Home
News

சார்., இதான் நோக்கியா: இப்போ வாங்க நம்மகிட்ட: ரொம்ப கம்மி விலை., இரண்டு ஸ்மார்ட்போன்கள் வெளியீடு!

நோக்கியா சி2 2-வது எடிஷன், நோக்கியா சி21, நோக்கியா சி21 ப்ளஸ் மற்றும் நோக்கியா வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் உள்ளிட்ட புதிய சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நோக்கிய சி தொடரின் கீழ் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நோக்கியா சி21 ப்ளஸ் இரட்டை பின்புற கேமரா அமைப்புகளை கொண்டிருக்கிறது. நோக்கியா சி2 2-வது எடிஷன் மற்றும் நோக்கியா சி21 ஆகியவற்றை ஒற்றை பின்புற கேமரா விருப்பத்துடன் அறிமுகம் செய்யப்பட்டன.

நோக்கியா சி2 2-வது எடிஷன், நோக்கியா சி21, நோக்கியா சி21 ப்ளஸ்

நோக்கியா சி2 2-வது எடிஷன், நோக்கியா சி21, நோக்கியா சி21 ப்ளஸ்

நோக்கியா சி2 2-வது எடிஷன், நோக்கியா சி21, நோக்கியா சி21 ப்ளஸ் மற்றும் நோக்கியா வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் உள்ளிட்ட புதிய சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நோக்கியா சி21 ப்ளஸ் இரட்டை பின்புற கேமராக்களைக் கொண்டிருக்கிறது, நோக்கியா சி2 2-வது பதிப்பு மற்றும் நோக்கியா சி21 ஆகியவை ஒற்றை பின்புற கேமராவுடன் வருகின்றன. இந்த சாதனங்கள் இந்திய கிடைக்கும் தன்மை மற்றும் விலை இன்னும் வெளியிடப்படவில்லை.

நோக்கியா வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள்

நோக்கியா வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள்

நோக்கியா சி2 2-வது எடிஷன், நோக்கியா சி21, நோக்கியா சி21 ப்ளஸ் மற்றும் நோக்கியா வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் உள்ளிட்ட புதிய சாதனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், சர்வதேச விலையை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளது. நோக்கியா சி2 2-வது எடிஷன் இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ. 6,700 எனவும் நோக்கியா சி21 இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ.8,400 ஆக இருக்கிறது. நோக்கியா சி21 ப்ளஸ் இந்திய மதிப்புப்படி தோராயமாக ரூ. 10,100 முதல் தொடங்குகிறது. நோக்கியா சி2 2-வது எடிஷன், நோக்கியா சி21 ப்ளஸ் ஏப்ரல் முதல் விற்பனைக்கு வரும் எனவும் அதே நேரத்தில் நோக்கியா சி21 மார்ச் மாத இறுதியில் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோக்கியா வயர்லெஸ் ஹெட்ஃபோன்கள் பரிந்துரைக்கப்பட்ட சில்லறை விலைக் கடைகளில் இந்திய விலை மதிப்புப்படி சுமார் ரூ. 3,800 ஆக அமெரிக்காவிற்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.

நோக்கியா சி21, நோக்கியா சி21 பிளஸ் விவரக்குறிப்புகள்

நோக்கியா சி21, நோக்கியா சி21 பிளஸ் விவரக்குறிப்புகள்

நோக்கியா சி21 மற்றும் சி21 ப்ளஸ் குறிப்பிட்ட வேறுபாடுகளையே கொண்டிருக்கிறது. இரண்டு போன்களும் 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவை கொண்டிருக்கின்றன. இவை இரண்டும் யூனிசோக் எஸ்சி9863ஏ எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. சி21 2 ஜிபி, 3 ஜிபி ரேம் விருப்பங்களைப் பெறுகிறது, சி 21 ப்ளஸ் 4ஜிபி ரேம் விருப்பத்துடன் வருகிறது. சேமிப்பு விருப்பங்களை பொறுத்தவரையில், சி21 ஆனது 32 ஜிபி உள்சேமிப்பிடத்தைப் பெறுகிறது, சி21 ப்ளஸ் ஆனது 32 ஜிபி மற்றும் 64 ஜிபி சேமிப்பக விருப்பங்களைப் பெறுகிறது.

8 மெகாபிக்சல் பின்புற கேமரா சென்சார்

8 மெகாபிக்சல் பின்புற கேமரா சென்சார்

நோக்கியா சி21 ஆனது 8 மெகாபிக்சல் பின்புற கேமரா சென்சார், நிலையான ஃபோகஸ் லென்ஸ் மற்றும் எல்இடி ஃபிளாஷ் உடன் வருகிறது, சி21 ப்ளஸ் ஆனது இரட்டை பின்புற கேமரா அமைப்பைப் பெறுகிறது, அதில் ஆட்டோஃபோகஸ் லென்ஸ் மற்றும் 13-மெகாபிக்சல் முதன்மை சென்சார் உள்ளது. அதேபோல் 5 மெகாபிக்சல் முன் கேமரா சென்சார் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இணைப்பு விருப்பங்களை பொறுத்த வரையில் 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11, ப்ளூடூத் வி4.2 உள்ளிட்டவை அடங்கும். பாதுகாப்பு அம்சத்துக்கு என இரண்டு ஸ்மார்ட்போனின் பின்புறத்திலும் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உள்ளது. கடைசியாக, நோக்கியா சி21 ப்ளஸ் ஆனது 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஐபி54 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது, அதே நேரத்தில் நோக்கியா சி21 ஆனது 3000 எம்ஏஎச் சென்சார் கொண்டிருக்கிறது. நோக்கியா சி2 2-வது எடிஷன் விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், நோக்கியா சி2 2-வது எடிஷன் 5.7 இன்ச் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. 1ஜிபி அல்லது 2ஜிபி ரேம் உடன் குவாட்-கோர் மீடியாடெக் எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. 256 ஜிபி வரை மைக்ரோ எஸ்டி கார்டு விரிவாக்க ஆதரவு இதில் இருக்கிறது. நோக்கியா சி2 2-வது பதிப்பு 2,400 எம்ஏஎச் நீக்கக்கூடிய பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Nokia Launched its Nokia C2 2nd Edition, Nokia C21 Plus, Nokia C21
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X