ரூ.11,999 தள்ளுபடி விலையில் 16GB ரேம்.. 256GB ஸ்டோரேஜ்.. 50MP கேமரா.. அதிரவிடும் Nokia போன்..
இந்தியாவில், அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல்ஸ் (Amazon Great Indian Festival Sales 2023) சிறப்பு விற்பனை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விற்பனையில் பல தயாரிப்புகளின் மீது தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் ஒரு சூப்பர் ஹாட் சலுகையாக, நோக்கியா பிராண்டின் கீழ் இந்த ஆண்டில் அதிக மக்களின் கவனத்தை வென்ற நோக்கியா ஜி42 5ஜி (Nokia G42 5G) மாடல் மீது அதிரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் செப்டம்பர் 11 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப் மூலம் இயக்கப்படும் சாதனமாகும்.

இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் முன்பு ஒற்றை ஸ்டோரேஜ் விருப்பத்துடன் கிடைத்தது. இருப்பினும், நிறுவனம் இப்போது இந்த நோக்கியா ஜி42 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை இரண்டாவது ஸ்டோரேஜ் விருப்பத்துடன் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்போது இது ஒரு புதிய வண்ண வகையும் சேர்த்துள்ளது. Nokia நிறுவனம் நோக்கியா C32 மடலுக்கான மூன்றாவது ஸ்டோரேஜ் மாடலையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நோக்கியா போனின் விலை என்ன?
இதன் 12GB + 128GB ஸ்டோரேஜ் மாடடாள் விருப்பம் ரூ. 10,499 விலையில் வருகிறது. நோக்கியா சி32 முதலில் மே மாதம் 2023-ல் இந்தியாவில் வெளியிடப்பட்டது. சரி இப்போது, இந்தியாவில் நோக்கியா ஜி42 5ஜி மாடலின் விலை என்னவென்று பார்க்கலாம். இதன் 6GB + 128GB மாடல இந்தியாவில் ரூ.11,999 விலையில் வருகிறது. இதற்கிடையில், புதிய 16GB + 256GB மாறுபாட்டின் விலை ரூ. 16,999 ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
குறிப்பிடத்தக்க வகையில், 16ஜிபி ரேம் மாடலில் 8ஜிபி ஃபிசிக்கல் ரேம் (physical RAM) மற்றும் மற்றொரு 8ஜிபி விர்ச்சுவல் ரேம் (Virtual RAM) கொண்டுள்ளது. 6ஜிபி மாறுபாடு 11 ஜிபி ரேம் வரை கிட்டத்தட்ட விரிவாக்கப்படலாம். இந்த போன் இந்தியாவில் மூன்று வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது. இது சோ கிரே (So Grey), சோ பிங்க் (So Pink) மற்றும் சோ பர்பில் (So Purple) நிறங்களில் வருகிறது.
நோக்கியா ஜி42 5ஜி சிறப்பம்சம் (Nokia G42 5G Specifications):
அதிகாரப்பூர்வ நோக்கியா இணையதளம் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் மூலம் அக்டோபர் 18 முதல் வாங்குவதற்கு இது கிடைக்கும். நோக்கியா ஜி42 5ஜி சிறப்பம்சத்தை பற்றி பார்க்கையில், இது 6.56' இன்ச் HD+ கொண்ட 720 x 1,612 பிக்சல்கள் உடைய LCD டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 90Hz ரெஃப்ரஷ் ரேட் வீதம், 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்புடன் வருகிறது.

இந்த ஃபோன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480+ சிப்செட் (Snapdragon 480+ 5G) மூலம் இயக்கப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு 13 (android 13) உடன் வருகிறது. இது டிரிபிள் ரியர் கேமரா (triple rear camera) அமைப்பை 50 மெகாபிக்சல் பிரைமரி ரியர் சென்சார் மற்றும் எல்இடி ஃபிளாஷ் யூனிட்டுடன் டூயல் 2 மெகாபிக்சல் சென்சாருடன் வருகிறது. இது 8 மெகாபிக்சல் முன்பக்க சென்சாரை கொண்டுள்ளது.
நோக்கியா G42 5G ஆனது USB Type-C போர்ட் வழியாக 20W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் (wired charging) ஆதரவுடன் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது 5G, GPS, Bluetooth 5.1 மற்றும் Wi-Fi 802.11 இணைப்புகளையும் ஆதரிக்கிறது. பாதுகாப்பிற்காக, இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உடன் வருகிறது. இது இப்போது அமேசான் சிறப்பு விற்பனையில் 25% தள்ளுபடியுடன் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








