Home
News

5050 எம்ஏஎச் பேட்டரியுடன் நோக்கியா ஜி11 ஸ்மார்ட்போன் அறிமுகம்! முழு விவரம்.!

எச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா ஜி11 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளிவந்துள்ளது. குறிப்பாக நோக்கியா ஜி11 மாடல் ஆனது
மார்ச் முதல் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இங்கிலாந்து சந்தைகளில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு அனைத்து நாடுகளிலும் இந்த சாதனம் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட நோக்கியா ஜி11 ஸ்மார்ட்போன் மாடலின் விலை €159 (இந்திய மதிப்பில் ரூ.13,000)ஆக உள்ளது. குறிப்பாக ஐஸ் புளூ மற்றும் சார்கோல் கிரே நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நோக்கியா ஜி11 ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச்

நோக்கியா ஜி11 ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் 180ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 720x1,600 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்மாடல் வெளிவந்துள்ளது.

நோக்கியா ஜி11 ஸ்மார்ட்போனில் Unisoc

இந்த நோக்கியா ஜி11 ஸ்மார்ட்போனில் Unisoc T606 SoC சிப்செட் வசதி உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும்அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்மாடல் வெளிவந்துள்ளது.

நோக்கியா ஜி11 ஸ்மார்ட்போன்

நோக்கியா ஜி11 ஸ்மார்ட்போன் மாடல் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரியைக் கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதாவது நிங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

நோக்கியா ஜி11 ஸ்மார்ட்போனின் பின்புறம்

நோக்கியா ஜி11 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர எல்இடி பிளாஸ், கேமரா அம்சங்கள் எனப் பலசிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

 5050 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ள

நோக்கியா ஜி11 ஸ்மார்ட்போனில் 5050 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு10 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி,கைரேகை சென்சார் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.

4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி5.0,

4ஜி எல்டிஇ, வைஃபை 802.11ஏசி, புளூடூத் வி5.0, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் அதிகளவில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Nokia G11 With Triple Rear Cameras Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X