திரும்ப வந்துட்டேனு சொல்லு-3 ஸ்மார்ட்போன்களை களமிறக்கிய Nokia.. தட்டித் தூக்குங்க!

|

Nokia நிறுவனம் நோக்கியா X30 5G, G60 5G, C31 என்ற மூன்று ஸ்மார்ட்போன்களை உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

பட்ஜெட், மிட்-ரேன்ஜ், ப்ரீமியம் என வெவ்வேறு விலைப் பிரிவில் மூன்று ஸ்மார்ட்போன்கள் களமிறக்கப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்களை விரிவாக பார்க்கலாம்.

Nokia X30 5G, Nokia G60 5G மற்றும் Nokia C31

Nokia X30 5G, Nokia G60 5G மற்றும் Nokia C31

நோக்கியா நிறுவனம் X30 5G, Nokia G60 5G மற்றும் Nokia C31 ஆகிய மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை அறிவித்துள்ளது.

இதில் Nokia X30 5G மற்றும் G60 5G ஆகிய ஸ்மார்ட்போன்கள் ஸ்னாப்டிராகன் 695 என்ற ஒரே செயலியில் இயக்கப்படுகின்றன.

3 ஆண்டுகளுக்கான முக்கிய OS மேம்படுத்தல்கள் இந்த ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் என நோக்கியா உறுதியளித்துள்ளது.

உலகளவில் அறிமுகமான இந்த ஸ்மார்ட்போன்கள் இந்தியாவிலும் விரைவில் அறிமுகமாக இருக்கிறது.

Nokia X30 5G விலை

Nokia X30 5G விலை

Nokia X30 5G ஸ்மார்ட்போனானது Cloudy Blue மற்றும் Ice White வண்ண விருப்பத்தில் வெளியாகி இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 8 ஜிபி ரேம் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என்ற வேரியண்ட்கள் உடன் அறிமுகமாகி இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனின் அடிப்படை வேரியண்ட்டின் விலை 529 EUR (தோராயமாக ரூ.42,200) ஆக இருக்கிறது.

Nokia G60 5G விலை

Nokia G60 5G விலை

Nokia G60 5G ஸ்மார்ட்போனானது Pure Black மற்றும் Ice Grey என்ற வண்ண விருப்பத்தில் வெளியாகி இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் மூன்று வேரியண்ட்களில் அறிமுகமாகி இருக்கிறது. அது 4 ஜிபி ரேம் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 4 ஜிபி ரேம் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 6 ஜிபி ரேம் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆகும்.

இந்த ஸ்மார்ட்போனின் அடிப்படை வேரியண்ட் விலை 319 EUR (தோராயமாக ரூ.25,400) ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

Nokia C31 விலை

Nokia C31 விலை

Nokia C31 ஸ்மார்ட்போனானது Mint, Charcoal மற்றும் Cyan வண்ணங்களில் வெளியாகி இருக்கிறது.

3 ஜிபி ரேம் 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 4 ஜிபி ரேம் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 4 ஜிபி ரேம் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் என்ற வேரியண்ட்களில் அறிமுகமாகி உள்ளது.

இந்த ஸ்மார்ட்போனின் அடிப்படை வேரியண்ட் விலை 239 EUR (தோராயமாக ரூ.19,000) ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

Nokia X30 5G சிறப்பம்சங்கள்

Nokia X30 5G சிறப்பம்சங்கள்

 • 6.43 இன்ச் முழு HD+ AMOLED டிஸ்ப்ளே
 • (1,080×2,400 பிக்சல்கள்) தீர்மானம், 90Hz ரெஃப்ரஷிங் ரேட், 700 nits உச்ச பிரகாசம்
 • கார்னிங் கொரில்லா க்ளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
 • ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 5G SoC
 • 8GB ரேம், 256GB இன்டெர்னல் ஸ்டோரேஜ்
 • இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர்
 • ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் ஆதரவு
  • 50 எம்பி ஆட்டோ ஃபோகஸ் OIS, 13 எம்பி அல்ட்ரா வைட் கேமரா என டூயர் ரியர் கேமரா
  • முன்பக்கத்தில் 16 எம்பி செல்பி கேமரா
  • 4200mAh பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
  • ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்
  • Nokia G60 5G சிறப்பம்சங்கள்

   Nokia G60 5G சிறப்பம்சங்கள்

   • 6.58 இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளே
   • 120Hz ரெஃப்ரஷிங் ரேட், 1080×2400 பிக்சல்கள் தீர்மானம்
   • ஆக்டோ கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 SoC ஆதரவு
   • 1TB வரை மெமரி விரிவாக்கம் செய்யக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட்
   • 50 எம்பி பிரதான கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைட் ஷூட்டர் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் என டிரிபிள் ரியர் கேமரா
   • 8 எம்பி செல்பி கேமரா
   • ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்
   • 4500 எம்ஏஎச் பேட்டரி, 20 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
   • பவர் பட்டன் கைரேகை ஸ்கேனர்
   • Nokia C31 சிறப்பம்சங்கள்

    Nokia C31 சிறப்பம்சங்கள்

    • 6.7 இன்ச் HD+ டிஸ்ப்ளே
    • Octa-Core Unisoc SC9863A1 சிப்செட்
    • 256ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட்
    • 13 எம்பி முதன்மை கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் ஆட்டோஃபோகஸ் லென்ஸ் என டிரிபிள் ரியர் கேமரா
    • 5 எம்பி செல்பி கேமரா
    • ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்
    • 5050 எம்ஏஎச் பேட்டரி, 10 வாட்ஸ் சார்ஜிங்

Most Read Articles
Best Mobiles in India

English summary
Nokia Launched 3 Smartphones: Nokia X30 5G, G60 5G, C13 Price and Specs details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X