Home
News

ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே இந்த Nokia போனை பார்த்து மிரளுகிறது! ஏன் தெரியுமா?

நோக்கியா நிறுவனம் அதன் போர்ட்போலியோவில் புதிதாக நோக்கியா மேஜிக் மேக்ஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த சாதனம் 108MP கேமரா அம்சத்துடன் பல மிரட்டலான அம்சங்கள் உடன் இது அறிமுகமாகிறது. இது பற்றிய விபரங்களை இப்பொது பார்க்கலாம்.

சிறந்த பேட்டரி பேக்கப் முதல், வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் ஸ்டோரேஜ் அம்சத்துடன் இந்த சாதனம் வருகிறது. இது வரை, நோக்கியா மேஜிக் மேக்ஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த வரவிருக்கும் போன், பல்வேறு ஸ்மார்ட் அம்சங்களுடன் ஏற்றப்பட்ட புதிய சாதனத்தைத் தேடுபவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். நோக்கியா ஸ்மார்ட்போன் நீண்ட காலமாக விவாதத்தில் உள்ளது.

ஸ்மார்ட்போன் சாம்ராஜ்யமே இந்த Nokia போனை பார்த்து மிரளுகிறது!

பல ஸ்மார்ட்போன் பிரியர்கள் அதன் அம்சங்கள் அல்லது விவரக்குறிப்புகள் பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த ஃபோன் ஆகஸ்ட் 2023 இல் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அதன் சரியான வெளியீட்டு தேதியை எங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை. இந்த போன் அறிமுகம் செய்யப்படுவதை ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பவர்கள், இந்த போனை சந்தையில் பார்க்க இன்னும் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்பதை மட்டும் அறிந்துகொள்ளுங்கள்.

அதன் அம்சங்களைப் பற்றி பேசுகையில், இது 108 எம்பி பின்புற கேமரா, 256 ஜிபி ஸ்டோரேஜ், 1080 x 2400 பிக்சல் மற்றும் பிற அற்புதமான அம்சங்களைக் கொண்டுள்ளது. இது 8 ஜிபி ரேம் பொருத்தப்பட்டுள்ளது. இது அதன் ஒட்டுமொத்த அற்புதமான செயல்திறனுக்கு காரணமான அம்சங்களில் ஒன்றாகும். இந்த மொபைலின் மேலும் தொழில்நுட்ப விவரங்கள் பற்றி அறிந்துகொள்ள, தொடர்ந்து படியுங்கள்.

இது 6.7' இன்ச் கொண்ட AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் உடன் வருகிறது. இது அட்ரினோ 740 உடன் 64 பிட் ஆர்டிடெக்ட் உடன் வருகிறது. இந்த நோக்கியா மேஜிக் மேக்ஸ் ஸ்மார்ட்போன் சாதனம் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் அம்சத்துடன் வருகிறது. இது 108 MP பிரைமரி கேமரா, 16 MP கேமரா சென்சார், அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா மற்றும் 5 MP மேக்ரோ கேமரா சென்சார் உடன் வருகிறது.

இந்த போன் Nokia Magic Max ஸ்மார்ட்போன் சாதனம் வரும் ஆகஸ்ட் 2023 இல் வெளியிடப்பட உள்ளதால், இதன் மீது ஆர்வம் கொண்ட மக்கள் சற்று காத்திருக்கவேண்டியதுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 32,990 முதல் ஆரம்பமாகலாம் என்று கூறப்படுகிறது. இந்த போன் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டவுடன் மேலும் விவரங்கள் தெரியவரும். நீங்கள் நோக்கியா மேஜிக் மேக்ஸ் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லலாம்.

Best Mobiles in India

English summary
Nokia Magic Max Could Launch With 108MP Primary Camera During August 2023
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X