நோக்கியா + ஏர்டெல் + பிஎஸ்என்எல் = இந்தியாவில் 5ஜி நெட்வர்க்.!

|

பின்னிஷ் நிறுவனமான நோக்கியா நிறுவனம் உலக மொபைல் சந்தையில் மறுபிரவேசம் செய்ய தன்னை மிக அழகாகத் தயார்படுத்திக்கொண்டுள்ளது. அதற்கு முக்கிய சான்றாய் அதன் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்கள் வெளியீட்டை எடுத்துக்காட்டாய் கூறலாம். அதுமட்டுமின்றி நோக்கியா நிறுவனம் பார்தி ஏர்டெல் மற்றும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (பிஎஸ்என்எல்) ஆகிய இரண்டு இந்திய நிறுவனங்களுடன் இணைந்து இந்தியாவில் 5ஜி இணைப்பை கொண்டுவர திட்டமிட்டுள்ளது.

நோக்கியா + ஏர்டெல் + பிஎஸ்என்எல் = இந்தியாவில் 5ஜி நெட்வர்க்.!

இதனை தொடர்ந்து நோக்கியா இந்தியாவின் தகவல்தொடர்பு ராட்சதர்கள் ஆன ஏர்டெல் மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய நிறுவங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது என்று அறிக்கை வெளியாகியுள்ளது.

சஞ்சய் மாலிக், நோக்கியா இந்தியாவின் சந்தை தலைவர் "இந்த உடன்படிக்கைகளுக்கு பின்னால் இந்தியாவில் 5ஜி இணையம் அறிமுகப்படுத்த தேவையான படிகள் உருவாகும் மற்றும் ஒரு 5ஜி பெறுவதற்கான ஆயத்தக் கட்டமும் ஏற்படும் என்று கூறியுள்ளார். 5ஜி சேவையானது 2020 வாக்கில் வளர்ந்த நாடுகளிலும் மற்றும் 2022-ல் இந்தியாவிலும் அறிமுகம் ஆகும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் 4ஜி ஊடுருவல்நல்ல நிலையில் உள்ளதால் இந்தியாவில் 5ஜி சேவை பின்பற்றல் நோக்கி அதிக ஆர்வம் கிளம்பியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

5ஜி சார்ந்த சில எதிர்மறையான கண்ணோட்டங்கள் இருக்கும் போதிலும் மறுபக்கம், மொபைல் நிறுவனங்கள், தொலைத் தொடர்பு ஆபரேட்டர்கள் மற்றும் மையங்கள், இந்தியாவில் 5ஜி சேவையை உறுதிப்படுத்தும் விதத்தில் வேலைகள் செய்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க :
ஜியோ 5ஜி சேவை : பிண்ணனியும், வியாபாரமும், ராஜ தந்திரமும்.!

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Nokia inks pacts with Airtel and BSNL to bring 5G network in India. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X