ்ட் சார்ஜ் ஆதரவுடன் ஒரு 3,500எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி, மீயொலி கைரேகை சென்சார், ஐபி55 / 57 சான்றிதழ் மற்றும் பெட்டிக்கு வெளியே ஆண்ட் ராய்டு 7.0 நௌவ்கட் ஆகியவைகளும் நோக்கியா பி1 கருவியில் இடம்பெறலாம் என்கிறது.

ஹை-எண்ட் அம்சங்கள்

ஹை-எண்ட் அம்சங்கள்

வெளியான குறிப்புகளின் அடிப்படையில் நோக்கியா ஆண்ட்ராய்டு கருவியானது வன்பொருள் மற்றும் மென்பொருள் வரும்போது சமரசம் செய்து கொள்ள விரும்பவில்லை என்பது மிகவும் தெளிவாக தெரிகிறது. எனினும் இந்த பின்னிஷ் தொழில்நுட்ப நிறுவனம் ஆண்ட்ராய்டு போரில் வெற்றி பெற பல ஹை-எண்ட் அம்சங்களை வெளியிட வேண்டும் என்பதும் அவசியமாகிறது. மேலும் பல அப்டேட்களுக்கு தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருங்கள்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

சியோமி மி 6 : என்ன விலை, என்னென்ன அம்சங்கள், எப்போது வெளியீடு.?

Best Mobiles in India

English summary
Nokia P1 flagship smartphone with Snapdragon 835 rumored to launch in MWC 2017. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X