எனக்கே விபூதி அடிச்சுட்டல.. புது லோகோ, டூயல் கேமரா.. நொந்துபோன NOKIA.. சைலன்ட் ஆக HMD பார்த்த வேலை!
நீங்களொரு பழைய நோக்கியா (NOKIA) மொபைல் போன்களின் ரசிகராக இருந்தாலும் சரி அல்லது லேட்டஸ்ட் ஆக அறிமுகமான ஏதோவொரு நோக்கியா ஸ்மார்ட்போனை பயன்படுத்துபவராக இருந்தாலும் சரி.. உங்களுக்கு எச்எம்டி க்ளோபல் (HMD Global) என்கிற நிறுவனத்தின் பெயர் நிச்சயம் பரிச்சயமாக இருக்கும்!
ஏனென்றால் அது தான் நோக்கியா பிராண்டட் பீச்சர் போன்களையும் (Feature Phones), ஸ்மார்ட்போன்களையும் (Smartphones) தயாரிக்கும் உரிமத்தை பெற்றுள்ள நிறுவனமாகும். இதற்கிடையில் எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது சொந்த போன்களை அறிமுகம் செய்ய உள்ளது என்கிற தகவல் வெளியாகி, நோக்கியா போன்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியது.

தற்போது, எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது முதல் ஸ்மார்ட்போனை கூடிய விரைவில் அறிமுகம் செய்யும் என்கிற தகவல் 99% உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் பிராண்டின் லோகோ மற்றும் அம்சங்கள் குறித்து சில முக்கிய விவரங்கள் வெளியாகியுள்ளது. எச்எம்டி-யின் முதல் ஸ்மார்ட்போன் எப்போது அறிமுகமாகும்? என்ன விலைக்கு வரும்? இது நோக்கியா போன்களின் அழிவின் ஆரம்பமா? இதோ விவரங்கள்:
டிசைன் மற்றும் அம்சங்கள்: தற்போது வரையிலாக எச்எம்டி நிறுவனமானது நோக்கியா பிராண்டின் கீழ் தான் புதிய ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வருகிறது. ஆனால் விரைவில் இது மாறக்கூடும் என்பது போல் தெரிகிறது. பேக் பேனலில் புதிய எச்எம்டி லோகோவுடன் (HMD Logo) கூடிய புதிய ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக உள்ளது. இதுகுறித்து 91மொபைல்ஸ் (91Mobiles) வழியாக வெளியான ஒரு புகைப்படமானது எச்எம்டி என்159வி (HMD N159V) என்கிற ஸ்மார்ட்போனின் வடிவமைப்பை வெளிப்படுத்தி உள்ளது.

அதில் கருப்பு நிறத்திலான பேக் பேனலில் (Black Back Panel), எல்இடி ஃபிளாஷ் உடனான டூயல் ரியர் கேமரா செட்டப்பை (Dual Rear Camera Setup) பார்க்க முடிகிறது. கூடவே பேக் பேனலின் மையத்தில் எச்எம்டி லோகோவையும் பார்க்க முடிகிறது; அதாவது இந்த போனில் வேறு எந்த வகையான நோக்கியா பிராண்டிங்கும் தெரியவில்லை.
மேலும் இதன் பேக் பேனல் பிளாஸ்டிக்கை போல் தெரிகிறது; பவர் மற்றும் வால்யூம் பட்டன்கள் (Power and Volume Buttons) ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் அமைந்துள்ளன. முன்பக்கத்தை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஒரு பிளாட் டிஸ்பிளேவை (Flat Display) கொண்டுள்ளது. டிஸ்பிளேவின் மேற்புற மையத்தில் ஹோல் பஞ்ச் கட்அவுட்டை காண முடிகிறது. அதில் செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்ளுக்கான தேவைகளை பூர்த்தி செய்யும் செல்பீ கேமரா இடம்பெறும்.

விலை: இந்த ஸ்மார்ட்போனின் உண்மையான பெயர் என்159வி தானா அல்லது வேறு பெயரை பெறுமா என்பதில் குழப்பம் நிலவுகிறது. விலையை பொறுத்தவரை, பார்ப்பதற்கு இதுவொரு மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போனை (Mid-range Smartphone) போல இருக்கிறது. பெரும்பாலும் இது ரூ.20,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் தான் வெளியாகும். இல்லையென்றால் நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு கதிதான் இதற்கும் ஏற்படும் (சரியான விற்பனையை காணாது).
எச்எம்டி பிராண்டட் டிவைஸ்களை (HMD-branded devices) அறிமுகப்படுத்தும் இந்நிறுவனத்தின் திட்டங்களை பற்றி நாங்கள் கேள்விப்படுவது இது முதல் முறை அல்ல. கடந்த செப்டம்பரில், எச்எம்டி க்ளோபல் சிஇஒ ஜீன்-பிரான்கோயிஸ் பேரில் (Jean-Francois Baril), எச்எம்டி பிராண்டின் கீழ் வெளியிடப்பட்ட ஸ்மார்ட்களுடன் அதன் சொந்த தயாரிப்பு இலாகாவை விரைவில் விரிவுபடுத்தும் என்று அறிவித்து இருந்தார்.
அறியதோர்களுக்கு எச்எம்டி க்ளோபல் நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு முதல் நோக்கியா பிராண்டட் போன்களை உலகளவில் விற்பனை செய்து வருகிறது. நினைவூட்டும் வண்ணம், நோக்கியா நிறுவனத்திடம் இருந்து கடைசியாக அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன் நோக்கியா ஜி42 5ஜி (Nokia G42 5G) மாடலாகும். தற்போது இது இந்தியாவில் ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது. இது நோக்கியா போன்களின் அழிவின் ஆரம்பமா? என்கிற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்!


Click it and Unblock the Notifications