நோக்கியா ஜி21 வடிவமைப்பு இப்படிதான் இருக்கும்- வெளியான சுவாரஸ்ய அம்சங்கள்., விலை கம்மிதான்!
நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனானது அறிமுகமாவதற்கு முன்னதாகவே இதன் வடிவமைப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போன்
நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனானது அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு முன்னதாகவே இந்தியாவின் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனானது தனித்துவமான வடிவமைப்பு மற்றும் அம்சங்களை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. சாதனத்தின் புதிய ரெண்டர்கள் மற்றும் இன்ஸ்டாகிராமின் புதிய வீடியோ மூலம் நோக்கியா ஜி21 சாதனத்தின் ஸ்னீக் பீக் வெளியாகி இருக்கிறது. இதில் சாதனத்தின் கேமரா தொகுதி, பின் பேனல் பூச்சு மற்றும் வண்ண விவரம் உள்ளிட்டவைகள் ஸ்மார்ட்போனின் பல்வேறு விவரக்குறிப்புகள் ரெண்டர்கள் மூலம் வெளியாகியுள்ளன.

நோக்கியா ஜி21 வடிவமைப்பு
நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனானது அறிமுகமாவதற்கு முன்னதாகவே இதன் வடிவமைப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம். ரோலண்ட் குவாண்ட் டுவிட்டரில் நோக்கியா ஜி21 சாதனத்தின் புதிய ரெண்டர் புகைப்படங்களையும், தொலைபேசியின் முன்புறம் மற்றும் பின்புறத்தை காட்டும் புதிய வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளன. இரண்டு அறிக்கைகளும் கடந்த ஆண்டு சந்தையில் வந்த நோக்கியா ஜி20 சாதனத்தின் வேறுபட்ட வடிவமைப்பைகக் கொண்டிருக்கின்றன. பின்புறத்தில் வட்ட வடிவ கேமரா தொகுதிக்கு பதிலாக செவ்வக வடிவ கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. ஜி20 சாதனம் குவாட் கேமரா அமைப்பு மட்டுமின்றி சில லென்ஸ்களின் தொகுதிகளை கொண்டிருக்கிறது.

விரைவில் வெளியாகும் என தகவல்
நோக்கியா ஜி20 சாதனத்தின் அடுத்தக் கட்டமாக நோக்கியா ஜி21 வரவிருக்கிறது. நோக்கியா ஜி21 கீக்பெஞ்சில் காணப்பட்டது. இது விரைவில் வெளியாகும் என்ற தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்த சாதனத்தின் எதிர்பார்க்கப்படும் விவரக்குறிப்புகள் குறித்த பல்வேறு வதந்தித் தகவல்கள் வெளியாகி வருகின்றன. எச்எம்டி நிறுவனம் இந்த மாதம் நோக்கியா ஜி21 சாதனத்தை இந்தியாவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கைரேகை ஸ்கேனர் பட்டன்
ஸ்மார்ட்போன்கள் பட்டன்கள் எங்கு வைக்கப்பட்டிருக்கிறது என்ற ரெண்டர் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆற்றல் பட்டன் இடது புறத்திலும், ஒலிஅமைப்பு கட்டுப்பாடுகள் வலதுபுறத்திலும் உள்ளன. ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு கைரேகை ஸ்கேனர் நேரத்தியாக ஃப்ரேமின் கீழ் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் யூஎஸ்பி டைப் சி போர்ட் இணைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

நோக்கியா ஜி21 விவரக்குறிப்புகள்
நோக்கியா ஜி21 சாதனத்தின் புதிய கேமரா தொகுதி குறித்து பார்க்கையில் இது 50 எம்பி முதன்மை கேமரா, இரண்டு 2 எம்பி சென்சார்கள் பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 13 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் ஃபாஸ்ட் சார்ஜிங் திறன் குறித்து பார்க்கையில் இது 5050 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் கோடிட்ட பூச்சு இருக்கும் எனவும் வாட்டர் டிராப் நாட்ச் வடிமவைப்பைத் தவிர பிற அமைப்புகள் நோக்கியா ஜி20 சாதனத்தை போன்ற வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே
நோக்கியாவின் இந்த சாதனத்தில் 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் 1600 x 700 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் 20:9 விகிதத்தோடு இது வரும் எனவும் கூறப்படுகிறது. இது யூனிசோக்-ன் டி606 சிப்செட் அடிப்படையிலான 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் என கூறப்படுகிறது. இது மைக்ரோ எஸ்டி கார்ட் ஆதரவோடு வரும் என கூறப்படுகிறது. நோக்கியா ஜி20 போன்றே இந்த சாதனமும் ரூ.20,000 என்ற ஆரம்ப விலையை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்தியாவில் இந்த சாதனம் பிப்ரவரி 9 ஆம் தேதி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications