Home
News

உடனே வாங்கலாம்: தள்ளுபடினா அது இதுதான்- வெறும் ரூ.9,990-ல் கிடைக்கும் நோக்கியா ஜி20: கலக்கல் அம்சங்கள் பாஸ்!

சில மாதங்களுக்கு முன்பு எச்எம்டி குளோபல் மற்றொரு மலிவு விலை ஸ்மார்ட்போனினை வெளியிட்டது. அது நோக்கியா ஜி20 சாதனம் ஆகும். இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது அதன் விலை பிரிவில் கிடைக்கும் பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் காணப்படும் நிலையான வடிவமைப்புடன் வருகிறது. நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனானது தொடங்கப்பட்ட போது ரூ.12,999 என நிர்ணயிக்கப்பட்டது. பின் விலை உயர்வு அறிவிக்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.13,500 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆன்லைன் சில்லறை விற்பனையாளரான அமேசான் தளமாக மூலமாக தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.

நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன்

நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன்

நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனானது தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த விலை குறித்து பார்க்கையில் இது குறிப்பிட்ட காலத்திற்கு ரூ.9990 என கிடைக்கிறது. ஆன்லைன் சில்லறை விற்பனையாளருக்கு தள்ளுபடி கூப்பன் வழங்கப்படுகிறது. கூப்பனை பயன்படுத்தும் போது ரூ.2500 விலைக்குறைப்பை பெறுகிறது. ஸ்மார்ட்போனை வாங்க திட்டமிட்டு அதை வாங்குவதற்கு முன்னதாக இந்த கூப்பனை பயன்படுத்த வேண்டும். இந்த ஸ்மார்ட்போனானது ப்ளூ மற்றும் சில்வர் என இரண்டு வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது.

மீடியாடெக் ஹீலியோ G35 சிப்செட்

மீடியாடெக் ஹீலியோ G35 சிப்செட்

6.5' இன்ச் அளவு கொண்ட எச்டி பிளஸ் டிஸ்பிளேவை வழங்குகிறது. இந்த புதிய சாதனம் மீடியாடெக் ஹீலியோ G35 சிப்செட் உடன் 4 ஜிபி ரேம் வசதியில் இயங்குகிறது. இது 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி மேக்ரோ, 2 எம்பி டெப்த் லென்ஸ் கொண்ட குவாட் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. அதேபோல், முன்பக்கத்தில் செல்பி மற்றும் வீடியோ அழைப்பு அறிவுக்காக 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

வி-நாட்ச் டிஸ்ப்ளே வசதி

வி-நாட்ச் டிஸ்ப்ளே வசதி

6.52' இன்ச் 1600 x 720 பிக்சல் கொண்ட எச்டி பிளஸ் 20:9 வி-நாட்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இது 2.3GHz ஆக்டாகோர் மீடியாடெக் ஹீலியோ G35 பிராசஸர் மூலம் இயங்குகிறது. இதில் IMG PowerVR GE8320 குபு உடன் 4 ஜிபி LPDDR4x ரேம் வழங்கப்பட்டுள்ளது. எஸ்டி கார்டு மூலமாக ஸ்டோரேஜ்ஜை நீடிக்கும் வசதியையும் இந்த சாதனம் ஆதரிக்கிறது. இது 64 ஜிபி மற்றும் 128 ஜிபி கொண்ட இரண்டு ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல்களாக அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 11 இயங்குதள ஆதரவு

ஆண்ட்ராய்டு 11 இயங்குதள ஆதரவு

இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் இயங்கக் கூடியது, இதில் 48 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி அல்ட்ரா வைடு சென்சார், 2 எம்பி டெப்த் சென்சார் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் கொண்ட குவாட் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இதில் 8 எம்பி செல்பி கேமரா வீடியோ கால் அழைப்பு மற்றும் செல்பி அனுபவத்திற்காக வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் இந்த சாதனம் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உடன் வருகிறது. இணைப்பு விருப்பங்களைப் பொறுத்த வரையில் இந்த ஸ்மார்ட்போன் 3.5mm ஆடியோ ஜாக், FM ரேடியோ, கூகுள் அசிஸ்டண்ட், டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி போன்ற அம்சங்களுடன் வருகிறது. இந்த நோக்கியா ஜி 20 ஸ்மார்ட்போன் 5050 எம்ஏஎச் பேட்டரி உடன் 10w சார்ஜிங் ஆதரவை ஆதரிக்கிறது.

Best Mobiles in India

English summary
Nokia G20 Smartphone Gets Rs.2500 Discount in Amazon: Discount Coupon Available
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X