பேரு நோக்கியா., நியாபகம் இருக்குதா?- வரோம் திரும்ப- 200 எம்பி கேமரா உட்பட 5 கேமராக்கள் உடன் நோக்கியா என்73!

|

நோக்கியா நிறுவனம் ஸ்மார்ட்போன்கள் பிரிவில் தங்களை நிலைநிறுத்த பல்வேறு சாதனங்களை புதுப்புது அம்சங்களோடு பல்வேறு விலைப்பிரிவில் அறிமுகம் செய்து வருகிறது. செல்போன் என்று பிரபலமடைந்த காலத்தில் கொடிக்கட்டி பறந்த நிறுவனம் நோக்கியா, ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு தலைதூக்கியதன் முதல் நோக்கியாவின் நிலையான வரவேற்பு பெற்ற மாடல் என்பது ஒரு சிலவைகள் என்பதே நிதர்சனமான உண்மை. மேலும் நோக்கியா நிறுவனம் பட்ஜெட் விலை மற்றும் மலிவு விலை பிரிவுகளில் சாதனங்களை அறிமுகம் செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது.

புதிய நோக்கியா என்73

புதிய நோக்கியா என்73

இந்த நிலையில் புதிய நோக்கியா என்73 என்ற புதிய ஸ்மார்ட்போனை தயார் செய்வதில் நிறுவனம் கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நோக்கியாவின் மிகவும் புகழ்பெற்ற ஸ்மார்ட்போன்களில் ஒன்று நோக்கியா என்73. இந்த மாடலை மேம்படுத்தி வழங்குவதற்கான பணியில் நிறுவனம் தற்போது ஈடுபட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நோக்கியாவின் எச்எம்டி குளோபல் நிறுவனமானது ஐந்து கேமராக்கள் கொண்ட ப்ரீமியம் சாதனத்தின் உருவாக்க பணியில் நிறுவனம் ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது. வட்ட வடிவில் கேமரா, இரட்டை ஃப்ளாஷ் வசதியோடு உயர்தர லுக்கில் இந்த சாதனம் இருக்கும் என தகவல்கள் வெளியானது.

பென்டா கேமரா அமைப்பு

பென்டா கேமரா அமைப்பு

இதுகுறித்து வெளியான தகவல்களை பார்க்கலாம்., நோக்கியா என்73 ஸ்மார்ட்போனானது பென்டா பின்புற கேமரா அமைப்புடன் மீண்டும் வருகிறது. 200 எம்பி முதன்மை சென்சாரை இது கொண்டிருக்கும் என அறிக்கை தகவல் தெரிவிக்கிறது. அசல் நோக்கியா என்73 ஸ்மார்ட்போனானது 2006 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அந்த காலத்தில் வெளியான சிம்பியன் ஓஎஸ் அடிப்படையிலான ஸ்மார்ட்போன்களில் மாடல்களில் பிரபலமான ஒன்றாக இருந்தது. ஸ்மார்ட்போன்கள் என்று பிரபலமடைந்த காலத்தில் இந்த சாதனம் மிகவும் வரவேற்பு பெற்றிருந்தது. எச்எம்டி க்ளோபல் இந்த வெற்றியின் தொடக்கமாக புதிய முயற்சியை மேற்கொள்ள இருக்கிறது. நிறுவனம் நோக்கியா என்73 ஸ்மார்ட்போன் மாடலை புதுப்பித்து வழங்க தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. வதந்திகளின் படி இந்த சாதனம் பென்டா கேமரா அமைப்பை பரிந்துரைக்கும் என ரென்டர்கள் ஆன்லைனில் தோன்றிய தகவல்கள் தெரிவிக்கிறது.

200 எம்பி சாம்சங் ஐசோசெல் முதன்மை சென்சார்

200 எம்பி சாம்சங் ஐசோசெல் முதன்மை சென்சார்

புதிய நோக்கியா என்73 குறித்த தகவல்களை சீனாவின் சிஎன்எம்ஓ தெரிவித்துள்ளது. செப்டம்பர் 2021-ல் அறிவிக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போனானது 200 எம்பி சாம்சங் ஐசோசெல் எச்பி1 முதன்மை சென்சார் மூலம் இந்த போன் செயல்பாட்டில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. புதிய நோக்கியா என்73 வடிவமைப்பை பரிந்துரைக்கும் வகையில் செய்தி தளம் இரண்டு ரெண்டர்களை பகிர்ந்திருக்கிறது. ரெண்டர்களின் ஒன்று போனில் பென்டா கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் எனவும் இரண்டு இரண்டாம் நிலை கேமராக்கள் ஒரே அளவைக் கொண்டிருக்கும் எனவும் பிற மூன்றும் வெவ்வேறு லென்ஸ் வகைகளை கொண்டிருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. கேமரா அமைப்புகளோடு இரட்டை எல்இடி ஃப்ளாஷ் சென்சார்கள் கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கிறது. தகவலின்படி இந்த நோக்கியா ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் பட்சத்தில் ப்ரீமியம் ரக ஸ்மார்ட்போனாக இது இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளாக் வண்ண விருப்பத்தில் வளைந்த விளிம்புகள்

பிளாக் வண்ண விருப்பத்தில் வளைந்த விளிம்புகள்

எச்எம்டி குளோபல் அதன் முதல் பென்டா கேமரா போனை நோக்கியா 9 ப்யூர்வியூ என்று 2019-ல் கொண்டு வந்தது. இந்த போன் தனித்துவமான வட்டவடிவ கேமரா குறியீட்டைக் கொண்டிருக்கிறது. பகிரப்பட்ட ரெண்டர்கள் புதிய நோக்கியா என்73 பிளாக் வண்ண விருப்பத்தில் வளைந்த விளிம்புகளுடன் வரும் என தகவல்கள் தெரிவிக்கிறது. அதேபோல் இந்த போனில் வால்யூம் ராக்கர் மற்றும் ஒரு பக்க பவர் பட்டன் இருக்கும் என தகவல் காண்பிக்கிறது. புதிய நோக்கியா என்73 ஸ்மார்ட்போனின் சரியான விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடவில்லை. விரைவில் இதுகுறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Nokia N73 Smartphone With 5 Rear Cameras include 200Mp Primary Camera: Renders info

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X