நாளைய தினம் Nokia-க்கு சொந்தம்- கண் விழித்து காத்திருக்கும் ரசிகர்களுக்கு பட்ஜெட் விலை ட்ரீட்!
நோக்கியா தனது புதிய ஸ்மார்ட்போனை நாளை (ஜூலை 12) இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனாக அறிமுகப்படுத்தலாம் எனவும் அது நோக்கியா சி 21 ப்ளஸ் அல்லது நோக்கியா ஜி 11 ப்ளஸ் ஸ்மார்ட்போனாக இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. அம்சங்கள் என்னவாக இருக்கும்?

நோக்கியா ஜி11 ப்ளஸ் அல்லது சி21 ப்ளஸ் ஆக இருக்கலாம்
நோக்கியா நிறுவனம் நாளை (ஜூலை 12) இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த இருக்கிறது. நோக்கியாவின் மூலம் தற்போது வரை வெளியிடப்பட்ட அனைத்து டீஸர்களையும் கருத்தில் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் பிராண்டின் பட்ஜெட் விலையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் நோக்கியா ஜி11 ப்ளஸ் அல்லது சி21 ப்ளஸ் ஆக இருக்கும் எனவும் கணிக்கப்படுகிறது.
பிளாட் வடிவமைப்புடன் இரண்டு கேமராக்கள்
நோக்கியா இந்தியா தனது ட்விட்டர் தளம் மூலமாக ஸ்மார்ட்போன் குறித்த டீஸர்களை தொடர்ந்து 3 நாட்களாக வெளியிட்டு வருகிறது. வெளியாக இருக்கும் ஸ்மார்ட்போன் பிளாட் வடிவமைப்புடன், இரண்டு கேமராக்கள் மற்றும் பின்புற கைரேகை ஸ்கேனர் சென்சார் ஆதரவை கொண்டிருக்கும் என டீஸர் மூலம் தெரிய வந்திருக்கிறது.

நோக்கியா ஜி11 ப்ளஸ் சிறப்பம்சங்கள் என்ன?
நோக்கியா ஜி11 ப்ளஸ் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் பொருத்தப்பட்டுள்ள 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே ஆனது 720 x 1600 பிக்சல்கள் மற்றும் 90Hz புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் செயலியை நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. இருப்பினும் இது ஆக்டோ கோர் Unisoc T606 SoC மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ்
அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவை கொண்டிருக்கிறது. இதில் உள்ள மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் மூலமாக 512 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பு இருக்கிறது. அது 50 எம்பி பிரதான கேமரா மற்றும் 2 எம்பி இரண்டாம் நிலை லென்ஸ் ஆகும். முன்புறத்தில் செல்பி வசதிக்கு என 8 எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் 4000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு
இந்த ஜி11 ப்ளஸ் ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம் மூலம் இயக்கப்படுகிறது. 2 வருட OS மேம்பாடுகளை இந்த ஸ்மார்ட்போன் பெறும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது.

நோக்கியா சி21 ப்ளஸ் சிறப்பம்சங்கள் என்ன?
நோக்கியா சி21 ப்ளஸ் ஸ்மார்ட்போனானது 6.52 இன்ச் 720 பிக்சல் ஐபிஎஸ் டிஸ்ப்ளே மற்றும் டூயல் கேமரா ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 4000 எம்ஏஎச் பேட்டரி உடன் ஆண்ட்ராய்டு 11 கோ ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதில் 13 எம்பி மெயின் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 5050 எம்ஏஎச் பேட்டரி இருக்கிறது.

முந்தைய நோக்கியா ஸ்மார்ட்போனும் இதே பட்ஜெட் விலை
முந்தைய நோக்கியா ஸ்மார்ட்போனும் இதே பட்ஜெட் விலையில் அறிமுகமானது. அது நோக்கியா 2.4 ஆகும். இந்த சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சாதனத்தின் விலை ரூ.10,399 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள்
நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, 720 x 1600 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரை விகிதம் உட்பட சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளியானது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13 எம்பி பிரைமரி லென்ஸ் + 2 எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 5 எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








