சீன கம்பெனிகளை சிதறவிட்ட NOKIA.. 24-இன்ச் முதல் 43-இன்ச் வரை.. 5 புதிய Google TV-கள் அறிமுகம்!
நோக்கியா (NOKIA) பிராண்டட் ஸ்மார்ட்போன்கள், சீன நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுடன் முட்டிமோதி, போராடி கொண்டிருக்கின்றன என்பதே நிதர்சனம். பல வகையான பட்ஜெட் பிரிவுகளின் கீழ் அறிமுகமானாலும் கூட "அந்த காலத்தில்" கிடைத்ததை போன்ற அதீத வரவேற்பு "இந்த காலத்து" நோக்கியா போன்களுக்கு கிடைக்கவில்லை!
இதற்கிடையில்.. ஸ்மார்ட்போன் சந்தையில் தான் போட்டிபோட முடியவில்லை, ஸ்மார்ட் டிவி சந்தையிலாவது சீன நிறுவனங்களுக்கு "கொஞ்சம் டஃப் கொடுப்போம்" என்று கூறுபடியாக, 24-இன்ச் முதல் 43-இன்ச் வரையிலான அளவுகளில் 5 புதிய நோக்கியா கூகுள் டிவிகள் (Nokia Google TV) அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

சரியாக 2 மாதங்களுக்கு முன்னர் நோக்கியா நிறுவனம் ஐந்து புதிய ஸ்மார்ட் டிவிகளில் வேலை செய்வதாக லீக்ஸ் தகவலொன்று வெளியானது. தற்போது அது உண்மையாகியுள்ளது. நோக்கியா பிராண்டட் ஸ்மார்ட் டிவிகளை (Nokia Branded Smart TVs) தயாரிக்கும் உரிமம் (license) பெற்ற பல நிறுவனங்களில் ஒன்றான ஸ்ட்ரீம்வியூ (StreamView) 5 புதிய நோக்கியா கூகுள் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது.
முன்னரே குறிப்பிட்டபடி இந்த புதிய நோக்கியா டிவிகள் பல டிஸ்பிளே அளவுகளில் (Display Sizes) மற்றும் இரண்டு வெவ்வேறு ஸ்க்ரீன் ரெசல்யூஷன்களில் (Screen Resolutions) வருகின்றன. நோக்கியாவின் புதிய கூகுள் டிவிகள் 24-இன்ச், 32-இன்ச், 40-இன்ச் அல்லது 43-இன்ச் என்கிற நான்கு அளவுகளில் அறிமுகமாகி உள்ளன.

24-இன்ச் மற்றும் 32-இன்ச் மாடல்கள் எச்டி (HD) ரெசல்யூஷனுடன் (1366 x 768 பிக்சல்ஸ்) வருகின்றன. இந்த மாடல்களில் 12V-ல் இயங்க முடியும். ஆகையால் சிறிய அளவிலான வீடுகள், கடைகள் மற்றும் குறைந்த மின்சாரம் உள்ள பிற இடங்களில் கூட இதை பயன்படுத்தப்படலாம்; 32-இன்ச், 40-இன்ச் மற்றும் 43-இன்ச் மாடல்கள் எஃப்எச்டி (FHD) ரெசல்யூஷனுடன் (1920 x 1080 பிக்சல்ஸ்) வருகின்றன.
ஆச்சரியப்படத்தக்க வகையில் இந்த ஸ்மார்ட் டிவிகள், வாய்ஸ் எனேபிள்டு ரிமோட் கண்ட்ரோல் (Voice Enabled Remote Control) மூலம் அனைத்து முன்னணி ஸ்ட்ரீமிங் சேவைகள் (Streaming services), கூகுள் க்ரோம்காஸ்ட் பில்ட்-இன் (Google Chromecast built-in) மற்றும் கூகுள் அசிஸ்டென்ட் (Google Assistant) ஆகியவற்றை ஆதரிக்கின்றன.

வயர்லெஸ் கனெக்ட்விட்டி (Wireless Connectivity) ஆப்ஷன்களை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட் டிவிகள் வைஃபை (WiFi) மற்றும் ப்ளூடூத் (Bluetooth) ஆகியவைகளை வழங்குகின்றன. போர்ட்களை (Ports) பொறுத்தவரை 3 x எச்டிஎம்ஐ 1.4, 2 x யுஎஸ்பி 2.0, 1 x எஸ்/பிடிஐஎஃப், ஏவி இன் (AV in), ட்ரிபிள் ட்யூனர் (Triple tuner) மற்றும் ஈதர்நெட் (Ethernet) போன்றவைகளை கொண்டுள்ளன.
பெயர் குறிப்பிடுவது போல, அனைத்து புதிய நோக்கியா கூகுள் டிவிகளுமே ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-ஐ (Android 12 OS) அடிப்படையாக கொண்ட கூகுள் டிவி சாஃப்ட்வேர் (Google TV Software) உடன் அனுப்பப்படுகின்றன. நினைவூட்டும் வண்ணம் நோக்கியாவின் முந்தைய டிவிகளில் கூகுளின் இந்த புதிய சாஃப்ட்வேர் இல்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும் அனைத்து புதிய மாடல்களும் ஒரே சிப்செட் மூலம் இயக்கப்படுகின்றன. பெயரிடப்படாத இந்த சிப்செட் 1.45 ஜிகாஹெர்ட்ஸ் மற்றும் மாலி-ஜி31 எம்பி2 ஜிபியு-வால் க்ளாக் செய்யப்பட்ட ஏஆர்எம் கோர்ட்டெக்ஸ்-ஏ55 கோர்களை உள்ளடக்கிய குவாட்-கோர் சிபியு-வை கொண்டுள்ளது மேற்கூறிய சிப்செட் 1.5ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
நோக்கியாவின் இந்த புதிய கூகுள் டிவிகளின் விலை நிர்ணயம் மற்றும் விற்பனை குறித்த விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும் இந்த நோக்கியா டிவிகள் எப்போது இந்தியாவில் அறிமுகமாகும் என்கிற (India Launch) விவரங்களும் தெரியவில்லை. இதுகுறித்த தகவல் ஏதேனும் கிடைத்தால், அது உடனுக்குடன் அப்டேட் செய்கிறோம்.


Click it and Unblock the Notifications








