வந்துட்டேனு சொல்லு: ரூ.7,984 மட்டுமே- உயர்தர நோக்கியா சி20 ப்ளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் : கூடவே இயர்பட்ஸ் வேற!

|

நோக்கியா நிறுவனம் தனது பிரபலமான ஸ்மார்ட்போன் தொடரான சி-சீரிஸ் தொடரில் புதிய நுழைவு நிலை ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள நோக்கியா சி 20 பிளஸ் ஸ்மார்ட்போனானது சி20 மாடலின் வாரிசாக இருக்கிறது. அதேபோல் புதிய மாடலான சி20 ஸ்மார்ட்போனில் இருக்கும் அம்சங்களைவிட மேம்படுத்தப்பட்ட அம்சங்களை கொண்டுள்ளது.

இரட்டை பின்புற கேமரா

இரட்டை பின்புற கேமரா

நோக்கியா புதிய சாதனத்தில் இரட்டை பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 கோ பதிப்புடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போனுடன் நோக்கியா பிஎச்-205 டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸயும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

சிறந்த பேட்டரி ஆயுள்

சிறந்த பேட்டரி ஆயுள்

நோக்கியா இயர்பட்ஸ் சிறந்த பேட்டரி ஆயுள், சிறந்த டைனமிக் டிரைவர் மற்றும் ப்ளூடூத் 5.0 இணைப்புகளை இயர்பட்ஸ்கள் கொண்டுள்ளது. இந்த இயர்பட்ஸ்கள் போலார் ப்ளூ, சார்கோல் பிளாக் வண்ண விருப்பங்களில் வருகிறது. நோக்கியா சி20 பிளஸ் அம்சங்கள் மற்றும் விலை விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போன் அம்சங்கள்

நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போன் அம்சங்கள்

நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போனானது 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த காட்சி 20:9 விகிதத்துடன் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. மேலும் நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் யுனிசாக் எஸ்சி 9863ஏ செயலி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இதில் மெமரி விரிவாக்க ஆதரவுக்கு 256 ஜிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டிகார்ட் ஸ்லாட் உள்ளது.

8 எம்பி பிரதான கேமரா

8 எம்பி பிரதான கேமரா

இந்த ஸ்மார்ட்போன் 8 எம்பி பிரதான கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா என இரட்டை பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இதில் எச்எம்டி குளோபல் மூலம் 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இந்த சாதனம் 4950 எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது.

இணைப்பு விருப்பங்கள் மற்றும் விலை

இணைப்பு விருப்பங்கள் மற்றும் விலை

ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்திற்கு கைரேகை ஸ்கேனர் இல்லை. இருப்பினும் இதில் பாதுகாப்பு அம்சமாக ஃபேஸ் அன்லாக் அம்சம் இருக்கிறது. நோக்கியா சி20 பிளஸ் இரட்டை சிம், 4ஜி வோல்ட்இ, வைஃபை 802, ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ், மைக்ரோ யூஎஸ்பி ஆதரவு ஆகியவை உள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ஜூன் 16 முதல் சீனாவில் விற்பனைக்கு வரும் எனவும் இதன் இந்திய விலை மதிப்பு ரூ.7,984 ஆக இருக்கிறது.

நோக்கியா BH-205 TWS Earbuds: அம்சங்கள்

நோக்கியா BH-205 TWS Earbuds: அம்சங்கள்

நோக்கியா பிஹெச் 205 டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸ் இன் இயர் வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது ப்ளூடூத் 5.0 மூலம் இணைக்கப்படுகிறது. இது 10 மீட்டர் வரை தொலைதூரத்தில் இருக்கும்போதும் செயல்படும். இந்த இயர்பட்ஸ் சார்ஜிங் வழக்கு உட்பட 36 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்குகின்றன. மேலும் இசை மற்றும் இடைநிறுத்த சாதனத்திந் டச் கட்டுப்பாடு உள்ளது. இந்த சாதனம் இம்மாத இறுதியில் சீனாவில் விற்பனைக்கு வரும் எனவும் இதன் இந்திய விலை மதிப்பு ரூ.2,273 ஆக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Nokia Launched its Nokia C20 Plus Smartphone and nokia BH-205 TWS Earbuds

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X