இந்த Nokia போனே போதும்னு சொல்லுவீங்க! ஏன்னா டிசைன் அப்படி இருக்கும்!
நோக்கியா (Nokia) போன் பிரியர்களுக்காகவே மலிவான விலையில் களமிறங்க இருக்கும் நோக்கியா ஜி310 (Nokia G310 5G) மற்றும் நோக்கியா ஜி42 5ஜி (Nokia G42 5G) ஆகிய மாடல்களின் அட்டகாசமான அம்சங்கள் லீக்காகி இருக்கின்றன. இதுகுறித்த முழு விவரம் இதோ.
நோக்கியா போன்களுக்கான வரவேற்பானது, எப்போதும் குறைந்துவிடாது என்பதை அதன் புதிய போன்களுக்காக காத்திருக்கும் மக்களின் மூலம் நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது. ஏனென்றால், நோக்கியா போன்கள் தரத்துக்கு பெயர் பெற்றவை. சொல்லப்போனால், இன்றளவும் இந்த நோக்கியா போன்கள் மீதான மதிப்பும், ஆர்வமும் அதன் பயனர்களுக்கு துளியும் குறையவில்லை என்பதே உண்மை.

இதனாலேயே நோக்கிய நிறுவனம், புதுப்புது போன்களின் மூலம் விட்ட இடத்தைப் பிடிக்க முயற்சி செய்து வருகிறது. அட்டகாசமான டிசைன்களிலும், பின்னியெடுக்கும் கேமரா கொண்டும் அதன் போன்களை உருவாக்கி வருகிறது. இந்தியாவில் மலிவான விலையில் வெளியாகும் போன்கள் மிகப்பெரும் வரவேற்பை பெறும் என்பதால், நோக்கியா ஜி310 மற்றும் நோக்கியா ஜி42 5ஜி ஆகிய மாடல்களை விரைவில் களமிறக்க திட்டமிட்டு வருகிறது.
இந்த போன்களின் அம்சங்கள் கசிந்துள்ளன. 6.5 இன்ச் எச்டிபிளஸ் டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் 5ஜி சிப்செட் என்று அம்சங்களில் அசத்துகிறது. இந்த போனின் கேமரா அம்சங்களும் ஆப்பிள் போன்களுக்கு நிகராக இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த நேரத்தில் கசிந்துள்ள அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
இந்த நோக்கியா ஜி42 மற்றும் ஜி310 போன்கள் 6.5 இன்ச் ( 720 x 1612 பிக்சல்கள்) எச்டிபிளஸ் எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளன. இந்த டிஸ்பிளே வி-ஷேப்ட் செல்பீ கேமரா டிசைனில் உருவாக்கப்பட்டுள்ளது. அதில் 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 560 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு வருகிறது.
இந்த போன்கள் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) உடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் 5ஜி (Qualcomm Snapdragon 480 Plus 5G) சிப்கெட் கொண்டுள்ளன. 4 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 6 ஜிபி + 128 ஜிபி ஸ்டோரேஜ் என்று விற்பனைக்கு வரவிருக்கிறது. இதில் நோக்கியா ஜி 42 போன் பர்பிள் (Purple) மற்றும் கிரே (Grey) கலர்களில் வெளியாகும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த போன்களின் விலையை பொறுத்தவரையில் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரத்துக்குள் விற்பனைக்கு வர வாய்ப்புள்ளது. அடுத்த சில வாரங்களில் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படலாம். இந்த போன்களின் மற்ற அம்சங்கள் குறித்த தகவல்கள் வெளியாவில்லை.
ஆனால், நோக்கியா போன்களில் கிடைக்கும் தரம் சற்றும் குறையாது என்பதில் சந்தேகமில்லை. மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications