Redmi, Realme, Xiaomi-ஐ ஒரே ஒரு போனை வைத்து பதம் பார்த்த Nokia! இன்று முதல் Nokia C12 விற்பனை!
5000 விலை வரம்பிற்குள் ஒரு சூப்பர் ஸ்மார்ட்போன் வேண்டும் என்ற வேண்டுதல் யாருக்கு கேட்டுச்சோ இல்லையோ.. நோக்கியா நிறுவனத்திற்குக் கேட்டுவிட்டது என்று தான் கூற வேண்டும். மிகவும் கம்மி விலையில் நோக்கியா நிறுவனம் Nokia C12 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
நோக்கியா பிராண்டட் ஸ்மார்ட்போன்களை தயாரிப்பதற்கான உரிமத்தைப் பெற்றுள்ள HMD குளோபல் நிறுவனம், இந்த வார தொடக்கத்தில் நோக்கியா C12 (Nokia C12) என்ற ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதன் மூலம், நிறுவனம் தனது நுழைவு நிலை சாதன போர்ட்ஃபோலியோவை விரிவுபடுத்தியுள்ளது.

நோக்கிய பிராண்டின் தயாரிப்பு பட்டியலை விரிவுபடுத்தியது மட்டுமின்றி, இந்திய மக்களின் கவனத்தையும் நிறுவனம் கவர்ந்துள்ளது. மிகவும் குறைந்த விலையில் அடிப்படை வசதிகளுடன் இயங்கக் கூடிய பட்ஜெட் ஸ்மார்ட்போனைத் தேடுபவர்கள் இந்த Nokia C12 போனை தாராளமாக வாங்கலாம். இந்த Nokia C12 போன் இன்று முதல் (மார்ச் 17) அமேசான் இ-காமர்ஸ் மற்றும் நோக்கியா இணையதளம் வழியாக ஆன்லைனில் வாங்க கிடைக்கிறது.
இந்த புதிய Nokia C12 ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சிறப்பம்ச விபரங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம். Nokia C12 ஸ்மார்ட் போன் ஆனது 720 x 1600 பிக்சல் தீர்மானம் கொண்ட 6.3' இன்ச் HD+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே மேல் வாட்டர் ட்ராப் நாட்ச் வழங்கப்பட்டுள்ளது. இந்த Nokia C12 ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்ட ஆக்டா கோர் யூனிசாக் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

இந்த Nokia C12 போனில் 2ஜிபி விர்ச்சுவல் ரேம் ஆதரவும் உள்ளது. Nokia C12 ஸ்மார்ட் போனின் ஸ்டோரேஜ் அம்சம் பற்றி பேசுகையில், இது 64ஜிபி கொண்ட இன்டர்னல் ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது. கூடுதல் ஸ்டோரேஜ் விருப்பத்திற்காக நோக்கியா நிறுவனம் இந்த Nokia C12 ஸ்மார்ட் போன் சாதனத்தில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் அம்சமும் இடம்பெற்றுள்ளது.
கேமரா அம்சம் பற்றி பேசுகையில், Nokia C12 ஸ்மார்ட் போன் ஆனது பின்புறத்தில் 8MP சென்சாரை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், இந்த ஸ்மார்ட்போனில் செல்ஃபி மற்றும் வீடியோ சாட்களுக்கான 5MP கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. Nokia C12 ஒரு என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போன் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இது ஒரு தொடக்க நிலை சாதனம் என்பதனால், இது ஆண்ட்ராய்டு 12 கோ எடிஷன் இல் இயக்குகிறது.

Nokia C12 ஸ்மார்ட்போன் இரண்டு வருட காலாண்டு செக்யூரிட்டி அப்டேட்களைப் பெறும் என்றும் நிறுவனம் அறிவித்துள்ளது. நோக்கியா சி12 டிவைஸ் டூயல் சிம் ஸ்மார்ட்போன் ஆகும். இது 3000mah நீக்கக்கூடிய பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. ஸ்மார்ட்போன் IP52 மதிப்பீட்டுடன் வருகிறது. இது டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ப்ரூஃப் உடன் வருகிறது. Nokia C12 விலை பற்றி பேசுகையில், இதன் விலை உங்களை வியப்படைய செய்கிறது.
Nokia C12 இன் அறிமுக விற்பனை இப்போது நடைபெறுகிறது. வரையறுக்கப்பட்ட கால சலுகையின் ஒரு பகுதியாக, Nokia அதன் நுழைவு நிலை Nokia C12 ஸ்மார்ட்போனின் விலை 2GB RAM மற்றும் 64GB வேரியண்ட்டிற்கு ரூ.5,999 ஆக அறிவித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டார்க் சியான், சார்கோல் மற்றும் லைட் மிண்ட் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இந்த மலிவு விலை போனால் மற்ற பிராண்டுகளின் விற்பனை அடிவாங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications








