Home
News

நோக்கியா என்1 இந்தியா வருகின்றது..!

By Meganathan

நோக்கியா நிறுவனத்தின் என்1 ஆண்ட்ராய்டு டேப்ளெட் கருவி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியானது, தற்சமயம் இந்த கருவி இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

நோக்கியா என்1 இந்தியா வருகின்றது..!

நோக்கியா என் 1 டேப்ளெட் கருவி அமெரிக்காவில் இருந்து பெங்களூரூ வந்திருப்பதாகவும் இங்கு நோக்கியா டேப்ளெட் சோதனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது. முன்னதாக சீனாவில் சோதனை செய்யப்பட்ட இந்த கருவி தற்சமயம் தாய்வான் நகரில் விற்பனை செய்யப்படுவதால் இந்தியாவில் இந்த டேப்ளெட் விரைவில் விற்பனைக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நோக்கியா என்1 டேப்ளெட் 7.9 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே 2048*1536 ரெசல்யூஷன் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்பட்டுள்ளது. மேலும் 64-பிட் இன்டெல் ஆடம் இசட்3580 பிராசஸர் 2.3 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் 2ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 32 ஜிபி இன்டர்னல் மெமரியும், கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

நோக்கியா என்1 இந்தியா வருகின்றது..!

கேமராவை பொருத்த வரை 8 எம்பி ப்ரைமரி கேமராவும், 5 எம்பி முன்பக்க கேமராவும் இருப்பதோடு 802.11a/b/g/n/ac வை-பை மற்றும் MIMO, மைக்ரோயுஎஸ்பி 2.0 மற்றும் ப்ளூடூத் 4.0 போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதன் விலை ரூ.16,000 வரை இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Nokia released an Android tablet last November, called the Nokia N1. According to a Nokia Power User report, the tablet is being tested in India.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X