திரும்ப வந்துட்டேனு சொல்லு- 3 நாள் பேட்டரி ஆயுளுடன் பட்ஜெட் விலை Nokia ஸ்மார்ட்போன் அறிமுகம்!

|

வாடிக்கையாளர்கள் மிகவும் எதிர்பார்த்த பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை இந்தியாவில் களமிறக்கி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களின் அனைத்து தேவையையும் பூர்த்தி செய்திருக்கிறதா என்ற விவரங்களையும் அதன் விலையையும் விரிவாக பார்க்கலாம்.

களமிறக்கப்பட்ட நோக்கியா சி21 ப்ளஸ் ஸ்மார்ட்போன்

களமிறக்கப்பட்ட நோக்கியா சி21 ப்ளஸ் ஸ்மார்ட்போன்

நோக்கியா நிறுவனம் இந்தியாவில் மிகவும் எதிர்பார்த்த நோக்கியா சி21 ப்ளஸ் ஸ்மார்ட்போனை களமிறக்கி இருக்கிறது. 3 ஜிபி ரேம் ஆதரவை இந்த ஸ்மார்ட்போனை கொண்டிருக்கிறது என்றாலும் வாடிக்கையாளர்களின் பிரதான தேவை அனைத்தையும் பூர்த்தி செய்திருக்கிறது என்றுதான் கூற வேண்டும். நோக்கியா சி20 ப்ளஸ் ஸ்மார்ட்போனை விட பல்வேறு மேம்பட்ட ஆதரவை நோக்கியா சி21 ப்ளஸ் கொண்டிருக்கிறது.

எச்எம்டி க்ளோபல் அறிமுகம் செய்த புது ஸ்மார்ட்போன்

எச்எம்டி க்ளோபல் அறிமுகம் செய்த புது ஸ்மார்ட்போன்

எச்எம்டி க்ளோபல் நிறுவனம் இந்தியாவில் இன்று (ஜூலை 12) புதிய நோக்கியா ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்திருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் நோக்கியா சி20 ப்ளஸ் இன் வாரிசாக இருக்கிறது. நோக்கியா சி20 ப்ளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.8,999 என்ற விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் விலைக்கு சற்று உயர்ந்ததாக நோக்கியா சி21 ப்ளஸ் இருக்கிறது.

இந்த அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் நேரடி போட்டி

இந்த அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் நேரடி போட்டி

நோக்கியா சி21 ப்ளஸ் ஸ்மார்ட்போன் இந்தியாவில் Samsung Galaxy F12, Redmi 10 Prime மற்றும் Realme C25s உள்ளிட்ட ஸ்மார்ட்போன்களுடன் போட்டியிடும் வகையில் களமிறக்கப்பட்டிருக்கிறது. காரணம் இது அனைத்தும் ஒரே மாதிரியான விலை பிரிவில் கிடைக்கிறது. குறிப்பிடத்தக்க சில மாற்றங்கள் மட்டுமே இந்த ஸ்மார்ட்போன்களுக்கு இடையே இருக்கிறது.

Nokia C21 Plus விலை, கிடைக்கும் தன்மை

Nokia C21 Plus விலை, கிடைக்கும் தன்மை

Nokia C21 Plus ஸ்மார்ட்போனின் விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கலாம். இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வேரியண்ட்களில் வெளியாகி இருக்கிறது. 3 ஜிபி ரேம் + 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகும். 3 ஜிபி ரேம் + 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.10,299 ஆகும். அதேபோல் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.11,299 ஆகும். தகவலின்படி இந்த ஸ்மார்ட்போன் நோக்கியா இந்தியாவின் இ-ஷாப் மூலமாக மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்.

நோக்கியா C21 ப்ளஸ் சலுகை விவரங்கள்

நோக்கியா C21 ப்ளஸ் சலுகை விவரங்கள்

நோக்கியா C21 ப்ளஸ் ஸ்மார்ட்போனை வாங்க ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களுக்கு HMD Global பல சலுகைகளை வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. ஒவ்வொரு ஸ்மார்ட்போனுக்கும் நோக்கியா வயர்டு பட்ஸ்கள் வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி ஜியோ வாடிக்கையாளர்கள் ரூ.4000 மதிப்புள்ள திட்டத்தை தேர்வு செய்யும் போது 10% கூடுதல் நன்மைகளும் வழங்கப்படுகிறது.

நோக்கியா சி21 பிளஸ் சிறப்பம்சங்கள்

நோக்கியா சி21 பிளஸ் சிறப்பம்சங்கள்

நோக்கியா சி21 ப்ளஸ் ஸ்மார்ட்போனானது 6.5 இன்ச் எல்சிடி டிஸ்ப்ளே உடன் 2.5D கவர் கிளாஸ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 20:9 விகிதம் மற்றும் 720×1600 பிக்சல்கள் தீர்மானத்தைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் UniSoc Sc9863A செயலி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் சேமிப்பகத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் மூலமாக 256 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்ட் 11 கோ எடிஷன் மூலம் இயக்கப்படுகிறது.

கேமரா அம்சத்தை விரிவாக பார்க்கலாம்

கேமரா அம்சத்தை விரிவாக பார்க்கலாம்

நோக்கியா சி21 ப்ளஸ் ஸ்மார்ட்போனானது 13 எம்பி பிரதான கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் என டூயல் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 5 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது.

இணைப்பு ஆதரவுகள் மற்றும் இரண்டு வண்ணங்கள்

இணைப்பு ஆதரவுகள் மற்றும் இரண்டு வண்ணங்கள்

நோக்கியா சி21 ப்ளஸ் ஸ்மார்ட்போனானது நீக்க முடியாத பேட்டரியை கொண்டிருக்கிறது. இதன் பேட்டரி ஆயுள் மூன்று நாட்கள் வரை நீடிக்கும் என கூறப்படுகிறது. இணைப்பு அம்சத்தை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் ப்ளூடூத் 4.2, மைக்ரோ யூஎஸ்பி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆதரவைக் கொண்டிருக்கிறது. நோக்கியா சி21 ப்ளஸ் ஸ்மார்ட்போனானது க்ரே மற்றும் டார்க் சியான் வண்ண விருப்பத்தில் வெளியாகி இருக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Nokia Launched its Nokia C21 Plus Smartphone in India at Budget Price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X