பேரு Nokia நியாபகம் இருக்கா? தட்டித் தூக்குங்க: 3நாள் பேட்டரி ஆயுளுடன் பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்

|

நோக்கியா G11 Plus ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் ஆதரவோடு அறிவிக்கப்பட்டுள்ளது. இது நோக்கியாவின் புதிய நுழைவு நிலை சாதனமாகும். இந்த சாதனத்தில் இரட்டை பின்புற கேமராக்கள் உள்ளிட்ட மேம்பட்ட ஆதரவுகள் இருக்கிறது. நுழைவு நிலை ஸ்மார்ட்போனில் இவ்வளவு அம்சங்களா என ஆச்சரியப்பட வைக்கும் விதத்தில் இது இருக்கிறது. வாருங்கள் விரிவாக பார்க்கலாம்.

புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்

புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்

நோக்கியா நிறுவனம் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. அது நோக்கியா ஜி11 ப்ளஸ் சாதனமாகும். இந்த நுழைவு நிலை சாதனம் சமீபத்திய ஆண்ட்ராய்டு 12 ஆதரவைக் கொண்டுள்ளது. கூடுதலாக இந்த சாதனம் Unisoc சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

இரட்டை பின்புற கேமராக்கள் ஆதரவு

இரட்டை பின்புற கேமராக்கள் ஆதரவு

நோக்கியாவின் இந்த புதிய நுழைவு நிலை ஸ்மார்ட்போன் இரட்டை பின்புற கேமராக்களுடன் வெளியாகி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 மூலம் இயக்கப்படுகிறது. இது நுழைவு நிலை சாதனமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் பட்ஜெட் விலை சாதனம் என உறுதிப்படுத்தப்படுகிறது. இருப்பினும் இந்த நோக்கியா ஜி11 ப்ளஸ் ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

நோக்கியா ஜி11 ப்ளஸ் சிறப்பம்சங்கள்

நோக்கியா ஜி11 ப்ளஸ் சிறப்பம்சங்கள்

Nokia G11 Plus ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே ஆனது பெரிய அளவில் இருக்கிறது. இதில் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த டிஸ்ப்ளே 720 x 1600 பிக்சல்கள் மற்றும் 90Hz புதுப்பிப்பு வீதத்தை கொண்டிருக்கிறது. Unisoc ஆதரவு என குறிப்பிடப்பட்டாலும் இதன் சிப்செட் என்ன என்பதை நிறுவனம் தெளிவாக குறிப்பிடவில்லை. இருப்பினும் இந்த சாதனம் ஆக்டோ கோர் Unisoc T606 SoC மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்

நோக்கியா ஜி11 ப்ளஸ் ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட்டும் இருக்கிறது. இதன்மூலம் 512 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். நோக்கியாவின் இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது இரண்டு வண்ண விருப்பங்களில் கிடைக்கும். அது சார்கோல் க்ரே மற்றும் லேக் ப்ளூ ஆகும். இந்த வண்ண விருப்பங்களின் காரணமாக சாதனம் பார்ப்பதற்கு ப்ரீமியம் லுக்கிங்கை வழங்குகிறது.

50 எம்பி முதன்மை கேமரா வசதி உள்ள பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்

50 எம்பி முதன்மை கேமரா வசதி உள்ள பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்

நோக்கியா ஜி11 ப்ளஸ் ஸ்மார்ட்போனில் இரட்டை பின்புற கேமரா அமைப்பு இருக்கிறது. 50 எம்பி முதன்மை கேமரா மற்றும் 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. செல்பி மற்றும் வீடியோ ஆதரவுக்கு என சாதனத்தின் முன்புறத்தில் 8 எம்பி ஸ்னாப்பர் ஆதரவு இதில் இருக்கிறது.அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்டில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது. இதன் விலை தோராயமாக ரூ.10,700 என இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

4000 எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த ஸ்மார்ட்போன்

4000 எம்ஏஎச் பேட்டரி உடன் இந்த ஸ்மார்ட்போன்

Nokia G11 Plus ஆனது ஆண்ட்ராய்டு 12 இயங்குதள ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 3 வருட பாதுகாப்பு இணைப்புகளுடன் 2 முக்கிய OS மேம்படுத்தல்களை பெறும் என நிறுவனம் உறுதிப்படுத்தி இருக்கிறது. 4000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு இந்த சாதனம் வெளியாகி இருக்கிறது. நுழைவு நிலை சாதனத்தில் 4,000mAh பேட்டரி என்பது கவனிக்கத்தக்க அம்சமாகும். ஒரே சார்ஜிங்கில் மூன்று நாட்கள் வரை பேட்டரி ஆயுள் வழங்கும் என கூறப்படுகிறது.

பட்ஜெட் விலையில் முந்தைய சாதனம்

பட்ஜெட் விலையில் முந்தைய சாதனம்

முந்தைய நோக்கியா ஸ்மார்ட்போனும் இதே பட்ஜெட் விலையில் அறிமுகமானது. அது நோக்கியா 2.4 ஆகும். இந்த சாதனம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த சாதனத்தின் விலை ரூ.10,399 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் மாடலை வாங்கும் ஜியோ பயனர்களுக்கு, ஜியோ நிறுவனம் சார்பில் குறிப்பிட்ட சலுகைகள் வழங்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.5-இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன்

6.5-இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன்

நோக்கியா 2.4 ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, 720 x 1600 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரை விகிதம் உட்பட சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளியானது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13 எம்பி பிரைமரி லென்ஸ் + 2 எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 5 எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது.

மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் ஆதரவு

மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் ஆதரவு

நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளியானது. நோக்கியா 2.4 ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே ஒரு முழு சார்ஜில் 2 நாட்கள் வரை இந்த ஸ்மார்ட்போனை அருமையாக பயன்படுத்த முடியம். அதேபோல் கூகுள் அசிஸ்டன்ட் பட்டன், கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு ஆதரவகளை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia Launched its Nokia G11 Plus as Entry Level Smartphone With Android 12 OS

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X