ரூ.12,999-க்கு இந்தியாவில் புது நோக்கியா ஜி21- 50 எம்பி டிரிபிள் கேமரா,ஒரே சார்ஜ் மூன்று நாள் பேட்டரி ஆயுள்!

|

நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனானது டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு, 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே உடன் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சாதனத்தின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம். நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனானது இரண்டு வெவ்வேறு வேரியண்ட்களில் வாங்குவதற்கு கிடைக்கிறது.

நோக்கியா புது ஸ்மார்ட்போன்

நோக்கியா புது ஸ்மார்ட்போன்

நோக்கியா ஜி தொடரின் கீழ் புது ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய நோக்கியா சாதனம் ஒரே சார்ஜில் மூன்று நாட்கள் பேட்டரி ஆயுளை வழங்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது டிரிபிள் ரியர் கேமராக்கள் மற்றும் வாட்டர் டிராப் ஸ்டைல் டிஸ்ப்ளே நாட்ச் உள்ளிட்ட அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. நோக்கியா ஜி21 சாதனமானது 128 ஜிபி வரையிலான உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இது இரண்டு வருட ஓஎஸ் மேம்படுத்தல்கள் மற்றும் இரண்டு மடங்கு அதிக பாதுகாப்பு புதுப்பிப்புகளை பெறுவதாக உறுதியளிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல் நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனானது ரெட்மி நோட் 11, ரியல்மி 9ஐ போன்ற சாதனங்களுக்கு இணை போட்டியாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்திய விலை மற்றும் கிடைக்கும் தன்மை

இந்திய விலை மற்றும் கிடைக்கும் தன்மை

நோக்கியா ஜி21 சாதனம் இந்திய விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கலாம். நோக்கியா ஜி21 சாதனம் இந்தியாவில் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் கிடைக்கிறது. அடிப்படை மாடலான இதன் விலை ரூ.12,999 ஆக இருக்கிறது. அதேபோல் இந்த சாதனம் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் கிடைக்கிறது. இந்த வேரியண்ட் விலை ரூ.14,999 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனானது டஸ்க் மற்றும் நோர்டிக் ப்ளூ வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த சாதனம் நோக்கியா.காம் மூலம் வாங்குவதற்கு கிடைக்கிறது. அதேபோல் தேர்ந்தெடுக்கப்பட்ட சில்லறை கடைகள் மற்றும் முக்கிய இ-காமர்ஸ் தளங்கள் மூலமாகவும் இந்த சாதனம் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நோக்கியா ஜி21 சாதனத்தை வாங்கும் வாடிக்கையாளர்கள் பஜாஜ் ஃபின்சர்வ்-ல் இருந்து ஜீரோ ஃபைனான்ஸ் சலுகையை பெறலாம்.

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்

4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட்

பிப்ரவரி மாதம் நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போன் ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.16,700 என ரஷ்யாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்தியாவில் நோக்கியா ஜி21 சாதனத்துடன் எச்எம்டி குளோபல் நோக்கியா 105 (2022), நோக்கியா 105 பிளஸ் அம்சத் தொலைபேசிகள் மற்றும் நோக்கியா கம்ஃபோர்ட் இயர்பட்ஸ் மற்றும் கோ இயர்பட்ஸ்+ ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நோக்கியா ஜி21 சிறப்பம்சங்கள்

நோக்கியா ஜி21 சிறப்பம்சங்கள்

நோக்கிாய ஜி21 சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், நோக்கியா ஜி21 சாதனமானது ஆண்ட்ராய்டு 11 ஆதரவு மற்றும் 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் (720x1,600 பிக்சல்கள்) டிஸ்ப்ளே ஆதரவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 20:9 விகிதத்துடன், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனானது 180 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகித்ததுடன் வருகிறது. இந்த சாதனம் 400 நிட்ஸ் உச்ச பிரகாச நிலையைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் ஆக்டோ கோர் யூனிசோக் டி606 எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது. இந்த சாதனம் 6ஜிபி வரை ரேம் வசதியைக் கொண்டுள்ளது.

நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்

நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள்

நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் 50 எம்பி முதன்மை கேமரா உடன் டிரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த சாதனத்தில் 2 எம்பி மேக்ரோ ஷூட்டர் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் ஆதரவைக் கொண்டிருக்கிறது. செல்பி மற்றும் வீடியோ வசதிகளுக்கு என இந்த நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8 எம்பி செல்பி கேமரா வசதி இருக்கிறது. மேலும் இந்த சாதனத்தில் மெமரி விரிவாக்க வசதிக்கு என 512 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி இருக்கிறது.

5050 எம்ஏஎச் பேட்டரி

5050 எம்ஏஎச் பேட்டரி

நோக்கியா ஜி21 சாதனத்தில் இணைப்பு ஆதரவுகளுக்கு என 4ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி5.0, எஃப்எம் ரேடியோ, யூஎஸ்பி டைப்சி போர்ட் ஆகிய ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு வசதிக்கு என பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் வசதி இருக்கிறது. நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனானது ஓசோ ஸ்பேஷியல் ஆடியோ பதிப்பு ஆதரவுடன் வருகிறது. இந்த இரண்டு மைக்ரோபோன்கள் உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் 18 வாட்ஸ் வேகமான சார்ஜிங் ஆதரவுடன் 5050 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Nokia G21 Smartphone Launched in India With 50MP Triple Rear Camera, Android 11 and More

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X