நோக்கியா வரியேய்ப்பு வழக்கு : சென்னை வருமானவரித்துறையினருக்கு எதிராக நோக்கியா!

Written By:

சில வாரங்களுக்கு முன்னர் சென்னை வருமான வரித்துறையினர், சென்னையில் உள்ள நோக்கியா நிறுவனம் 3,000 கோடி ரூபாயை வரியேய்ப்பு செய்தாதாக ஆவணங்களை கைப்பற்றினர். பின்னர் அந்நிறுவனம் மீது வழக்குதொடர்ந்தனர்.

நோக்கியா வரியேய்ப்பு வழக்கு : வருமானவரித்துறையினருக்கு எதிராக நோக்கியா

இது தொடர்பாக நோக்கியா நிறுவனம் வருமான வரித்துறையினரின் இந்த செய்கைகளுக்கு எதிர்ப்புதெரிவித்து வழக்கும் தொடங்கியுள்ளது.

இன்று இந்நிறுவனத்தின் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு விளக்கமும் அளித்துள்ளது. அதாவது, இந்தியாவில் டொமெஸ்டிக் என்ற உள்ளூர் சட்டங்கள் சரியில்லை. நாங்கள் [நோக்கியா] உலகம் முழுவதும் அலுவலகங்களை ஆரம்பித்துள்ளது. எங்களுக்கு வரியேய்ப்பு செய்யவேண்டிய அவசியம் இல்லை. சென்னை வருமானத்துறையின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. என்றெல்லாம் தெரிவித்துள்ளது நோக்கியா.

இதுகுறித்து சென்னை வருமானவரித்துறையின் அனைத்து முக்கிய அதிகாரிகளுக்கும் கண்டன கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.

 

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot