நோக்கியா அறிமுகம் செய்த மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன் Nokia G50.. உங்கள் பட்ஜெட்டில் வாங்க பெஸ்ட்டா?

|

எச்எம்டி குளோபல் நிறுவனம் தனது நோக்கியா ஸ்மார்ட்போன் பட்டியலில் புதிதாக நோக்கியா ஜி 50 5ஜி ஸ்மார்ட்போன் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது நோக்கியா பிராண்ட் உரிமம் பெற்ற எச்எம்டி குளோபலின் சமீபத்திய மலிவு விலை 5 ஜி போனாக இந்த புதிய நோக்கியா ஜி 50 (நேற்று) புதன்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்போன் என்ன விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிந்துகொள்ளலாம்.

புதிய நோக்கியா ஜி 50 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

புதிய நோக்கியா ஜி 50 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்

புதிய நோக்கியா ஜி 50 5ஜி ஸ்மார்ட் போன் சாதனம் வாட்டர் டிராப் ஸ்டைல் கொண்ட நாட்ச் ​​டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த நோக்கியா ஜி 50 5ஜி ஸ்மார்ட் போன் மூன்று பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. நோக்கியா ஜி 50 ஸ்மார்ட்போன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த நோக்கியா ஜி 50 5ஜி ஸ்மார்ட் போன் சாதனம் தற்போது, பிரிட்டன் சந்தைக்கு பிரத்தியேகமானது. இருப்பினும், இது காலப்போக்கில் மற்ற சந்தைகளில் கிடைக்க வாய்ப்புள்ளது.

நோக்கியா ஜி 20 ஸ்மார்ட்போனுக்கு அடுத்தபடியாக நோக்கியா ஜி 50 5ஜி

நோக்கியா ஜி 20 ஸ்மார்ட்போனுக்கு அடுத்தபடியாக நோக்கியா ஜி 50 5ஜி

இந்த புதிய நோக்கியா ஜி 50 5ஜி ஸ்மார்ட் போன் நோக்கியாவின் ஜி 10 மற்றும் நோக்கியா ஜி 20 ஸ்மார்ட் போன் மாடல்களுக்கு அடுத்த மாடலாக இந்த சாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நோக்கியா ஜி 20 ஸ்மார்ட் போன் என்பது நோக்கியாவின் ஜி சீரிஸில் நிறுவனம் அறிமுகம் செய்த மலிவு விலை 4ஜி ஸ்மார்ட் போனாகும். நோக்கியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள புதிய மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போனான நோக்கியா ஜி 50 ஸ்மார்ட் போனின் விலை பற்றி பார்க்கலாம்.

இறந்து 45 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் 'உயிர்' பெற்ற அதிசய பெண்.. உலக மருத்துவர்களே ஆச்சரியப்பட்ட நிகழ்வு..இறந்து 45 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் 'உயிர்' பெற்ற அதிசய பெண்.. உலக மருத்துவர்களே ஆச்சரியப்பட்ட நிகழ்வு..

நோக்கியா ஜி 50 ஸ்மார்ட்போனின் விலை என்ன?

நோக்கியா ஜி 50 ஸ்மார்ட்போனின் விலை என்ன?

நோக்கியா G50 ஸ்மார்ட்போனின் விலை 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் வெறியன்ட் உடன் வருகிறது. இதன் விலை GBP 199.99 என்ற விலையில் பிரிட்டனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின் படி, இது தோராயமாக ரூ. 20,100 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சாதனம் மிட்நைட் சன் மற்றும் ஓஷன் ப்ளூ நிறங்களில் வருகிறது. இது இங்கிலாந்தில் வாங்குவதற்கு கிடைக்கிறது. இந்தியா உள்ளிட்ட சந்தைகளில் நோக்கியா ஜி 50 அறிமுகம் பற்றிய விவரங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

நோக்கியா ஜி 50 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

நோக்கியா ஜி 50 5ஜி ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம்

நோக்கியா ஜி 50 5ஜி ஸ்மார்ட்போனின் 6.82' இன்ச் எச்டி பிளஸ் டிஸ்ப்ளே 450 நைட்ஸ் உச்ச பிரகாசத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 சிப்செட் மற்றும் 4 ஜிபி ரேம் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இல் இயங்குகிறது. நோக்கியா ஜி 50 மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவை அடங்கும்.

இறப்பதற்கு முன்பே கணித்த ஸ்டீபன் ஹாக்கிங்: 47 ஆண்டுக்குப் பிறகு நிரூபிக்கப்பட்ட கருந்துளை ரகசியம்.! உண்மையா?இறப்பதற்கு முன்பே கணித்த ஸ்டீபன் ஹாக்கிங்: 47 ஆண்டுக்குப் பிறகு நிரூபிக்கப்பட்ட கருந்துளை ரகசியம்.! உண்மையா?

நோக்கியா G50 கேமரா அம்சம்

நோக்கியா G50 கேமரா அம்சம்

செல்ஃபி மற்றும் வீடியோ சாட்களுக்காக, நோக்கியா G50 முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா சென்சாருடன் வருகிறது. நோக்கியா ஜி 50 ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜ் பற்றி பார்க்கையில், இது 64 ஜிபி உள் சேமிப்பை ஆதரிக்கிறது. கூடுதல் ஸ்டோரேஜ் சேவைக்காக இந்த சாதனம் மைக்ரோ எஸ்டி கார்டு 512 ஜிபி வரை விரிவாக்கத்தை ஆதரிக்கிறது. இணைப்பு விருப்பங்களில் இது 5ஜி, 4ஜி LTE, Wi-Fi 802.11ac, ப்ளூடூத் v5.0, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட் ஆகியவற்றை ஆதரிக்கிறது.

பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரி

பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5,000 எம்ஏஎச் பேட்டரி

ஸ்மார்ட்போனின் போர்டில் உள்ள சென்சார்களில் ஆக்ஸிலரோமீட்டர், சுற்றுப்புற ஒளி, கைரோஸ்கோப், மேக்னடோமீட்டர் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் ஆகியவை அடங்கும். போனில் பயனர் பாதுகாப்பிற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. எச்எம்டி குளோபல் நோக்கியா ஜி 50 இல் 5,000 எம்ஏஎச் பேட்டரியை 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வழங்கியுள்ளது. இந்த சாதனம் 173.83x77.68x8.85 மிமீ மற்றும் 220 கிராம் எடை கொண்டது என்று நோக்கியா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Nokia G50 With Triple Rear Cameras And Snapdragon 480 SoC Launched : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X