பெரும்பாலான இந்தியர்களின் எதிர்பார்ப்பாக மட்டுமில்லாது, போட்டியாளர்களின் பீதியாவாகவும் திகழும் நோக்கியா ஆண்ட்ராய்டு கருவிகள் வெளியாகும் நாட்கள் வெகுதொலைவில் இல்லை. நோக்கியாவின் கருவிகள் 2017-ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2017-ல் தொடங்கப்பட இருக்கிறது, உடன் மீண்டும் நோக்கியா முன்பை போலவே சந்தையை ஆளும் என்பதிலும் சந்தேகம் வேண்டாம்.
பல முறை, பல வகையான லீக் தகவல்களாக வெளியாகி, நோக்கியா அதன் மறுவருகை சார்ந்த எதிர்பார்ப்புகளை எகிற வைத்துக்கொண்டே போகிறது. அப்படியாக தற்போது வெளியாகியுள்ள அறிக்கை தகவல்கள் ஆனது நோக்கியா பி கருவிகளின் அபாரமான அம்சங்கள் குறித்த தகவல்களை வழங்கியுள்ளது.
தி நோக்கியா பி
சீனாவின் விபோ கசிவின் படி நிறுவனம் 'தி நோக்கியா பி' என்ற ஒரு புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை உருவாக்க திட்டமிடுவதாக தகவல் அளித்துள்ளது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்
23எம்பி பின்புற கேமிரா
கசிந்த புகைப்படங்கள் மற்றும் குறிப்புகளின் அடிப்படையில், நோக்கியா பி அக்கருவி 6ஜிபி ரேம் கொண்டிருக்கும், ஒரு ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் மூலம் இயக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் தொலைபேசி கார்ல் ஜெய்ஸ் ஆப்டிக்ஸ் உடனான 23எம்பி பின்புற கேமிரா உடன் க்வாட்எச்டி டிஸ்ப்ளே தீர்மானம் கொண்டு வெளிவரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு
வெளியான லீக் தகவல்களின் படி வெளியானால், நோக்கியா பி கருவி நிச்சயமாக ஒரு பிரீமியம் தலைமை ஸ்மார்ட்போனாக இருக்கும் என்து உறுதி. ஆனால் இக்கருவி அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் அறிமுகம் ஆகும் என்று கூறிவிட முடியாது.
டி1சி கருவி
இதற்கு முன்பு வெளியான லீக் தகவல்கள் ஆனது நோக்கியா டி1சி கருவியின் விலை ரூ.10,000/-ல் ஆரம்பிக்கும் என்ற தகவலை வழங்கியதோடு அதன் அம்சங்கள் குறித்த தகவல்களையும் வழங்கியுள்ளது. அது நோக்கியா பவர் யூசர் என்ற ஒரு அறிக்கையின்படி, புதிய டி1சி கருவியானது இரண்டு வகைகளில் வரும் என்று கூறப்படுகிறது. அதாவது சுமார் ரூ.10,000/- மதிப்பிடப்பட்டுள்ள 2ஜிபி ரேம் மாறுபாடாகவும் மற்றும் ரூ.13,000/- என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள 3ஜிபி ரேம் மாறுபாடாகவும் வெளியாகும் என்று அறிவிக்கிறது.
இரண்டு டிஸ்ப்ளே அளவுகளில்
என்பியூ (NPU) கருத்துப்படி, நோக்கியா டி1சி ஒரு ஸ்னாப்டிராகன் 430 செயலி, அட்ரெனோ 505 ஜிபியூ, ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் ஆகியவைகள் கொண்ட இரண்டு டிஸ்ப்ளே அளவுகளில் (5 இன்ச் முழு எச்டி மற்றும் 5.5 அங்குல முழு எச்டி) வெளியாகும் என்று கூறப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்
கேமிரா
அதுமட்டுமின்றி சிறிய அளவிலான கருவி 13 எம்பி-யும் பெரிய அளவிலான கருவி 16எம்பி பின்புற கேமிராவும், இரண்டுமே 8 எம்பி முன்பக்க கேமிராவும் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறிக்கை கூறுகிறது.
மேலும் படிக்க
சாம்சங் வடிவமைப்பை 'ஈ அடிச்சான் காப்பி' அடிக்கும் ஆப்பிள்.!?
Gizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.